Published:Updated:

பெரியார் மண்ணில் அத்திவரதர் வைபவத்துக்கு மக்கள் குவிந்தது ஏன்? - வீரமணி பதில்

விகடன் டீம்

இது ஒரு பக்தி போதை. பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதனுக்கு இருக்கும் பலவீனங்களில் ஒன்றான மூடநம்பிக்கை, இன்றும் இருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்

veeramani
veeramani

'பெரியார் சிலைகளுக்குக் கீழே இடம்பெற்றுள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் நீக்கப்பட வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வாதாடி வெற்றிபெற்றிருக்கிறார் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி. அவரைச் சந்தித்தோம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2lJN6uA

" 'நூறு ஆண்டுகள் கழித்து, 'இவர் ஒரு புது சாமியார்' என்று என் சிலையை வணங்க ஆரம்பித்துவிடுவார்கள். அதற்காகத்தான் என் சிலைக்குக் கீழே கடவுள் மறுப்பு வாசகம் கட்டாயம் இருக்க வேண்டும்' என்று பெரியார் கூறியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களை வைத்தோம். நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த உண்மையை விளக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. வழக்கு தொடர்ந்தவருக்கு நன்றி" என்றவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதனுக்கு இருக்கும் பலவீனங்களில் ஒன்றான மூடநம்பிக்கை, இன்றும் இருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

"பெரியாரின் தொண்டரான கருணாநிதிக்கு ராசிபுரத்தில் கோயில் கட்ட, பூமி பூஜையெல்லாம் போடுகிறார்களே?"

"அருந்ததியர் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கொடுத்ததற்காக கலைஞருக்கு நன்றி தெரிவிக்க, கோயில் கட்டுவதாகச் சொல்கிறார்கள். பூமி பூஜை போட்டதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. எங்கள் அளவுக்கு மற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அரசியல் கட்சிகள் எதுவும் திராவிடர் கழகம்போல் செயல்பட முடியாது."

"தமிழ்நாடு பெரியாரின் பூமி என்கிறீர்கள். ஆனால், அத்திவரதர் வைபவத்துக்கு லட்சணக்கில் மக்கள் குவிந்தார்களே?"

"இது ஒரு பக்தி போதை. பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதனுக்கு இருக்கும் பலவீனங்களில் ஒன்றான மூடநம்பிக்கை, இன்றும் இருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். மூடநம்பிக்கையையும் எதிர்த்துப் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். போக வேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது.

rajini
rajini

இது பெரியார் மண் என்பதற்கு அடையாளமாக, சமூகநீதி இருக்கிறது. 69 சதவிகித இடஒதுக்கீடு இந்தியாவில் வேறு எந்த மாநிலத் திலாவது உண்டா? ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி-காரர்களால்கூட, இடஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழகத்தில் பேச முடியாத நிலை இருக்கிறது. அதுதான் பெரியார் மண் என்பதற்கான அடையாளம். திருவிழாக் கூட்டத்தை வைத்துக் கணக்குப்போடுவது தவறு."

- இத்துடன், தமிழிசையை வாழ்த்தியது, பி.ஜே.பி-யில் ரஜினி வந்தால் தமிழகத்தில் தாமரை மலருமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள கி.வீரமணியின் ஜூனியர் விகடன் பேட்டியை முழுமையாக வாசிக்க > ரஜினியை தலைவராக நியமித்தாலும் தாமரை ஒருபோதும் மலராது! https://www.vikatan.com/government-and-politics/veeramani-says-bjp-wont-rule-tamil-nadu-even-if-they-are-backed-by-rajinikanth

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/