Published:Updated:

ஓராண்டுக்குப் பின் தேர்தல்... அ.தி.மு.க., தி.மு.க. முகாம்களின் `ஏற்பாடுகள்' எப்படி?

எடப்பாடி
எடப்பாடி

அடுத்த ஆண்டில் தேர்தலை எப்படி எதிர் கொள்வது, எவ்வளவு செலவழிப்பது போன்ற விஷயங்களையெல்லாம்கூட இப்போதே தீர்மானித்து விட்டார்களாம். அடுத்த ஆண்டுக்குள் கூட்டணி எப்படியெல்லாம் மாறும் எனத் தெரியவில்லை. ஆனாலும்

"ஓராண்டு கழித்துதான் தேர்தல் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதற்கு இந்த ஆண்டிலேயே தயாரானால்தான் உண்டு என எல்லா கட்சிகளும் களமிறங்கிவிட்டன. ஆளுங்கட்சியைப் பொறுத்தவரை கட்சிக்கான ஒற்றைத் தலைமை, முதல்வர் வேட்பாளர், தேர்தல் செலவு என இந்த ஆண்டுக்குள் பல விஷயங்களை முடிவுசெய்ய வேண்டியிருக்கிறது" என்று விவரிக்கத் தொடங்கினார் கழுகார்.

"அதற்குத்தான் சுற்றுப்பயணம் கிளம்பப்போகிறார்களா?"

"ஆமாம்... ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு மாவட்டவாரியாக அ.தி.மு.க நிர்வாகிகளை தலைமைக் கழகத்துக்கு அழைத்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும், 'கட்சி ஏன் பின்னடைவைச் சந்தித்தது?' என இரண்டு கட்டங்களாக ஆய்வுக்கூட்டம் நடத்தினர். கட்சிக்காரர்கள் ஒருவருக்கொருவர் குழி பறித்துக்கொண்டதையும், அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடமிருந்து பணம் வராததையும் குமுறித் தீர்த்துவிட்டார்கள்.

ஓராண்டுக்குப் பின் தேர்தல்... அ.தி.மு.க., தி.மு.க. முகாம்களின் `ஏற்பாடுகள்' எப்படி?

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள், தலைமைக் கழகத்தின் வாசலுக்கே வந்து மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு எழுந்தது. இந்த ஆய்வுக்கூட்டத்தின் வாயிலாக, மாவட்ட அளவில் உட்கட்சிப்பூசல் கொழுந்துவிட்டு எரிவதை தலைமை தெரிந்துகொண்டது. இதைப் பேசித் தீர்ப்பதற்காகத்தான், தமிழ்நாடு முழுவதும் மாவட்டவாரியாகச் சுற்றுப்பயணம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தயாராகிறார்கள்.

...தனுஷின் 'படிக்காதவன்' படத்தில் 'குண்டூர் உன்து, நெல்லூர் என்து' என்று விவேக் பங்கு பிரிப்பதுபோல், 'கொங்கு பெல்ட்டை நான் பாத்துக்கிறேன். பாண்டிய நாட்டுப் பக்கம் உங்க பொறுப்பு' என்று பன்னீருக்கு அசைன்மென்ட் பிரித்திருக்கிறார்கள். இதேபோல் ஒவ்வொரு வருக்கும் ஏரியா பிரிக்கப்படவுள்ளது. எடப்பாடியும் பன்னீரும் எல்லா ஏரியாக்களுக்கும் தனித்தனியாகப் போவார்களா, சேர்ந்து போவார்களா என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2HXIWHy

அடுத்த ஆண்டில் தேர்தலை எப்படி எதிர் கொள்வது, எவ்வளவு செலவழிப்பது போன்ற விஷயங்களையெல்லாம்கூட இப்போதே தீர்மானித்து விட்டார்களாம். அடுத்த ஆண்டுக்குள் கூட்டணி எப்படியெல்லாம் மாறும் எனத் தெரியவில்லை. ஆனாலும், 150 தொகுதிகளை மட்டும் குறிவைத்து, அந்தத் தொகுதிகளில் இப்போதிருந்தே களப்பணிகளைத் தொடக்கிவிடலாம்; மற்ற தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்குத் தந்துவிடலாம் எனத் திட்டமிட்டிருக்கிறார்களாம்."

"தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் ஏதோ சுற்றுப்பயணம் கிளம்புகிறாராமே?"

"ஆமாம். மார்ச் இறுதியிலிருந்து அவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் கிளம்ப உள்ளார் எனத் தகவல். ஏற்கெனவே 'நமக்கு நாமே' திட்டத்தில் ஊர் ஊராகச் சென்றதுபோல் இப்போது பத்து அம்சத் திட்டங்களுடன் களமிறங்கப்போகிறாராம்."

ஓராண்டுக்குப் பின் தேர்தல்... அ.தி.மு.க., தி.மு.க. முகாம்களின் `ஏற்பாடுகள்' எப்படி?

"சரி... தி.மு.க-வில் ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்பது தெரியும். ஆளுங்கட்சியில் ஊர் ஊராகச் சுற்றுப்பயணம் போகும்போது `அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்?' என்ற கேள்வி எழுமே!"

"இதென்ன கேள்வி... முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான். அதை ஓ.பி.எஸ் வாயாலேயே அறிவிப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன" என்ற கழுகார், அ.தி.மு.க தரப்பில் தேர்தலை எதிர்கொள்ள பெரிய அளவில் பட்ஜெட் போடப்பட்டுள்ளது குறித்து 'அடேங்கப்பா' தகவல்களையும், வெளியே தெரியாத சிலபல ரியாக்‌ஷன்களையும் அவிழ்த்துவிட்டார். அவற்றை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > மிஸ்டர் கழுகு: யாருக்கு எத்தனை கோடி? - எடப்பாடி எலெக்‌ஷன் பட்ஜெட்... அலறும் அமைச்சர்கள்! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-mar-01-2020

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு