Published:Updated:

``தேசிய மொழியாக இந்தி ஒருபோதும் இல்லை, இருக்கவும் முடியாது" - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

``ஒருபோதும் இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி இருக்காது. நான் ஒரு கன்னடனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

``தேசிய மொழியாக இந்தி ஒருபோதும் இல்லை, இருக்கவும் முடியாது" - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

``ஒருபோதும் இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி இருக்காது. நான் ஒரு கன்னடனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Published:Updated:
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்திருந்த கிச்சா சுதீப் சமீபத்தில் அவருடைய புதிய படத்துக்கான புரொமோஷன் ஒன்றில் பேசியபோது, ``இந்தி இனி ஒருபோதும் தேசிய மொழி கிடையாது" எனப் பேசியிருந்தார்.

அஜய் தேவ்கன்
அஜய் தேவ்கன்

அதற்கு எதிர்வினையாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்தியில் ட்வீட் ஒன்றில், "எனது சகோதரரே... இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழிப் படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்... இந்தி முன்பும், இப்போதும், இனிமேலும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்" எனப் பகிர்ந்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுதீப்
சுதீப்

இதற்கு பதிலளித்த சுதீப், ``நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்குப் புரிந்தது. ஏனென்றால் நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக்கொண்டிருக்கிறோம். புண்படுத்துவது என் நோக்கம் இல்லை. ஆனால், ஒருவேளை என்னுடைய பதிலை நான் கன்னடத்தில் பதிவிட்டிருந்தால் அது உங்களால் எப்படிப் புரிந்துகொள்ள முடிந்திருக்கும்... நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம்" என்றார்.  

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கு அஜய் தேவ்கன், "நீங்கள் என் நண்பர். தவறாக நான் புரிந்துகொண்டதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நாம் எல்லா மொழிகளையும் நேசிக்கிறோம். அதேபோல எல்லோரும் நமது மொழிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று பகிர்ந்திருந்தார். இரு நடிகருக்கு மத்தியில் நடந்த இந்த கருத்து பகிர்வு  நேற்று முழுவதும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தது. 

சித்தராமையா
சித்தராமையா
ட்விட்ட

இந்த நிலையில், இந்த நடிகர்களுக்கு பதிலளிக்கும்விதமாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஒருபோதும் இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி இருக்காது. நான் ஒரு கன்னடனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

நாட்டின் மொழியியல் பன்முகத்தன்மையை மதிக்கவேண்டியது ஒவ்வோர் இந்தியனின் கடமை. ஒவ்வொரு மொழியின் மக்களும் பெருமைப்படுவதற்கு அந்த மொழிக்கென சொந்த, வளமான வரலாறு உள்ளது" என்று பதிந்திருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism