Published:Updated:

"ராகுலின் சிறுபிள்ளைத்தனத்தால் தான் தேர்தலில் தோல்வி" - காங்கிரஸிலிருந்து விலகினார் குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

"ராகுலின் சிறுபிள்ளைத்தனத்தால் தான் தேர்தலில் தோல்வி" - காங்கிரஸிலிருந்து விலகினார் குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

Published:Updated:
குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர். மத்திய அமைச்சர், இந்திய காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகார குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்திருக்கிறார் குலாம் நபி ஆசாத். அண்மைக் காலமாகவே காங்கிரஸ் மேலிடத்துடன் அதிருப்தியில் இருந்துவந்த அவர், இன்று அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார். இந்த செய்தி காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றம் தொடர்பாக நீண்ட காலமாகவே குலாம் நபி ஆசாத் அதிருப்தியில் இருந்து வருகிறார். காங்கிரஸ் தலைமையை மாற்றக்கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இது தொடர்பாக அவர் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதம் எழுதியிருக்கிறார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

அந்தக் கடிதத்தில், ``ராகுல் காந்தியின் `முதிர்ச்சியின்மையே' காங்கிரஸ் கட்சியின் அரசியல் செல்வாக்கு குறைந்து வருவதற்கும், தேர்தல்களில் மோசமான செயல்பாட்டுக்கும் காரணம். 2014-ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம்.

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி பெயரளவிலான தலைவராக மட்டுமே இருக்கிறார். 2013-ம் ஆண்டு ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக்கப்பட்ட பிறகு, மூத்த நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டனர். ராகுல் காந்திக்கு துதி பாடுபவர்கள் கட்சியை நிர்வகிக்கத் தொடங்கினர். 2013-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த சட்டத்தை பொதுவெளியில் கிழித்தெறிந்தது சிறுபிள்ளைத்தனமான செயல். அதனால்தான், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.