Published:Updated:

தஞ்சை: தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு இணையான வளர்ச்சி! - பா.ஜ.க கூட்டத்தில் காயத்ரி ரகுராம்

பி.ஜே.பி கூட்டத்தில் பேசும் நடிகை காயத்ரி ரகுராம்
பி.ஜே.பி கூட்டத்தில் பேசும் நடிகை காயத்ரி ரகுராம் ( ம.அரவிந்த் )

தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு மாற்றாக பா.ஜ.க வளர்ச்சியடைந்திருப்பதாக தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

``தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு மாற்றாக பா.ஜ.க வளர்ச்சியடைந்துவருகிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அந்த இரு கட்சிகளுக்கும் இணையாக வெற்றி பெற்று, அதை நாம் உறுதி செய்ய வேண்டும்’’ என்று தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க-வின் கலை இலக்கியம் மற்றும் கலாசாரப் பிரிவின் தலைவரான நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

பா.ஜ.க  நிகழ்ச்சியில்...
பா.ஜ.க நிகழ்ச்சியில்...

பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள், வரும் 17-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இதற்காக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க-வின் கலை இலக்கியம் மற்றும் கலாசாரப் பிரிவின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடானது. இந்த நிகழ்ச்சி கலை இலக்கியம் மற்றும் கலாசாரப் பிரிவின் மாநிலத் தலைவரான நடிகை காயத்ரி ரகுராம் தலைமையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.

முன்னதாக, கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முதலில் தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்று பெருவுடையார் சன்னிதியில் சாமி தரிசனம் செய்த காயத்ரி ரகுராம், மணிமண்டபம் அருகேயுள்ள முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிறகு நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு அரை கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே சென்றார்.

நடிகை காயத்ரி ரகுராம்
நடிகை காயத்ரி ரகுராம்

பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டுப் பேசுபோது, ``நான் தஞ்சாவூர் பொண்ணுதான். அருகே இருக்குற பாபநாசம்தான் என் சொந்த ஊர். மோடி பிறந்தநாளை எல்லோரும் நலத்திட்ட உதவிகள் வழங்கி விமர்சையாகக் கொண்டாட வேண்டும். தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு மாற்றாக பா.ஜ.க வளர்ச்சியடைந்துவருகிறது.

`4 ஐ.டி விங்' திமுக., `நோ சமாதானம்' சீமான், காயத்ரி ரகுராம் `கலகம்'... டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்!

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அந்த இரு கட்சிகளுக்கு இணையாக நாம வெற்றிபெற்று, அதை உறுதி செய்ய வேண்டும். தி.மு.க-வினர் இந்தியை எதிர்க்கிறார்கள். சில தி.மு.க நிர்வாகிகளால் பல பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் இப்போதும் இந்திப் பாடத்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியை எதிர்ப்பவர்கள் நடத்தும் பள்ளிகளில், இந்திப் பாடத்தை நிறுத்த வேண்டியதுதானே... அதைச் செய்யாமலேயே இந்தியை எதிர்ப்பதாகக் கூறி அரசியல் செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு