Published:Updated:

ஹார்பிக் விளம்பர அப்பாஸ் போல காந்தியை டீல் செய்யும் பி.ஜே.பி அரசு!

காந்தியத்தை எதிரியாகக் கொண்டவர் சாவர்க்கர். அகிம்சையை எள்ளி நகையாடியவர். காந்தி கொலையிலும் குற்றம்சாட்டப்பட்டவர். 'இந்தியா, மதம் அடிப்படையில் பிளவுபட வேண்டும்' என பாரதமாதாவின் நெஞ்சில் பாதம் தூக்கி வைத்தவர்.

காந்தி
காந்தி

ஆச்சர்யமாக இருக்கிறது, எங்கு திரும்பினாலும் 'பாபு... பாபு...' என்று காந்தி பாசத்தில் கரைகிறார்கள் பா.ஜ.க-வினர்.

இது போதாதென, நான்கு மாதங்களுக்கு நடைப்பயணப் பேரணியையும் அறிவித்திருக்கிறார்கள். நாடகத்தை, பெயர் இல்லாமல் அரங்கேற்ற முடியாதல்லவா... அதனால் அதற்கு ஒரு பெயரையும் வைத்திருக்கிறார்கள். 'காந்தி சங்கல்ப யாத்ரா'வை அக்டோபர் 2-ம் தேதி தலைநகர் டெல்லியில் அமித் ஷா தொடங்கி வைத்திருக்கிறார். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அத்தனை மக்கள் பிரதிநிதிகளும் நாள் ஒன்றுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் கிராமங்களை நோக்கி நடக்கவேண்டும் என்பது உத்தரவு. இதன்மூலம், 'காந்தியின் உண்மையான வாரிசுகள் நாங்கள்தான்' என்று நிறுவப் போகிறார்களாம். என்ன ஒரு பாபு பாசம்! விரிவான கட்டுரையை படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2PwEsMO

காந்தி அரசியல்வாதி. ஜனநாயகம் பேசியவர். சமத்துவம் பேசியவர். தனிமனித உரிமைகளைப் பேசியவர். அப்படிப்பட்டவரை, ஏதோ....

'ஏன்... காந்தியைப் பற்றி பா.ஜ.க பேசக்கூடாதா?' என்று சிலர் கேட்கக்கூடும். பேசலாம். காந்தி, எவரின் தனிப்பட்ட சொத்தும் அல்ல. ஆனால், அதற்கு ஒரு தார்மிகம் வேண்டும். காங்கிரஸ், காந்தியைக் கண்டுகொள்ளாத கட்சிதான். ஆனால், காந்தியைப் பற்றி தவறாகப் பேசிவிட்டு, அந்தக் கட்சியில் இருக்க முடியாது. அந்தக் கட்டாயத்தை காங்கிரஸ் கொண்டிருக்கிறது. அதுவே, காந்தியைக் கொண்டாடும் தார்மிகத்தையும் அவர்களுக்கு அளிக்கிறது.

இங்கே மூன்று தரப்புகள் இருக்கின்றன. முதலாவது, காந்தியை விரும்பும் தரப்பு. இரண்டாவது, காந்தியை விரும்புவதுபோல் நடிக்கும் தரப்பு. மூன்றாவது, காந்தியை முற்றிலுமாக வெறுக்கும் தரப்பு. முதல் மற்றும் மூன்றாவது தரப்புகள் பிரச்னை இல்லை. நேரடியானவர்கள். ஆதரிப்பதெனில் நேரடியாக ஆதரிப்பார்கள். எதிர்ப்பதெனில் நேரடியாக எதிர்ப்பார்கள். ஆனால், இரண்டாவது தரப்பு ஆபத்தானது. ஏனெனில், அது போலியானது. அந்த இரண்டாம் தரப்பிலிருந்து வந்த கட்சிதான் பா.ஜ.க. அதன் பிரதிநிதிகள் தான் இன்று அதிகாரத்தில் இருக்கும் மோடியும் அமித் ஷாவும்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய க்ளிக் செய்க... > http://bit.ly/2MuIi5Z |

காந்தியத்தை எதிரியாகக் கொண்டவர் சாவர்க்கர். அகிம்சையை எள்ளி நகையாடியவர். காந்தி கொலையிலும் குற்றம்சாட்டப்பட்டவர். 'இந்தியா, மதம் அடிப்படையில் பிளவுபட வேண்டும்' என பாரதமாதாவின் நெஞ்சில் பாதம் தூக்கி வைத்தவர். இப்படிப்பட்டவருக்கு குரு வழிபாடு நடத்திக்கொண்டு, 'நாங்கள்தான் காந்தியின் வாரிசுகள்' எனச் சொன்னால் எப்படி நம்புவது? இதனாலேயே பா.ஜ.க-வின் காந்தி பாசத்தை, 'Paradox' என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். Paradox என்றால், குழப்பமானது, சிக்கலானது, முரணானது என அர்த்தம்.

மோடி
மோடி

காந்தி அரசியல்வாதி. ஜனநாயகம் பேசியவர். சமத்துவம் பேசியவர். தனிமனித உரிமைகளைப் பேசியவர். அப்படிப்பட்டவரை, ஏதோ ஹார்பிக் விளம்பரத்தில் வரும் அப்பாஸ் போல டீல் செய்துகொண்டிருக்கிறது இந்த அரசு... எப்படி?

- இந்தக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > காந்தி வேண்டும், காந்தியம் வேண்டாமா? https://www.vikatan.com/news/politics/for-bjp-gandhi-is-needed-but-not-gandhian-principles

"தமிழ்நாடு மட்டுமே நீட் பிரச்னையை புரிந்துவைத்திருக்கிறது!"

"காந்தி கொண்டுவந்த கல்விமுறை இதுவல்ல!"

அனில் சட்கோபால், கல்விச் செயற்பாட்டாளர்; டெல்லி பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர்; நீட் தேர்வுக்கு எதிராக விழிப்புஉணர்வு ஏற்படுத்த இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்பவர். புத்தக வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்.

"கல்விக்கொள்கை வரைவு, நீட், யூ.ஜி.சி கமிட்டியைத் திரும்பப் பெறுதல் என மத்திய அரசு பல மாற்றங்களைச் செய்துவருகிறது. எதை நோக்கிப் பயணிக்கிறது இந்த அரசு?"

அனில் சட்கோபால்
அனில் சட்கோபால்

"... இது செயல்படுத்தப்பட்டால், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பின்தங்கிய கிராமங்களிலும் மலைக்கிராமங்களிலும் இருக்கும் பள்ளிகள், செயல்திறன் இல்லாதவையாகக் கருதப்படும். நிதி ஒதுக்கீடு நிறுத்தப்படும். தமிழக அரசு ஏற்கெனவே இதைச் செயல்படுத்தத் தொடங்கி விட்டது. சரியாக இயங்காத பள்ளிகள் மூடப் படுகின்றன அல்லது அருகில் இருக்கும் பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன. இதுவும் மூடப்படுவதற்கு சமம்தான். இதன்மூலம் அரசுப் பள்ளிகள் அழிவை நோக்கிச் செல்கின்றன. அதை நோக்கியே பயணிக்கிறது மத்திய அரசு." விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2Wqkzs9

"இதன் தாக்கம் எப்படியிருக்கும்?"

"கல்வியை வெறும் திறன் அறியும் பண்டமாக மட்டுமே அணுகி, அதன் பயனைக் குறைக்கப் பார்க்கிறார்கள். கேட்டால், 'காந்தி கொண்டுவந்த கல்விமுறை இது' என்கிறார்கள். காந்தி, திறன் மேம்பாட்டை கல்வியின் ஆதாரங்களில் ஒன்றாக மட்டுமே வலியுறுத்தினார். சாதிக்கு ஒரு கல்வி என்று அவர் சொல்லவில்லை. தவிர, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆறாம் வகுப்புக்குச் செல்ல, தேர்வு எழுத வேண்டும். இரு வாய்ப்புகள் மட்டுமே. இரண்டாவது முறையும் அவர் தகுதி பெறவில்லையெனில், பள்ளிக் கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு அனுப்பப்படுவார். இதனால், ஏராளமான மாணவர்கள் பள்ளிக்கல்வியிலிருந்து வெளியேறும் ஆபத்து ஏற்படும். அவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் என்பதுதான் வேதனை."

- ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள விரிவான பேட்டியை வாசிக்க > "தமிழ்நாடு மட்டுமே நீட் பிரச்னையை புரிந்துவைத்திருக்கிறது!" - அனுபவத்தைச் சொல்கிறார் அனில் சட்கோபால் https://www.vikatan.com/news/general-news/professor-anil-sadgopal-appreciates-tamil-nadus-stand-on-neet

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய க்ளிக் செய்க... > http://bit.ly/2MuIi5Z |