Published:Updated:

``மதுவும், கஞ்சாவும் ஜோடி போட்டு தமிழக மக்களையும் அழித்து வருகிறது!" - ஜி.கே.வாசன் காட்டம்

ஜி.கே.வாசன்

``தி.மு.க அரசின் மக்கள் விரோத செயல்களை எடுத்துரைத்து மக்களின் தேவைகளை புரிந்து செயல்பட்டால் வரும் காலத்தில் நாடாளுமன்றத்தில் நம் குரல் மக்களுக்காக ஓங்கி ஒலிக்கும்" என்றார் ஜி.கே.வாசன்.

``மதுவும், கஞ்சாவும் ஜோடி போட்டு தமிழக மக்களையும் அழித்து வருகிறது!" - ஜி.கே.வாசன் காட்டம்

``தி.மு.க அரசின் மக்கள் விரோத செயல்களை எடுத்துரைத்து மக்களின் தேவைகளை புரிந்து செயல்பட்டால் வரும் காலத்தில் நாடாளுமன்றத்தில் நம் குரல் மக்களுக்காக ஓங்கி ஒலிக்கும்" என்றார் ஜி.கே.வாசன்.

Published:Updated:
ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜரின் 120 வது பிறந்த நாளை பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

இக்கூட்டத்தில் பேசிய த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், ``தமிழ் மாநில காங்கிரஸ் வரலாற்றில் ஆண்ட கட்சியும் இல்லை, வீழ்ந்த கட்சியும் இல்லை. ஆனால், தொண்டர்களால் மரியாதைக்குரிய கட்சியாக திகழ்கிறது. மூன்று தலைமுறையாக வலுவுடன் கூட்டுக்குடும்பமாக செயல்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரை அரசியல் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடம். தமிழகத்தில் நகரமைப்புக்கு முன்மாதிரியாகத் திகழும் மீனாட்சி அம்மன் கோயில், அதனை சுற்றியுள்ள தெருக்கள்தான் என்று காமராஜர் புகழ்ந்துள்ளார்.

த.மா.கா பொதுக்கூட்டம்
த.மா.கா பொதுக்கூட்டம்

நேர்மை, எளிமை, தூய்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் காமராஜர். அவர் போலத்தான் த.மா.க-வும். எங்களுக்கு ரோல் மாடல் காமராஜர்தான். கல்வி தொழில், விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புரட்சி செய்தவர்.

1960-ல் மின்மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது. காமராஜர் ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 5,000 புதிய பள்ளிக்கூடங்களை கட்டி கல்வியில் புரட்சி செய்து, தொழில் வளர்ச்சியில் மாநிலத்தை 2-வது இடத்துக்கு உயர்த்தினார்.

த.மா.கா மத்தியில் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. பா.ஜ.க நல் அரசாக செயல்பட்டு, இந்தியாவை வல்லரசாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

வந்திருந்த தொண்டர்கள்
வந்திருந்த தொண்டர்கள்

குறிப்பாக கொரோனா பரவலை எதிர்த்து சிறப்பாக செயல்பட்டு அதில் வெற்றி கண்டது. மத்திய அரசின் திட்டங்களை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்து வருகின்றனர்.

தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாக ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. விளம்பர அரசாக உள்ளது. தமிழகத்தின் அரசு நிர்வாகம் கவலைக்கிடமாக உள்ளது. பகட்டான ஆட்சியாகவும், சட்ட ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சியாகவும் உள்ளது. எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் செயலை ஆர்வமுடன் செய்து வருகின்றனர்.

டாஸ்மாக்கில் கடந்த 5 வருடங்களில் மொத்த வருவாயில் கசிவாக கிடைப்பது 2 லட்சம் கோடி. அது கூலித்தொழிலாளர்களின் பணம். அது இடைத்தரகர்களுக்கு செல்வதை தடுக்க வேண்டும்.

காமராஜர் ஆட்சி படிக்க கற்று கொடுத்தது. தற்போதைய தி.மு.க அரசு குடிக்க கற்று கொடுக்கிறது. பள்ளி மாணவர்கள் கைகளில் மது பாட்டில், கஞ்சா இருப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. குறிப்பாக மதுவும், கஞ்சாவும் ஜோடி போட்டுக்கொண்டு தமிழக மக்களையும் அழித்து வருகிறது. ஓராண்டில் 2200 கஞ்சா வழக்குகளில் 148 பேர்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும். இதுகுறித்த விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சிறுவர்கள், பெண்கள் என பலரும் தற்கொலை செய்யும் நிலை அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தாலும் மாநில அரசு குறைப்பதாக இல்லை, சிறுகுறு வேளாண் கடன் தள்ளுபடி, மீனவர்களுக்கு வீடு கட்டிதரப்படும் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

தி.மு.க அரசின் மக்கள் விரோத செயல்களை எடுத்துரைத்து மக்களின் தேவைகளை புரிந்து செயல்பட்டால் வரும் காலத்தில் நாடாளுமன்றத்தில் நம் குரல் மக்களுக்காக ஓங்கி ஒலிக்கும்" என்றார்.