Published:Updated:

ஐடியா அய்யனாரு!

`ரஷ்ய அதிபர் புதினும் இந்தியப் பிரதமர் மோடியும் ஜல்லிக்கட்டு பார்க்க மதுரைக்கு வரவிருக்கிறார்கள்’ எனக் கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வாட்ஸ் அப் வதந்தி யாளர்கள். வதந்தி ஒருவேளை உண்மையானால் என்னவெல்லாம் நடக்கும் என சீரியஸாகச் சிந்தித்துப்பார்க்கிறான் இந்த அய்யனாரு!

பிரீமியம் ஸ்டோரி

பா.ஜ.க-வின் அதிகாரபூர்வ பேனர் வைக்கும் படையினரான அ.தி.மு.க-வினர், முதல் வேலையாக பேனர் வைக்க அனுமதி வாங்குவார்கள். `காவிரியை வெச்சிக்க... அம்மாவைக் கொடு’ புகழ் கிரம்மர் சுரேஷ், `விளையாடிப்பார்ப்போமா விளாடியே!’ `புதிர் அவிழ்க்க வா புதினே!’ என பேனர் வைத்து லந்துகொடுப்பார்.

கோனார் கடை மட்டன்கறி-தோசை, ஜிகர்தண்டா, மல்லிகைப்பூ இட்லி என உணவு மெனுவில் மதுரை கமகமக்கும். வைகை கரையோரம் புதினைக் கூட்டிச்சென்று, ‘ஈசனைப் போல் மண் சுமந்தால் குழாப்புட்டு கொடுப்பேன்’ என்று புராணக் கதைகளை எடுத்துவிடலாம். அப்படியே அழகர் கோயில் தாண்டி பழமுதிர்சோலைக்கு புதினைக் கூட்டிச்சென்று `சுட்ட பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமா?’ என்று கலாய்த்துக் குஷிப்படுத்தலாம்.

ஐடியா அய்யனாரு!
ஐடியா அய்யனாரு!

மாமல்லபுரத்தில் கடற்கரையைச் சுத்தம் செய்ததுபோல், வைகை ஆற்றில் இறங்கி சுத்தம் செய்வார் மோடி. அங்கு கபடி விளையாடும் சிறுவர்களுடன் இணைந்து புதினும் மோடியும் கபடி விளையாடுவார்கள். மோடி தன் சிறுவயதில் முதலையைப் பிடித்த கதை ஒன்று இருக்கிறது. அதை மறுபடியும் ரீமேக் செய்யும் வகையில், வைகையில் இறங்கியபோது காலில் முதலை ஒன்று தட்டுப்பட்டதாகவும், அதைப் பக்குவமாய் எடுத்துக்கொண்டு போய் தெப்பக்குளத்தில் விட்டதாகவும் அடித்துவிடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“யானைமலை பார்த்தீங்களா, பார்க்க யானை மாதிரியே இருக்கும். நாகமலை பார்த்தீங்களா, பார்க்க நீளமா பாம்பு மாதிரியே இருக்கும். ஆனா, இந்தப் பசுமலை மட்டும் பசுமாடு மாதிரி இருக்காது. என்ன காரணம்? பசுக்களுக்கு நம் நாட்டுல பாதுகாப்பே கிடையாது” என உள்ளூர் மேட்டரை உலக மேட்டருடன் குழப்பியடித்து நீண்ட உரை ஒன்றும் நிகழ்த்துவார் மோடிஜி.

செல்லூரார் இல்லாமலா... அடித்துப்பெய்யும் வடகிழக்குப் பருவமழையில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. புதினையும் மோடியையும் நேராக வைகை அணைக்கு அழைத்துச் சென்று ராட்சச தெர்மாகோல்களால் செய்யப்பட்ட படகில் அணையைச் சுற்றிப்பார்க்கச் செய்வார் செல்லூரார். பேக்கிரவுண்டில், ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்... நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்...’ என்ற பாடல் ஒலிக்க, எடப்பாடியார் கரையில் இருந்து பயங்கரமாகச் சிரித்தால்... லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு