Published:Updated:

`30 ஆண்டுகள் பா.ஜ.க ஆட்சியிலிருக்க இதைச் செய்யுங்கள்!’ - திரிபுரா முதல்வர் பிப்லப் குமாரின் யோசனை

பிப்லப் குமார் தேப்
பிப்லப் குமார் தேப்

``குறைவாகப் பேசுங்கள்; அமைதியாக இருங்கள். வேலையில் கவனம் செலுத்துங்கள். நாம் அதிகம் பேசினால், நமது ஆற்றல் வீணாகிவிடும். எனவே, நம் ஆற்றலை வீணாக்கக் கூடாது.’’

`வீடுகளில் சுவாமி விவேகானந்தரின் படங்கள், அவரது செய்திகளைவைத்திருந்தால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பா.ஜ.க-தான் வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும்’ என திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் பேசியிருக்கிறார்.

பா.ஜ.க-வின் மகளிர் பிரிவான மகிளா மோர்ச்சா உறுப்பினர்களிடையே பேசிய பிப்லப் குமார் தேப், `சுவாமி விவேகானந்தரின் செய்தியைப் பரப்பவும், மாநில மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவரது படங்களை விநியோகிக்கவும் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் அவர் கூறுகையில் ``எங்கள் மாநிலத்திலுள்ள பல வீடுகளில் ஜோதி பாசு, ஜோசப் ஸ்டாலின், மா சே துங் ஆகியோரின் படங்கள் வீடுகளில் வைக்கப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

விவேகானந்தர்
விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தரின் படங்களை வீடுகளில் ஏன் வைக்கக் கூடாது? 80 சதவிகித வீடுகளில் சுவாமி விவேகானந்தரின் படங்களையும், அவரது செய்தியையும் நாம் வைத்திருப்போமானால் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க அரசுதான் ஆட்சியில் இருக்கும்’’ என்றார்.

`தி.மு.க - பா.ஜ.க கூட்டணி: பொன்னார் கருத்தும் தி.மு.கவின் ரியாக்‌ஷனும்! #TNElection2021

விவேகானந்தரின் பொன்மொழிகள், அவருடைய ஆன்மிகம் குறித்துப் பேசிய அவர், ``குறைவாகப் பேசுங்கள், அமைதியாக இருங்கள், வேலையில் கவனம் செலுத்துங்கள். நாம் அதிகம் பேசினால், நமது ஆற்றல் வீணாகிவிடும். எனவே, நம் ஆற்றலை வீணாக்கக் கூடாது.

பிப்லப் குமார் தேப்
பிப்லப் குமார் தேப்
the north east today

மக்களிடையே இந்திய கலாசாரம், சம்ஸ்கிருதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும்’’ என்று மகிளா மோர்ச்சா உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

இவர் ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட்டில் கொரானா பாதித்த நோயாளிகள், மனதளவில் வலிமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு விவேகானந்தரின் புத்தகங்களை விநியோகித்திருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு