Published:Updated:

வண்ணாரப்பேட்டை... ட்விட்டரில் எச்சரித்தது ஏன்? - ஹெச்.ராஜா சிறப்புப் பேட்டி

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

"யாராவது ஒருவர் பேசியிருந்ததை நாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஆரம்பத்திலிருந்தே 'இந்தப் போராட்டமே திட்டமிடப்பட்ட ஒன்று' என்று நான் சொல்லிவிட்டேன்

டெல்லியில் சி.ஏ.ஏ ஆதரவு - எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு இடையிலான கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 35-ஐ எட்டியிருக்கிறது. இந்த நிலையில், 'டெல்லியில் நடப்பது வண்ணாரப் பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம்' என ட்விட்டரில் பதிவிட்டு, வழக்கம்போல் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார் பா.ஜ.க தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா. அவரிடம் பேசினோம்.

"மக்களிடையே கலவரத்தைத் தூண்டிவருவதாகக் குற்றம் சாட்டப்படும் பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ராவைக் கைதுசெய்யவேண்டும் என்று பா.ஜ.க எம்.பி-யான கவுதம் கம்பீரே பேசியிருக்கிறாரே?"

"யாராவது ஒருவர் பேசியிருந்ததை நாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஆரம்பத்திலிருந்தே 'இந்தப் போராட்டமே திட்டமிடப்பட்ட ஒன்று' என்று நான் சொல்லிவிட்டேன். 'மதரீதியில் பாதிக்கப்பட்டு வந்திருப்பவர்களுக்குக் குடியுரிமை வழங்கவேண்டும்' என்று, 2003-ம் ஆண்டு ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங்கே பேசியிருக்கிறார். ஆனால், இப்போது இத்தாலி சோனியா, 'இண்டியன் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்' என்கிறார். ஆக, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முரண்பாடு இருக்கிறது. இதைப் பற்றி ஊடகத்தினர் யாரும் பேச மாட்டேன் என்கிறீர்களே!"

தமிழ்நாட்டிலும் 1984-ம் ஆண்டில் இந்து முன்னணியின் நிறுவனர் ராமகோபாலன் வெட்டப்பட்டதில் ஆரம்பித்து பல்வேறு முஸ்லிம் பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்றுள்ளன.

"அரசுக்கு எதிராகப் போராடினால் உடனே 'தேசத்துரோகிகள்' என முத்திரை குத்திவிடுகிறீர்களே?"

"வண்ணாரப்பேட்டையில் பர்தா அணிந்திருந்த பெண்கள், போலீஸ் மீது கல்லால் அடிப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இந்தச் சம்பவம் குறித்து கருணாநிதி என்கிற போலீஸ் அதிகாரியே வருத்தப்பட்டிருக்கிறார். ஆனால், ஊடகத்தினர் ஏன் அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்?

"டெல்லி கலவரம் நாளை வண்ணாரப்பேட்டையிலும் தமிழகத்திலும் நடைபெறலாம் என நீங்கள் பதிவிட்டிருப்பதன் நோக்கம் என்ன?"

"டெல்லியில் பர்தா அணிந்திருந்த பெண்கள் கல் வீசியதைப் போன்றே, சென்னை வண்ணாரப்பேட்டையிலும் நடைபெற்றது. இதுகுறித்து நம் முதல்வர் சட்டசபையிலேயே பேசியிருக்கிறார். இதுமட்டுமல்ல, இணை கமிஷனர் விஜயகுமாரி நெற்றியில் வெட்டப்பட்டார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பிளேடால் கிழிக்கப்பட்டார். பெண் காவலர் கலா படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆக, போராட்டத்துக்கு வந்திருப்பவர்களின் கைகளில் ஆயுதங்களும் இருக்கின்றன.

வண்ணாரப்பேட்டை... ட்விட்டரில் எச்சரித்தது ஏன்? - ஹெச்.ராஜா சிறப்புப் பேட்டி

இப்போது டெல்லியில் துப்பாக்கியால் சுடும் அளவுக்கு வன்முறைப்பேர்வழிகள் வந்துவிட்டார்கள். தலைமைக் காவலர் ரத்தன் லாலை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஷாரூக் என்கிற நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் 1984-ம் ஆண்டில் இந்து முன்னணியின் நிறுவனர் ராமகோபாலன் வெட்டப்பட்டதில் ஆரம்பித்து பல்வேறு முஸ்லிம் பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்றுள்ளன. எனவே, இங்கேயும் கலவரம் நிகழ வாய்ப்புள்ளதால் போராட்டக்காரர்களை வண்ணாரப்பேட்டையிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்ற எச்சரிக்கையைத்தான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளேன்."

> "இல்லையே... டெல்லியில் இந்துக்கள், முஸ்லிம்கள் என இரு தரப்பினரும் வன்முறையில் ஈடுபட்டதை கண்கூடாகப் பார்த்தோமே. அதிலும், இந்துக்கள் தரப்பிலிருந்துதான் தாக்குதல் அதிகளவில் நிகழ்ந்ததே?”

> “நீங்கள் சொல்வதுபோலவே வைத்துக்கொண்டாலும் டெல்லி கலவரத்தில் மசூதியின் உச்சிக்கு ஏறிச் சென்று ஒலிபெருக்கியையும் மதச் சின்னத்தையும் அடித்து நொறுக்குபவர்கள் யார்?"

> "சரி, டெல்லி கலவரம் திட்டமிடப்பட்ட ஒன்று என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாகவே உங்களின் ட்விட்டர் பதிவு இருக்கிறதே?"

> "உங்கள் கட்சியைச் சேர்ந்த கல்யாணராமனும் உங்களைப் போன்றே கருத்து பதிவிட்டிருக்கிறாரே?"

- இந்தக் கேள்விகளுக்கு ஹெச்.ராஜா அளித்த பதில்களுடன், ஜூனியர் விகடன் இதழில் வெளியான முழுப் பேட்டியை வாசிக்க > விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காரர் கொலைமிரட்டல் விடுக்கிறார்! - ஹெச்.ராஜா பேட்டி https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-national-secretary-h-raja-interview-2

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு