Published:Updated:

கேப்டன் 2.0 - ``நடைப்பயிற்சி செய்கிறார், வேகமாக குணமாகிவருகிறார்!"

குடும்பத்துடன் விஜயகாந்த்
குடும்பத்துடன் விஜயகாந்த்

தொடர்ந்து இருபது நாள்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டார் கேப்டன். அவரது ஆர்வத்தினாலும் ஒத்துழைப்பாலும் நல்ல பலன் கிடைத்துவருகிறது. தினமும் ஏழு மணி நேரம் ஆழ்ந்து உறங்குகிறார்

"உலகெங்கும் வாழும் தமிழர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அப்படி ஒரு கொடுப்பினை கேப்டனுக்குக் கிடைத்திருக்கிறது. அத்தனை பேரின் பிரார்த்தனைகளும் பலிக்கப்போகின்றன. புத்தம் புது கேப்டனாக ஒரு சில மாதங்களில் உங்கள் முன் வந்து நிற்கப்போகிறார் அவர்" என்கிறார் எம்.என்.சங்கர்.

யார் இந்த எம்.என்.சங்கர்?!

சென்னை, தி.நகரைச் சேர்ந்த அக்குபங்சர் நிபுணர். கடந்த சில வாரங்களாக விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளித்துவருபவர்.

"தொடர்ந்து இருபது நாள்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டார் கேப்டன். அவரது ஆர்வத்தினாலும் ஒத்துழைப்பாலும் நல்ல பலன் கிடைத்துவருகிறது. தினமும் ஏழு மணி நேரம் ஆழ்ந்து உறங்குகிறார். இப்படி அவர் நிம்மதியாகத் தூங்கி ஏழு வருடங்களாச்சு என்றார் பிரேமலதா மேடம்.

சுவாசக்குழாயையும் உணவுக்குழாயையும் பிரித்து மூடும் தொண்டைப்பகுதியில் இருக்கும் வால்வு சரியாகச் செயல்படாததால் மூச்சு விடச் சிரமம் இருந்தது அவருக்கு. அதனால் தூக்கமின்றிச் சிரமப்பட்டார். விக்கல் வந்தால் பல நிமிடங்கள் நீடிக்கும். இப்போது அந்தப் பிரச்னைகளெல்லாம் தொலைந்துவிட்டன" என்றார் சங்கர்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

அதுமட்டுமல்ல... பிறரது உதவியுடன் கைத்தாங்கலாக மட்டுமே நடக்கும் நிலையில் இருந்த விஜயகாந்த் இப்போது யாருடைய உதவியும் இல்லாமல் நன்றாக நடக்கிறாராம்.

"தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்கிறார் இப்போது. தூக்கம் சரியாக இல்லாததால் நரம்பு மண்டலத்தில் சிறிய பாதிப்பு இருந்தது. அதனால்தான் பேச்சிலும் தடுமாற்றம் இருந்தது. இதுவரை அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சைகளெல்லாம் அவர் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான சிகிச்சைகளாகவே இருந்தன.

ஆனால், இப்போது பிரச்னைகளின் மூல காரணம் தூக்கமின்மைதான் என்பதைக் கண்டறிந்து அதைக் குணப்படுத்தியதால் மிகவும் வேகமாக குணமாகிவருகிறார் விஜயராஜ் அண்ணன்" என்றார் சங்கர்.

ஆம், விஜயராஜ் அண்ணன் என்றே விஜயகாந்தைக் குறிப்பிடுகிறார் சங்கர். காரணம், விஜயகாந்த் படித்த தேவகோட்டை டிபிரிட்டோ பள்ளிக்கூடத்தில், அதே காலகட்டத்தில் படித்த ஜூனியர் இவர். இருவருமே ஹாஸ்டல்வாசிகள். இப்போது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நடத்திவரும் வாட்ஸப் குழுவில் பழைய மாணவர் விஜயராஜ் ஆகவே சுறுசுறுப்பாக இயங்குகிறாராம் விஜயகாந்த்.

ஆமாம், விரைவில் நடக்கவிருக்கிறது 'கேப்டன் 2.O' அவதாரம்!

பள்ளி, கல்லூரி கால விஜயகாந்த் பற்றிய நினைவலைகளுடன், அவருக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து விரிவாக சங்கர் பகிர்ந்ததை, ஆனந்த விகடன் கவர்ஸ்டோரியில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > "உடல்நலம் தேறியாச்சு மக்களே!" - உற்சாகத்தில் விஜயகாந்த் https://bit.ly/3go1K1t

* Vikatan App-ல் முழு கட்டுரையை வாசிப்போர், கீழேயுள்ள Also Read தலைப்பைக் க்ளிக் செய்து வாசிக்கலாம்.

“உடல்நலம் தேறியாச்சு மக்களே!” - உற்சாகத்தில் விஜயகாந்த்

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு