Published:Updated:

``ஜி20 தலைமைப் பொறுப்பு முழு நாட்டுக்கும் சொந்தமானது" - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி
News
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி

ஜி20 அமைப்பின் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

``ஜி20 தலைமைப் பொறுப்பு முழு நாட்டுக்கும் சொந்தமானது" - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி

ஜி20 அமைப்பின் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

Published:Updated:
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி
News
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி

`உலக வல்லரசு நாடுகளை உள்ளடக்கியிருக்கும் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பர் 1-ம் தேதி இந்தியா ஏற்றிருக்கிறது. பொருளாதார மந்தநிலை, உணவு, எரிபொருள்களின் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றம், மீண்டெழ முடியாத கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் என உறுப்பினராக இருக்கும் நாடுகள் முதல் உலக நாடுகள் வரை பெரும் சவாலை எதிர்கொண்டுவரும் நிலையில் இந்தியா தலைமைத்துவத்தை ஏற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து, ஜி20 அமைப்பின் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூடியது.

ஜி-20 - இந்தியா - கூட்டம்
ஜி-20 - இந்தியா - கூட்டம்
ட்விட்டர்

இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய அமைச்சரும் எல்.ஜே.பி தலைவருமான பசுபதிநாத் பராஸ், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஐ.யூ.எம்.எல் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு இந்தியாவின் ஜி20 தலைவர் பதவி குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்தியா ஒரு பெரிய உச்சி மாநாட்டை நடத்துவது இது முதன்முறை அல்ல. 1983-ல் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்ட NAM உச்சி மாநாட்டையும், 1983, நவம்பரில் 42 நாடுகள் கலந்துகொண்ட CHOGM உச்சி மாநாட்டையும் இந்தியா நடத்தியிருக்கிறது. முக்கியமாக, ஜி20 அமைப்பில் சீனா உறுப்பினராக இருப்பதால், பிரதமர் மோடி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்திய எல்லைக்குள் சீனாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

ஜி20 - இந்தியா - கூட்டம்
ஜி20 - இந்தியா - கூட்டம்
ட்விட்டர்

இந்தியாவில் ஊழல் செய்துவிட்டு தப்பியோடியவர்களை வெளியில் பாதுகாப்பான புகலிடங்களைக் கண்டுபிடிக்க அனுமதிக்காத சட்டத்தை இயற்ற, தனது அந்தஸ்தைப் பயன்படுத்த வேண்டும்.

சமீபத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பாக இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கு இழப்பீடு கோருவதற்கான நிலையைப் பயன்படுத்துதல், அமெரிக்காவுடன் பேசுவதன் மூலம் இந்தியர்களுக்கான அமெரிக்க விசாக்களுக்கான 900 நாள்கள் நீண்ட காத்திருப்புக்கு முடிவுகட்டுதல், மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்குச் சில நாடுகளின் நிதி உதவியை நிறுத்துதல் ஆகியவற்றில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும். பிரதமருக்கு எனது வாழ்த்துகள்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஜி-20 - இந்தியா - கூட்டம்
ஜி-20 - இந்தியா - கூட்டம்
ட்விட்டர்

சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜி20 தலைமை பதவிக்காக இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்ட லட்சியமான, 'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம்' குறித்துப் பேசினார். "சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் அனைத்து வேறுபாடுகளையும் களைவதன் மூலம் சமூகப் பன்மைத்தன்மை கொண்டாடப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஜி-20 - இந்தியா - மோடி
ஜி-20 - இந்தியா - மோடி
ட்விட்டர்

ஜி20 அமைப்பின் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, " ஜி20 பெரிய வெற்றியடையச் செய்ய அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. ஜி20 தலைவர் பதவி முழு நாட்டுக்கும் சொந்தமானது, மேலும் இது இந்தியாவை உலகுக்குக் காண்பிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. ஜி20 தலைவர் பதவி, சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரத்துக்குப் பெரும் வாய்ப்புகளைக் கொண்டுவருவதால், இந்தியா மீது உலகளாவிய ஆர்வமும் ஈர்ப்பும் இருக்கின்றன. இந்த வாய்ப்பை நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்துமாறு வலியுறுத்தியது இந்தக் கூட்டத்தின் மூலம் அறியப்படுகிறது. நிச்சயம் ஜி20 தலைவர் பதவி, வழக்கமான பெரிய பெருநகரங்களுக்கு அப்பால், இந்தியாவின் சில பகுதிகளையும் வெளிப்படுத்த உதவும்" எனப் பேசினார்.