Published:Updated:

``விஜய் எல்லாம் எங்களுக்கு ஓர் ஆள் இல்லை!" - ஹெச்.ராஜா அதிரடி பேட்டி

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

சினிமா உலகில் கறுப்புப் பண முதலீடு அதிகரித்துள்ளது. வருமானவரித் துறைக்கு உறுதிசெய்யப்பட்ட தகவல் கிடைத்தால் நடவடிக்கை எடுப்பார்கள். இது வழக்கமானது. இதை எப்படி பழிவாங்கல்

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வாய் திறந்தாலே, அதிரடி சரவெடிதான்! சமீபத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்திருந்தபோதும் பல வெடிகளைக் கொளுத்திப்போட்டார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

" 'ரஜினி அமைக்கும் கூட்டணியில் பா.ம.க இருக்கும், பா.ஜ.க இருக்கக் கூடாது' என்று தமிழருவி மணியன் கூறியுள்ளாரே?"

"இதைச் சொல்ல தமிழருவி மணியன் யார்? 'இவர்தான் என் செய்தித் தொடர்பாளர்' என்று ரஜினி அறிவித்துள்ளாரா?"

"தமிழக பா.ஜ.க தலைவர் பதவி ரஜினிக்காகக் காத்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே?"

"இதெல்லாம் ரூமர். உண்மையல்ல."

"நடிகர் விஜய் படத்தின் ஷூட்டிங் நடைபெறக் கூடாது என, நெய்வேலியில் பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தியுள்ளார்களே?"

"அது விஜய்க்கு எதிராக நடந்த போராட்டம் அல்ல. என்.எல்.சி நிர்வாகத்துக்கு எதிராக நடந்த போராட்டம். பல வருடங்களுக்கு முன் சரத்குமார் நடித்த 'அரவிந்தன்' படப்பிடிப்பின்போது அங்கு விபத்து நடந்தது. அதுமுதல் அங்கு ஷூட்டிங் நடத்த அனுமதிப்பதில்லை. அதை மீறியதை எதிர்த்துதான் போராட்டம் நடத்தினார்கள்."

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

"நடிகர் விஜய் தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்தப்படுவது அரசியல் பழிவாங்கல் என்று சொல்லப்படுகிறதே?"

"விஜய் எல்லாம் எங்களுக்கு ஓர் ஆள் இல்லை. சினிமா உலகில் கறுப்புப் பண முதலீடு அதிகரித்துள்ளது. வருமானவரித் துறைக்கு உறுதிசெய்யப்பட்ட தகவல் கிடைத்தால் நடவடிக்கை எடுப்பார்கள். இது வழக்கமானது. இதை எப்படி பழிவாங்கல் என்று கூற முடியும்?"

- ஜூனியர் விகடன் இதழில் முழுமையான பேட்டியை வாசிக்க > அன்புச்செழியனுடன் தொடர்பில் உள்ளவர்களும் விரைவில் சிக்குவார்கள்! - ஹெச்.ராஜா அதிரடி https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-national-secretary-h-raja-interview

"தமிழருவி மணியன் யார்?" - வரிந்துகட்டும் வெற்றிவேல்

'ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் கட்சியை அறிவிப்பார்; அ.ம.மு.க-வுடன் கூட்டணி அமைக்க மாட்டார்' என்று தமிழருவி மணியன் சொன்னதாக வெளியான தகவல்கள், தமிழக அரசியலை தடதடக்கவைத்திருக் கின்றன! என்னதான் நடந்தது, அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் வெற்றிவேலிடம் பேசினோம்.

வெற்றிவேல்
வெற்றிவேல்

"தமிழருவி மணியனின் பேச்சுக்கு என்ன காரணம், கூட்டணி தொடர்பாக ஏதேனும் பேச்சுவார்த்தை நடைபெற்றதா?"

"அதையெல்லாம் சொல்ல முடியாது. 'ரஜினிகாந்த் டி.டி.வி.தினகரனோடு கூட்டணி அமைத்துக்கொண்டால், அது மக்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்' என்று சொல்வதற்கு தமிழருவி மணியன் யார்? ரஜினியுடன் அ.ம.மு.க கூட்டணி வைக்கலாமா, வேண்டாமா என்று டி.டி.வி.தினகரன்தானே முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். நான் பேச ஆரம்பித்தால் நிறைய பேச வேண்டியிருக்கும்."

"தினகரன் மற்றும் சசிகலாவைப் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது மென்மையான போக்கைக் கடைப்பிடித்துவருகிறார் என்றொரு பேச்சு இருக்கிறதே?"

"முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை இதுவரை விமர்சித்ததில்லை என்பது உண்மை. ஆனால், தினகரனை பெயர் குறிப்பிடாமல் பல இடங்களில் விமர்சித்திருக்கிறார்."

- முழுமையான பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > "தமிழருவி மணியனைவிட ரஜினி எனக்கு நெருக்கம்!" - வரிந்துகட்டும் வெற்றிவேல் https://www.vikatan.com/government-and-politics/politics/ammk-spoke-person-vetrivel-interview

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு