Published:Updated:

யோகி ஆதித்யநாத்: அன்று குருவுக்காக களமிறங்கிய இளம் சீடர்... மீண்டும் முதல்வரான கதை!

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்திற்கு அரசு நிர்வாக அனுபவம் கிடையாது. ஆனால் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் ராஜ்நாத் சிங்கிற்கு மிகவும் வேண்டப்பட்டவராக தன்னை காட்டிக்கொள்ளும் யோகி, ஆர்.எஸ்.எஸ்-ன் செல்லப்பிள்ளையாக விளங்கி வருகிறார்.

யோகி ஆதித்யநாத்: அன்று குருவுக்காக களமிறங்கிய இளம் சீடர்... மீண்டும் முதல்வரான கதை!

யோகி ஆதித்யநாத்திற்கு அரசு நிர்வாக அனுபவம் கிடையாது. ஆனால் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் ராஜ்நாத் சிங்கிற்கு மிகவும் வேண்டப்பட்டவராக தன்னை காட்டிக்கொள்ளும் யோகி, ஆர்.எஸ்.எஸ்-ன் செல்லப்பிள்ளையாக விளங்கி வருகிறார்.

Published:Updated:
யோகி ஆதித்யநாத்

நாட்டின் அதிகார மையத்தை முடிவு செய்யும் முக்கிய மாநிலமாக விளங்கும் உத்தரப்பிரதேசத்தில் சந்நியாசி ஒருவர் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்க இருப்பது நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற போது யாருமே எதிர்பாரத விதமாக, யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காவி உடையுடன் இருந்த யோகி ஆதித்யநாத்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பிறகுதான் அப்படி ஒரு தலைவர் இருக்கிறார் என்பது நாட்டு மக்களுக்கே தெரிய வந்தது. யோகி 1972-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி ராஜ்புத் குடும்பத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்தார். கோரக்பூரில் உள்ள கோரக்நாத் தலைமை பூஜாரி அவைத்யநாத்தின் சீடராக மாற விரும்பிய யோகி ஆதித்யநாத் தனது 21வது வயதில் குடும்பத்தை விட்டு வெளியில் வந்தார்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

கோரக்நாத் மடம் தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கோரக்நாத் மடத்தின் மடாதிபதியான அவைத்யநாத்தின் நம்பிக்கைக்குறிய சீடராக மாறிய யோகி ஆதித்யநாத் கோயில் பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றுவதில் சிறந்து விளங்கினார். அவரின் குரு அவைத்யநாத் பாஜகவில் சேர்ந்து தேர்தலில் நின்ற போது யோகி ஆதித்யநாத் முதல் முறையாக அவருக்கு பிரசாரம் செய்வதற்காக அரசியலுக்கு வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இளம் வயதில் எம்.பி!

அவைத்யநாத் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் 1998-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கோரக்பூர் தொகுதி பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்ட யோகி ஆதித்யநாத் தனது 26-வது வயதில் இளம் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த 4 மக்களவைத் தேர்தலில் ஒரு முறைகூட யோகி ஆதித்யநாத் தோல்வி என்பதையே பார்த்ததில்லை. தனது 44-வது வயதில் தலையை மொட்டையடித்துக் கொண்டு சந்நியாசி போன்று உடையணிந்து சந்நியாசியாகவே வாழ ஆரம்பித்தார்.

யோகி
யோகி

தனது குரு அவைத்யநாத் மறைந்த போது அக்கோயில் தலைமை பூசாரியாக நியமிக்கப்பட்ட யோகி ஆதித்யநாத் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். அவரின் அர்ப்பணிப்பு உணர்வு தான் அவருக்கு முதல்வர் பதவியை பெற்றுக்கொடுத்துள்ளது என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். ஆன்மீக தலைவராக, நாடாளுமன்ற வாதியாக அறியப்பட்ட யோகி ஆதித்யநாத்திற்கு அரசு நிர்வாக அனுபவம் கிடையாது. ஆனால் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் ராஜ்நாத் சிங்கிற்கு மிகவும் வேண்டப்பட்டவராக தன்னை காட்டிக்கொள்ளும் யோகி ஆதித்யநாத், பாஜக தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் செல்லப்பிள்ளையாக விளங்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே முதல்வர் பதவி அவரை எளிதில் தேடி வந்தது. மோடிக்கு பிறகு யோகியைத்தான் பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்த திட்டமிட்டு இருக்கிறது என தகவலும் அவ்வப்போது கிசுகிசுக்கும். அதற்கு தற்போது சட்டமன்ற தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யோகி ஆதித்யநாத் அடிக்கடி மத உணர்வை தூண்டும் விதமாக சர்ச்சைக்குறிய வகையில் பேசி இருக்கிறார். அவரது சர்ச்சைக்குறிய கருத்துக்கள் மூலமும் மக்களால் அவர் அறியப்பட்டார்.

யோகி, மோடி
யோகி, மோடி

வன்முறை, கொலை முயற்சி, சர்ச்சைகுறிய வகையில் பேசியது என பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் யோகி ஆதித்யநாத் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. ஆனால் இப்போது உத்தரப்பிரதேசத்தில் பாஜக இரண்டாவது முறையாக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வராக பதவியேற்க இருக்கிறார். இந்த வெற்றி யோகி ஆதித்யநாத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism