Published:Updated:

``பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகவாதியல்ல... தொழிலதிபர் அவ்வளவுதான்!" - பாஜக தலைவர் தாக்கு

முன்னாள் மத்திய அமைச்சர் ஹுகும்தேவ் நாராயணா யாதவ்

இப்போதைக்கு அரசியல் கட்சி இல்லை என பிரசாந்த் கிஷோர் நேற்று கூறியதையடுத்து, `பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூகவாதி என்று அழைக்காதீர்கள், அவர் அரசியல் தொழிலதிபர்' என பாஜக முன்னாள் மத்தியமைச்சர் சாடியுள்ளார்.

2024 தேர்தல் குறித்த காங்கிரஸுடனான பேச்சுவார்த்தையில், `என்னைவிட காங்கிரஸுக்கு தலைமையே முக்கியம்' எனக் கூறிய பிரசாந்த் கிஷோர், அடுத்த சில நாள்களில் `மக்களிடம் செல்லவேண்டியதற்கான நேரம் வந்துவிட்டது’ என்று ட்வீட் செய்திருந்தார். பிரசாந்த் கிஷோரின் இந்தப் பதிவு, பீகாரை மையமாகக்கொண்டு கூடிய விரைவில் அவர் புதிய கட்சியை ஆரம்பிக்கப்போகிறார் எனப் பலரையும் பேசவைத்தது. இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மீண்டும் ஆச்சர்யப்படுத்திய பிரசாந்த் கிஷோர், `இப்போதைக்கு கட்சி தொடங்குவதாக இல்லை. பீகாரில் 3,000 கிலோமீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டு மக்களை சந்திக்கப்போகிறேன்' என நேற்று அறிவித்தார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

இந்த நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஹுகும்தேவ் நாராயணா யாதவ், பிரசாந்த் கிஷோரின் இத்தகைய அறிவிப்பை விமர்சித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹுகும்தேவ் நாராயணா யாதவ், ``முதலில் பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூகவாதி என்று அழைக்காதீர்கள். அவர் ஒரு தொழிலதிபர் அவ்வளவுதான். தொழிலதிபர்களைப் பற்றி மக்கள் இவ்வளவு முக்கியமாக விவாதிக்கும் அளவுக்கு, இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமும் அல்ல, அது சரியானதும் அல்ல. அலைந்து திரிந்து தொழில் செய்யும் அவர், தொழில் ஏதும் கிடைக்காததால், கொஞ்சம் அரசியல் புகழுக்காக தற்போது இந்தத் தொழிலை தொடங்கியுள்ளார்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism