Published:Updated:

`நீட் தேர்வு குறித்து மாணவர்களுக்குத் தவறான நம்பிக்கை அளிக்க வேண்டாம்! - ஜி.கே.வாசன்

``திமுக அரசு நிதிபற்றாக்குறையைக் காரணம் காட்டி தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தக் கூடாது" என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திண்டுக்கல், த.மா.க நகர் தலைவர் ரித்திஸ் இல்ல விழாவில் அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. குறிப்பாக, பல இடங்களில் தேர்தல் விதிமுறைகள்கூட முறையாகப் பின்பற்றப்படவில்லை.

திமுக தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்து. இது போன்ற வாக்குறுதிகள்மீது மக்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே, திமுக அரசு நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி அதை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தக் கூடாது.
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளைப்போல, ஆட்சிக்கு வந்த பிறகு சட்டப்பேரவையிலும் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றையும் முறையாக நிறைவேற்ற வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்தார்
செய்தியாளர்களைச் சந்தித்தார்

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியிருப்பதால் சுகாதாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் தனியாரிடம் மூட்டை ரூ.800-க்கு மட்டுமே விற்கின்றனர். அரசு கொள்முதல் செய்தால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். எனவே, நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தீர்மானம் சாத்தியமாகுமா? - தமிழ்நாடு சட்டமன்ற வரலாறு சொல்வதென்ன?

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்படும் என்றார்கள். ஆனால் முறையாக அறிவிப்பின்றி மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளானதுதான் மிச்சம்.

நீட் தேர்வு அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது. எனவே நீட் உள்ளிட்ட தகுதித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்த பயிற்சி கொடுக்க வேண்டும். நீட் தேர்வை வைத்து எந்தக் கட்சியும் அரசியல் செய்ய வேண்டாம். குறிப்பாக நீட் தேர்வு குறித்து மாணவர்களுக்குத் தவறான நம்பிக்கை அளிக்க வேண்டாம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு