Published:Updated:

``என்னைப் பற்றிப் பேச, இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது!" - ஹெச்.ராஜா பேட்டி

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

உயிருக்கு பயந்த கோழை வைரமுத்து, எம்பெருமான் ராமனை மனநோயாளி என்று பேசுவார். அவர் பேசுவதைப் பார்த்து மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ என எல்லோரும் கைதட்டிக் கொண்டிருக்கிறார்கள். வெட்கம் கெட்ட இந்து விரோதிகள் இவர்கள்.

''அரசாங்கத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்றால், 'ஆட்சியைக் கலைத்துவிடுவோம்' என்று மிரட்டுகிறீர்களா?''

''அப்படிச் சொல்லவில்லை. இவர்கள் (தமிழக அமைச்சர்கள்) இப்படி எல்லைமீறிப் பேசுவதால், கூட்டணிக்குள் பிரச்னை வந்துவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வோடு பேசியிருக்கிறேன். இதை ஏன், 'ஆட்சியைக் கலைத்து விடுவது' என்றெல்லாம் மாற்றிச் சொல்கிறீர்கள்?''

'' `பெண்களை உயர்வாக மதிக்கும் கலாசாரத்தைக் கொண்டவர்கள்' என்று சொல்லும் நீங்களே பெண்களை இழிவுபடுத்தும் 'வசை'ச் சொற்களைப் பயன்படுத்தலாமா?''

ஹெச்.ராஜா: ''எந்த மொழியில் பேசினால் அவர்களுக்குப் புரியுமோ அந்த மொழியில் பேச வேண்டிய நிர்பந்தத்துக்கு என்னைத் தள்ளியவர்கள் இந்த நாத்திகக் கயவர்கள் கூட்டம். ஆண்டாளைப் பற்றி அவதூறாகப் பேசிய வைரமுத்துவை நான் கண்டித்துப் பேசியதால், அவர் மனம் புண்பட்டுவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால், அவர் மறுபடியும் ராமரைப் பற்றி இழிவாகப் பேசியிருக்கிறாரே... எனவே, வைரமுத்துவை குண்டாஸில் கைது செய்ய வேண்டும்!''

``என்னைப் பற்றிப் பேச, இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது!" - ஹெச்.ராஜா பேட்டி

'' 'தனிநபர்களைத் தரக்குறைவாக விமர்சிக்கும் ஹெச்.ராஜாவின் பேச்சு, மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போன்றது' என காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் கூறுகிறாரே?''

''இந்துக்களுக்கு விரோதமாக பீட்டர் அல்போன்ஸ் எப்படியெல்லாம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று என்னால் அடுக்கடுக்கான உதாரணங்களைக் காட்ட முடியும். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு என்னைப் பற்றிப் பேச என்ன உரிமையிருக்கிறது?

உயிருக்கு பயந்த கோழை வைரமுத்து, எம்பெருமான் ராமனை மனநோயாளி என்று பேசுவார். அவர் பேசுவதைப் பார்த்து மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ என எல்லோரும் கைதட்டிக் கொண்டிருக்கிறார்கள். வெட்கம் கெட்ட இந்து விரோதிகள் இவர்கள்.

அன்றைக்கு, 'மிஸ்டர் வைரமுத்து ஸ்டாப் இட்!' என்று ப.சிதம்பரம் அவரது பாணியிலேயே தடுத்து நிறுத்தியிருந்தால், அவர் மனுஷன். ஆனால், சொல்லவில்லையே! அப்படியிருக்கும்போது என்னைப் பற்றிப் பேச காங்கிரஸ் தலைவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது!''

- ''அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும் ஜெயக்குமாரும் எல்லைமீறிப் பேசுகின்றனர்'' என்று கண்டித்த கையோடு, ''ராகுல் காந்தி ஒரு அரைவேக்காடு, செமி இத்தாலியன்'' என்று பேசி அதிரவைத்திருக்கிறார் பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.

அண்மைக்காலமாக, பரபரப்பான கருத்துகளை 'உதிர்க்காமல்' அமைதிகாத்துவந்தவர், சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவருவதை முன்னிட்டு மீண்டும் வேட்டியை மடித்துக்கட்டி, களத்தில் குதித்திருக்கிறார். இந்த 'ஏடாகூட' கருத்துக்கு விளக்கம் கேட்டு, ஹெச்.ராஜாவிடம் பேட்டி கேட்டோம்.

> '' `தமிழக அமைச்சர்கள் வரம்புமீறிப் பேசுகிறார்கள்' என்று கண்டிக்கும் நீங்களே, 'ராகுல் காந்தி ஒரு அரைவேக்காடு' என்று பேசலாமா?''

> ''ராகுல் காந்தியை, அரைவேக்காடு என்று நீங்கள் சொல்லியிருப்பது வரம்பு மீறல் இல்லையா?''

> ''உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறீர்களா அல்லது 'இப்படி அதீதமாகப் பேச வேண்டும்' என்று திட்டமிட்டே பேசுகிறீர்களா?''

- அவர் அளித்த பதில்கள் இங்கே அப்படியே... வாசிக்க க்ளிக் செய்க.. https://bit.ly/2QV885F> "அவர்கள் மனதும் புண்பட வேண்டும்..!" - ஹெச்.ராஜா அதிரடி https://bit.ly/2QV885F

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு