Published:Updated:

ஆம் ஆத்மி: ``தேசத் துரோகிக்கு இன்னும் எவ்வளவு நாள் ஆதரவு அளிப்பீர்கள்?" - ஸ்மிருதி இரானி கேள்வி

ஸ்மிரிதி இரானி

`16.39 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் இன்னுமா உங்கள் அரசில் அமைச்சராக இருக்கிறார்? ஊழல் துரோகத்துக்குச் சமம் என்று சொன்னீர்கள்.' - ஸ்மிரிதி இரானி

ஆம் ஆத்மி: ``தேசத் துரோகிக்கு இன்னும் எவ்வளவு நாள் ஆதரவு அளிப்பீர்கள்?" - ஸ்மிருதி இரானி கேள்வி

`16.39 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் இன்னுமா உங்கள் அரசில் அமைச்சராக இருக்கிறார்? ஊழல் துரோகத்துக்குச் சமம் என்று சொன்னீர்கள்.' - ஸ்மிரிதி இரானி

Published:Updated:
ஸ்மிரிதி இரானி

ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசில் சுகாதாரம், உள்துறை, மின்சாரம், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின், கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்புடைய ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரின் கைது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால்,``ஆம் ஆத்மி கட்சி ஒரு நேர்மையான அரசியல் கட்சி. இது முற்றிலும் போலியானது, அரசியல் காரணங்களுக்காக அவர் வேண்டுமென்றே சிக்கவைக்கப்படுகிறார். சத்யேந்திர ஜெயின் சுத்தமானவராகவே வெளியே வருவார்" எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

சத்யேந்தர் ஜெயின்
சத்யேந்தர் ஜெயின்

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ஷெல் நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் அமைச்சர் ஜெயினின் மனைவி பெயரில் இயங்குவது உண்மைதானே? 2010-11 முதல் 2015-2016 வரை ஷெல் நிறுவனங்கள்மூலம் ஜெயின் ரூ.16.39 கோடி மோசடி செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அதே போல டெல்லியில் உள்ள பல்வேறு காலனிகளைச் சுற்றியிருக்கும் நிலங்களை ஷெல் கம்பெனிகள் மூலம் சத்யேந்தர் ஜெயின் கையகப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக கெஜ்ரிவால் பதிலளிப்பாரா? ஊழல் தடுப்புச் சட்டத்தில் சத்யேந்திர ஜெயின் முதன்மை குற்றவாளி என்பது உண்மைதானே?

16.39 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் இன்னுமா உங்கள் அரசில் அமைச்சராக இருக்கிறார்? ஊழல் துரோகத்துக்குச் சமம் என்று சொன்னீர்கள். 'தேஷ் கா கதர்'(தேசத் துரோகி)சத்யந்தர் ஜெயின் உங்கள் ஆதரவை இன்னும் எவ்வளவு காலம் பெறுவார்?" எனக் கேள்வி எழுப்பினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism