Published:Updated:

`நாற்பதே தொகுதி; கட்சி தாவியதோ 60% உறுப்பினர்கள்... தவிக்கும் கோவா! - இந்தத் தேர்தலில் நிலை என்ன?

மோடி, ராகுல், மம்தா, கெஜ்ரிவால்

கோவா மாநிலத்தில் ஐந்து ஆண்டுக்காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 60% எம்.எல்.ஏ-க்கள் கட்சி தாவியுள்ளனர்.

`நாற்பதே தொகுதி; கட்சி தாவியதோ 60% உறுப்பினர்கள்... தவிக்கும் கோவா! - இந்தத் தேர்தலில் நிலை என்ன?

கோவா மாநிலத்தில் ஐந்து ஆண்டுக்காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 60% எம்.எல்.ஏ-க்கள் கட்சி தாவியுள்ளனர்.

Published:Updated:
மோடி, ராகுல், மம்தா, கெஜ்ரிவால்

கட்சித்தாவல் தடைச் சட்டம் 1985-ம் ஆண்டு அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணையின் கீழ் இணைத்துள்ளது. அதன் நோக்கம், உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடுத்து, ஆட்சியின் உறுதித்தன்மையை வலுப்படுத்துவதாக அமைந்தது. 1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு பல மாநில அரசுகள் எம்.எல்.ஏ-க்களால் கவிழ்க்கப்பட்டதன் விளைவாக இச்சட்டம் உருவாக்கப்பட்டது. கட்சித்தாவல் என்பது அரசியலில் சாதாரணமானது என்றாலும்கூட, தனிப்பட்ட வகையில் ஒரு கட்சியிலிருந்து வெற்றிபெற்றுவிட்டு மற்றொரு கட்சிக்கு மாறும் எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு சிக்கல்களை உண்டாக்குகிறது கட்சித்தாவல் தடைச் சட்டம்.

 பிஜேபி
பிஜேபி

ஆனால், கோவா மாநிலத்தில் ஐந்து ஆண்டுக்காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 60% எம்.எல்.ஏ-க்கள் கட்சி தாவியுள்ளனர். 40 தொகுதிகளைக்கொண்ட கோவாவில், 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அங்கு ஆட்சி அமைக்க 21 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும். ஆனால் கோவாவில் ஆட்சி அமைத்த பா.ஜ.க வென்றது 13 தொகுதிகள்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனாலும் ஆட்சி அமைத்ததற்கான காரணம், பா.ஜ.க கட்சிக்குத் தாவிய பல எம்.எல்.ஏ-க்கள்தான். 17 தொகுதிகள் வென்ற காங்கிரஸிலிருந்து கோவா சட்டமன்ற காங்கிரஸ் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த சந்திரகாந்த் கவ்லேகர் தலைமையில் 12 எம்.எல்.ஏ-க்கள் கூண்டோடு பாஜக-வில் ஐக்கியமானார்கள். அதுமட்டுமல்லாமல், அந்த சட்டமன்றத் தேர்தலில் வென்ற கோவா ஃபார்வர்டு கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களில் இரண்டு உறுப்பினர்களையும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு உறுப்பினர்களையும் தன்பக்கம் இழுத்தது பா.ஜ.க.

அதேபோல, 2017-ல் கோவாவில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்த முன்னாள் பாஜக முதல்வர் பர்சேகர் உட்பட சிலர் தேர்தல் நெருக்கத்தில் பாஜக-விலிருந்தும் விலகியுள்ளனர். தேசியவாத காங்கிரஸுக்கு இருந்த ஒரு உறுப்பினரும் தேர்தல் நெருக்கத்தில் தற்போது திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்சித்தாவல்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இவர்களைத் தவிர, சுயேச்சையாக வென்ற இருவர் பா.ஜ.க-வில் இணைந்தனர். இப்படித்தான் பா.ஜ.க ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவுசெய்யவிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாக்காளர்கள், தாம் வாக்களிக்கும் ஒரு வேட்பாளர், அல்லது கட்சி சரியானது என்ற நம்பிக்கையில் வாக்களிக்கின்றனர். ஆனால் தன்னால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர், இறுதிவரை அதே கட்சியில்தான் இருப்பார் எனபதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத சூழல் தற்போது கோவாவில் உருவாகியுள்ளது. காங்கிரஸை விரும்பி வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக-வில் உள்ளனர். சிறிய கட்சிகளை நம்பி வாக்களித்த வாக்காளர்களின் நிலைமையும் இதேதான். பாஜக உறுப்பினர்கள் பலரும்கூட இப்போது ராஜினாமா செய்துள்ளனர். எனவே வரும் தேர்தலில் யாரை நம்பி வாக்களிப்பது, அப்படி வாக்களித்தால் அவர்கள் நாம் வாக்களித்த கட்சியிலேயே இருப்பார்களா என்ற குழப்பத்தில் கோவா வாக்காளர்கள் உள்ளனராம்.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

கடந்த படிப்பினை காரணமாக, இந்த முறை அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் மிகவும் உஷாராகி இருக்கின்றனவாம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் அவரவர் வழிபாட்டு இடங்களுக்குக் கூட்டிச் சென்று சத்தியம் வாங்குகிறதாம் காங்கிரஸ் கட்சி. ஆம் ஆத்மி கட்சியோ, சட்டரீதியான ஒப்பந்தமும் செய்கிறது எனத் தகவல்கள் கூறப்படுகின்றன. சீட்டுக் கட்டுகளைப்போல மாறி மாறிச் சேரும் எம்.எல்.ஏ-க்களைப் பார்த்து வெதும்பிப்போன கோவா வாக்காளர்கள் யாரைத்தான் நம்புவதோ எனக் குழப்பத்தில் உள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism