Election bannerElection banner
Published:Updated:

`அழுத்தம் கொடுத்த ராமதாஸுக்கு நன்றி..!’ - முதல்வர் பெயரைத் தவிர்த்த காடுவெட்டி குருவின் மகன்

காடுவெட்டி குரு மகன் கனலரசன்
காடுவெட்டி குரு மகன் கனலரசன்

வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தியது அரசு. இதற்குப் பெரு முயற்சி எடுத்தது பா.ம.க.

பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தில் அசைக்க முடியாத நபராக இருந்த காடுவெட்டி குரு மறைந்த பின்னர், அவருடைய மகன் கனலரசன் `மாவீரன் மஞ்சள் படை’ என்கிற இயக்கத்தைத் தொடங்கி நடத்திவருகிறார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்
Photo: Vikatan / Vijay.T

வரக்கூடியத் தேர்தலில் பா.ம.க ஆளும் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருப்பதால், தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்தார் கனலரசன். இந்தநிலையில், வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தியது அரசு. இதற்குப் பெரு முயற்சி எடுத்தது பா.ம.க. வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க வழக்கு தொடர்ந்திருப்பதாகக் கூறியிருக்கும் கனலரசன், அந்தக் கட்சிக்கு அளித்த தனது ஆதரவையும் விலக்கிக்கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமன்றி, வன்னியர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற உதவியதாக, `பா.ஜ.க தலைவர்கள், அமைச்சர் சி.வி.சண்முகம், ஒப்புதல் கொடுத்த ஆளுநர், அழுத்தம் கொடுத்த பா.ம.க., ஆதரித்த சீமான் என எல்லோருக்கும் நன்றி’ என்று ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் கனலரசன். இதில் முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றி சொல்லாத கனலரசன், பா.ம.க-வுக்கு நன்றி சொல்லியிருப்பதுதான் கவனிக்க வேண்டியது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு