Published:Updated:

ஹவாலா வழக்கு: டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது குறித்து அமலாக்கப் பிரிவு சொல்வது என்ன?!

சத்யேந்தர் ஜெயின்

"அரவிந்த் கெஜ்ரிவாலின் நீண்டகால நண்பர்களான அஜித் பிரசாத் ஜெயின் மற்றும் சுனில் குமார் ஜெயின், அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் உத்தரவின் பேரில் பண மோசடி நிகழ்ந்துள்ளது." - அமலாக்கப் பிரிவு

ஹவாலா வழக்கு: டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது குறித்து அமலாக்கப் பிரிவு சொல்வது என்ன?!

"அரவிந்த் கெஜ்ரிவாலின் நீண்டகால நண்பர்களான அஜித் பிரசாத் ஜெயின் மற்றும் சுனில் குமார் ஜெயின், அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் உத்தரவின் பேரில் பண மோசடி நிகழ்ந்துள்ளது." - அமலாக்கப் பிரிவு

Published:Updated:
சத்யேந்தர் ஜெயின்

கடந்த மாதம் 30-ம் தேதி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சுகாதாரம், உள்துறை, மின்சாரம், பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள சத்யேந்தர் ஜெயின் கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்புடைய ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, சத்யேந்தர் ஜெயின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வழக்கு தொடரப்பட்டுள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி-யின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் 16 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார் என அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

சத்யேந்தர் ஜெயின்
சத்யேந்தர் ஜெயின்

இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில், "சத்யேந்தர் ஜெயின், அவரின் குடும்பத்தினர் மற்றும் அவரின் நண்பர்கள் டெல்லியைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களில் பங்குகளை வைத்து கட்டுப்படுத்தி வந்துள்ளனர். சத்யேந்தர் ஜெயின் பொதுப் பங்குதாரராக இருந்த 2015-2016 -ல் ரூ.4.61 கோடி உட்பட 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் இந்த நிறுவனங்கள் மூலம் ரூ.16.4 கோடி அளவுக்குப் பண மோசடி செய்துள்ளனர்.

இந்தத் தொகை சத்யேந்தர் குமார் ஜெயின், அவரின் குடும்ப உறுப்பினர்கள், அவரின் தொழில் கூட்டாளிகளான அஜித் பிரசாத் ஜெயின், சுனில் குமார் ஜெயின் ஆகியோரின் குடும்பத்தினருக்குச் சொந்தமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

2013 டிசம்பரில் டெல்லி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு இயக்குநர் பதவியிலிருந்து தொழில்நுட்பரீதியாக சத்யேந்தர் குமார் ஜெயின் ராஜினாமா செய்திருந்தாலும், குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்களின் மீது சத்யேந்தர் ஜெயின் தனது கட்டுப்பாட்டைத் தொடர்ந்திருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீண்டகால நண்பர்களான அஜித் பிரசாத் ஜெயின், சுனில் குமார் ஜெயின், ஆகியோரின் உத்தரவின் பேரில் பண மோசடி நிகழ்ந்துள்ளது. மேலும், சத்யேந்தர் ஜெயினின் மகள்கள் எந்த ஒரு வணிகத்திலும் பங்கேற்காமல் தங்கள் வங்கிக் கணக்குகளில் பெரும் தொகையை வைத்துள்ளனர். அது தொடர்பான விவரங்களும் எங்களிடம் உள்ளன" என அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism