Published:Updated:

``மோடியை என்னால் அடிக்கவும் அவமானப்படுத்தவும் முடியும்..." - காங்., பிரமுகர் சர்ச்சைப் பேச்சு!

நானா பட்டோலே

``அரசிடம் எந்தவித ஒப்பந்தமும் பெற்றது கிடையாது. என்னிடம் யார் வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்கிறேன். அதனால் என்னால் மோடியை அடிக்க முடியும். அவமானப்படுத்தவும் முடியும்." - நானா பட்டோலே.

``மோடியை என்னால் அடிக்கவும் அவமானப்படுத்தவும் முடியும்..." - காங்., பிரமுகர் சர்ச்சைப் பேச்சு!

``அரசிடம் எந்தவித ஒப்பந்தமும் பெற்றது கிடையாது. என்னிடம் யார் வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்கிறேன். அதனால் என்னால் மோடியை அடிக்க முடியும். அவமானப்படுத்தவும் முடியும்." - நானா பட்டோலே.

Published:Updated:
நானா பட்டோலே

மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா பட்டோலே அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து சிக்கலில் மாட்டிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், தற்போது பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். பண்டாரா மாவட்டத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு கிராமத்தினர் மத்தியில் நானா பட்டோலே பேசிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் அவர், ``நான் அரசியலில் 30 ஆண்டுகளாக இருக்கிறேன். ஐந்து ஆண்டுகளில் ஓர் அரசியல்வாதியால் ஒட்டுமொத்த சந்ததிக்கு தேவையான சொத்தைச் சேர்க்க முடிகிறது. இரண்டு சந்ததிகளுக்குத் தேவையான பள்ளிகள், கல்லூரிகளைக் கட்டிவிடுகின்றனர். எனக்கு ஒரு பள்ளியும் கிடையாது.

அரசிடம் எந்தவித ஒப்பந்தமும் பெற்றது கிடையாது. என்னிடம் யார் வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்கிறேன். அதனால் என்னால் மோடியை அடிக்க முடியும். அவமானப்படுத்த முடியும்" என்று தெரிவித்திருந்தார்.

நானா பட்டோலே
நானா பட்டோலே

நானா பட்டோலேவின் இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதையடுத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் பொதுச்செயலாளர் அதுல் லோண்டே இது குறித்து சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். ``மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர், பிரதமர் மோடியைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. சில உள்ளூர் ரௌடிகள் மோடியின் பெயரைக்கொண்டுள்ளனர். உள்ளூர் மக்கள், மோடி பெயர்கொண்ட ரௌடி குறித்து நானா பட்டோலேயிடம் புகார் செய்துள்ளனர். அந்த ரௌடி குறித்துத்தான் நானா பட்டோலே பேசியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி
பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி

இந்த விவகாரம் தொடர்பாக, மகாராஷ்டிரா மற்றும் கோவா பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி.ரவி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ``பிரதமர் மோடியைத் தன்னால் அடிக்க முடியும், அவமானப்படுத்த முடியும் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே தெரிவிக்கிறார். பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது தற்காலிகமாக நடந்ததுதானா என்று தெரியவில்லை. 138 கோடி இந்தியர்களின் பிரார்த்தனை பிரதமர் மோடியைக் காப்பாற்றும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நானா பட்டோலேவின் கருத்துக்கு மகாராஷ்டிரா எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism