சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

காவி பிலிம்ஸ் வழங்கும் ‘தாமரை மலருமா?’ - திகில் படம்

தாமரை மலருமா
பிரீமியம் ஸ்டோரி
News
தாமரை மலருமா

ஹாய் மச்சான்ஸ்... அக்கா அண்ணீஸ்... அண்ணாஸ் தாத்தாஸ்! நம்ம வீடு பிக்பாஸ் வீடுமாதிரியே கியூட்டா இருக்கு. டாமரை மல்லாந்துரும்!

‘இது வீடு இல்ல... விக்ரமன் சார் படம்’ன்னு சந்தானம் சொல்றமாதிரி ஆகிப்போச்சு தமிழக பா.ஜ.க-வோட பிரபலங்கள் லிஸ்ட்!

குஷ்பு, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம், ராதாரவி, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா, ஆர்.கே.சுரேஷ், பேரரசு, குட்டி பத்மினி, எஸ்.வி.சேகர், மதுவந்தி, பொன்னம்பலம், பவர் ஸ்டார் சீனிவாசன், இசையமைப்பாளர் தினா, தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன்... ஆஹா ஓஹோ ஏஹேவென லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கிறது. நிஜமாவே ஒரு சினிமா எடுத்திடலாம்போல... இவங்க எல்லாத்தையும் ஒண்ணா ஒரே வீட்டுல வெச்சுப் படம் எடுத்தா யார் யாருக்கு என்ன ரோல்னு படத்தைப் பார்த்து சிரிச்சிக்கோங்க... ஸாரி தெரிஞ்சுக்கோங்க!

`லேடி நாட்டாமை’ குஷ்பு : நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லுன்னு எங்கிட்ட மனசாட்சி சொன்னுச்சுங்க. இப்ப நான்தான் இந்தக் தாமரைக்குளம் கிராமத்தோட நாட்டாமை...இந்த வீட்டோட புது மருமகள். ஊரையும் வீட்டையும் காப்பாத்தணும், அடிச்சோட்ரா வண்டிய!

`மச்சி’ நமீதா : ஹாய் மச்சான்ஸ்... அக்கா அண்ணீஸ்... அண்ணாஸ் தாத்தாஸ்! நம்ம வீடு பிக்பாஸ் வீடுமாதிரியே கியூட்டா இருக்கு. டாமரை மல்லாந்துரும்!

காவி பிலிம்ஸ் வழங்கும் ‘தாமரை மலருமா?’ - திகில் படம்

`டான்ஸிங் டெவில்’ காயத்ரி ரகுராம் : பிக்பாஸ் வீட்டை ஞாபகப்படுத்தாதே நமீ. எனக்கு முகத்துல பிம்பிள்ஸ் வந்துரும்! நான் யார்கூடவும் ஹவுஸ்மேட்டா இருக்க மாட்டேன். சுயமா தனியா வாழப்போறேன்!

’ஆங்ரி பேர்டு’ கௌதமி : யாருமே சுயம்புலிங்கம் கெடையாது. பாபநாசம் கொலநாசம்னு சொன்னா சென்ஸார்ல கட் பண்ண மாட்டாங்க. ஏன்னா நானே சென்ஸார்லதானே இருக்கேன்!

`ரவுசு சித்தப்பு’ ராதாரவி: கூட்டிக் கழிச்சிப் பார்த்தா ஆட்டுக்கார அண்ணாமலையோட கணக்கு சரியாத்தான் இருக்கு தம்பி! இன்னிக்கு பிரியாணி போட்ரலாம்!

`புலம்பல் மாமா’ பொன்னம்பலம் : ஆமாண்ணே... நான் இப்ப வில்லத்தனம் பண்ணாம காமெடி பண்ணுறதால வெஜிடேரியனா போட்டு கொல்லுறாய்ங்கண்ணே! குடலு... ஆங் டொய்ங் டொய்ங்!

`கிராமமா, நகரமா’ கங்கை அமரன் :

ஏன் எல்லோரும் டல்லா இருக்கீங்க? பேமிலின்னா கலகலனு பார்ட்டி கொண்டாட வேணாம்? வேணும்னா பிரேம்ஜியையும் கட்சியில் சேரச் சொல்லவா? என்னப்பா எல்லாரும் தெறிச்சு ஓடறீங்க?

`எட்டுப்பட்டிராசா’ கஸ்தூரி ராஜா : ஒத்த ரூபா தர்றேன்னு பாட்டுப் பாடின, ரெண்டுரூபா சங்கின்னு கிண்டல் பண்ணுன குஷ்புவா வந்திருக்கிறது?

சில்வண்டு (ஆர்.கே)சுரேஷ் : நடிகர் சங்கத்தைவிட இங்கே மெம்பர் அதிகமா இருக்காய்ங்க?

`காமெடி பெருசு’ பேரரசு : மூஞ்சி முழுக்க மஞ்சள் பூசினா சிவகாசி தம்பி, காவி பூசினா தாமரை சங்கி!

`மெகா’குட்டி பத்மினி : சீரியலில்தான் ‘இவருக்குப் பதில் இவர்’னு போடுவாங்கன்னு பார்த்தா கட்சியிலும் யார் யாரோ வர்றாங்க போறாங்க!

காவி பிலிம்ஸ் வழங்கும் ‘தாமரை மலருமா?’ - திகில் படம்

`பால் பாக்கெட்’ அங்கிள் எஸ்.வி.சேகர் : ரெண்டு ரூபா சிப் கதை விட்டும் கட்சிக்கு ஓட்டு விழலை. எத்தனைபேர் வந்தாலும் கட்சி, கட் பண்ணுன பால் பாக்கெட்தான்!

`ஆர்வக்கோளாறு ஆனந்தி’ மதுவந்தி : நான் புதுசா ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கேன். இப்ப அதோட சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மனச திடப்படுத்திக்கங்க. இருபத்திரெண்டு கோடியே பதினான்காயிரம் கோடி!

`பவுடர் ஸ்டார் பெரியப்பா’ சீனிவாசன் :

என் லைப்ல நடந்தது எல்லாமே டிராஜடிதான். ஆனா, இந்த உலகம் என்னை காமெடியனா ஆக்கிப் பாக்குது. இந்த வீட்டையும் கேரக்டர்ஸையும் பார்த்தா பேன்ஸி டிரஸ் காம்படிஷன்தான் ஞாபகத்துக்கு வருது!

இசையமைப்பாளர் தினா : ஓ... அப்படினா ஒரு பேமிலி சாங் போட்டுர்றேன்.

“கம் ஆன் கம் ஆன்

கம் ஆன் கம் ஆன் ஆஹ் ஆஹ்...

கட்சியில் சினிமாவைக் கலந்தாச்சு

கலப்பில் கட்சி உருவாச்சு

நோட்டா தாண்டி நாம போயாச்சு!”

தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் : மார்க்கெட் போனா சீரியலுக்குப் போறாங்க, இல்லைன்னா இந்தக் கட்சிக்கு வந்துடறாங்க!