Published:Updated:

தமிழக பா.ஜ.க வழிகாட்டியாக நடந்துகொள்ளும் என எதிர்பார்க்கிறோம்!

- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

- அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

தமிழக அரசு ‘ஒமைக்ரான்’ மிரட்டலுக்குப் பயந்து, பகுதிநேர ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிற சூழலில், ‘ஆளுங்கட்சியினர் மட்டும் தடையேதுமின்றி, மக்களைச் சந்தித்து வருவது நியாயமா?’ என்ற ஆவேசக் குரலை எழுப்பி வருகின்றன எதிர்க்கட்சிகள். இதையடுத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்தித்தேன்....

தமிழக பா.ஜ.க வழிகாட்டியாக நடந்துகொள்ளும் என எதிர்பார்க்கிறோம்!

“ஒமைக்ரான் தொற்று வேகமெடுத்துவரும் இந்த நெருக்கடியான நேரத்தில், ‘அம்மா மினி கிளினிக்’குகளை மூடுவது அவசியமா?’’

“அம்மா மினி கிளினிக் கட்டமைப்பு என்பது, ஓர் அறை, ஒரு போர்டு, ஒரு மருத்துவர்... அவ்வளவுதான். ஒரு செவிலியர் நியமனம்கூட இல்லை. இப்படி அடிப்படைச் சுகாதாரக் கட்டமைப்புகூட இல்லாததை ‘கிளினிக்’ என்றே சொல்ல முடியாது. அடுத்து, ‘ஓராண்டுக்கான தற்காலிக அமைப்பு’ என்றுதான் இதற்கான அரசாணையே கடந்த காலத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயரில் செயல்பட்டுவந்த கட்டடங்களைத்தான் மூடியுள்ளோமே தவிர, இந்தத் திட்டத்திலிருந்த 1,820 மருத்துவர்களையும் கொரோனா தடுப்புப் பணியில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இது தவிர, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ், நேரடியாக வீடுகளுக்கே சென்று மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்துதருகிறோம்.’’

தமிழக பா.ஜ.க வழிகாட்டியாக நடந்துகொள்ளும் என எதிர்பார்க்கிறோம்!

“கொரோனா தொற்றைக் காரணம் காட்டி, எதிர்க்கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசு, கோவையில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட தி.மு.க கூட்டத்துக்கு மட்டும் எப்படி அனுமதி அளித்தது?’’

“அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்தத்தான் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அரங்கக் கூட்டங்களுக்கு இதுவரை தடை ஏதும் விதிக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம், கோவையில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டது, கட்சியின் தொண்டர்கள் கூட்டத்தில்தான். ஒமைக்ரான் பாதிப்போ, ஊரடங்கு உத்தரவோ இல்லாத அந்த நேரத்திலும்கூட பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றித்தான் அந்தக் கூட்டம் நடைபெற்றது. ஆனாலும், தலைவர்களைப் பார்க்கும் ஆர்வத்தில், நமது கட்டுப்பாடுகளையும் தாண்டி திரளான மக்கள் கூடிவிடுகின்றனர்.’’

தமிழக பா.ஜ.க வழிகாட்டியாக நடந்துகொள்ளும் என எதிர்பார்க்கிறோம்!
தமிழக பா.ஜ.க வழிகாட்டியாக நடந்துகொள்ளும் என எதிர்பார்க்கிறோம்!

“ஆனால், எம்.ஜி.ஆர் நினைவுதின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சசிகலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே?’’

“எம்.ஜி.ஆர் நினைவுதினத்தன்று நினைவிடத்துக்கு ஊர்வலமாகச் செல்ல சசிகலா அனுமதி கேட்டிருந்தார். இந்தப் பெருந்தொற்று காலகட்டத்தில், ஊர்வலம் செல்ல யாருக்கும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, அவருக்கும் மறுக்கப்பட்டது. ஆளுங்கட்சியான தி.மு.க-வும், இந்தப் பேரிடர் காலத்தில் இதுவரை எங்கேயும் ஊர்வல நிகழ்ச்சியை நடத்தவில்லை.’’

“வருகிற 12-ம் தேதி, மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கும் சூழலில், கொரோனா பாதுகாப்பு விஷயங்களை எப்படிக் கடைப்பிடிக்க முடியும்?’’

“புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் திறந்துவைக்கிற நிகழ்வு என்பது, விருதுநகர் கல்லூரியில் 1,000 இருக்கைகளைக்கொண்ட அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியாகத்தான் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுவும் ஐ.சி.எம்.ஆர் வகுத்துத் தந்திருக்கும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே நடைபெறவிருக்கிறது.’’

தமிழக பா.ஜ.க வழிகாட்டியாக நடந்துகொள்ளும் என எதிர்பார்க்கிறோம்!
தமிழக பா.ஜ.க வழிகாட்டியாக நடந்துகொள்ளும் என எதிர்பார்க்கிறோம்!

“ஆனால், ‘பிரதமர் முன்னிலையில், 10,000 பேரைக் கூட்டி பொங்கல் விழா நடத்தப்போவதாக’ தமிழக பா.ஜ.க அறிவித்துள்ளதே..?’’

“உலகம் முழுக்க, ஒமைக்ரான் பரவல் ஒரே நாளில் 19 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவிலும் ஒரே நாளில் 37,000 பேருக்குத் தொற்று பரவியிருக்கிறது. நேற்றைய தினம்கூட ஊரடங்கு குறித்த ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு நடத்தியுள்ளது. இதெல்லாம் தமிழக பா.ஜ.க-வினருக்கும் நன்றாகவே தெரியும். அண்மையில் தஞ்சாவூர், திருச்சியில் நடைபெற்ற பயனாளிகள் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, 30,000 பயனாளிகள் தேர்வாகியிருந்தனர். ஆனால், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கருத்தில்கொண்டு, 4,000 பயனாளிகளை மட்டும் தனிமனித இடைவெளிவிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு முதல்வரே அறுவுறுத்திவிட்டார். எனவே, தமிழக பா.ஜ.க-வினரும் வழிகாட்டியாக நடந்துகொள்வார்கள் என்றே எதிர்பார்க்கிறோம்.’’

“கடந்தகாலத்தில், ‘ராணுவத் தளவாடக் கண்காட்சி திறப்புவிழா’வில் கலந்துகொள்ள வந்த பிரதமருக்கு எதிராக ‘கோ பேக் மோடி’ முழக்கமிட்டதே தி.மு.க?’’

“தி.மு.க எப்போதுமே, ‘உறவுக்குக் கை கொடுக்கும்; உரிமைக்குக் குரல் கொடுக்கும். இப்போதும் கூட, மாநில அரசின் உரிமைகளுக்காகவும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. நீட் தேர்வு விலக்குக்காகச் சட்டமன்றத் தீர்மானம் இயற்றுவதில் ஆரம்பித்து, அதை நடைமுறைப்படுத்துவதற்காக ஆளுநர், குடியரசுத் தலைவர், ஒன்றிய அமைச்சரை வலியுறுத்தி வருகிறோம். எனவே, தமிழகத்துக்குத் தேவையான விஷயங்களில் ஒன்றிய அரசை, அணுகவேண்டிய முறையில் அணுகுவதிலும், கொள்கைரீதியாக எதிர்க்கவேண்டிய விஷயங்களில் எதிர்ப்பு தெரிவிப்பதிலும் தி.மு.க தலைமையிலான அரசு மிகச்சரியாகச் செயல்பட்டுவருகிறது. எனவே, அது வேறு... இது வேறு.’’

தமிழக பா.ஜ.க வழிகாட்டியாக நடந்துகொள்ளும் என எதிர்பார்க்கிறோம்!

“இப்போதும்கூட, ‘தமிழக நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் மோடி, தமிழகம் வருவதில் எங்களுக்கு உடன்பாடில்லை’ என்றுதானே உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சொல்லிவருகிறது?’’

“கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் ஏற்படுத்திக்கொள்வது. மற்றபடி அந்தந்தக் கட்சிகளுக்கென்று தனித்தனியே கொள்கைகள் இருக்கின்றன. எனவே, அவரவர் கட்சி சார்ந்த கொள்கையின் வழியே தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிப்பார்கள்தான். கொள்கையளவில், தி.மு.க - பா.ஜ.க இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருக்கின்றனதான். ஆனால், இரு அரசுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய விஷயங்களில் இந்தக் கருத்து முரண்பாடுகளையெல்லாம் பொருத்திப் பார்ப்பது சரியாக இருக்காது!’’