Published:Updated:

``காங்கிரஸ் கட்சிக்கு நான் தேவையில்லை; தானாகவே புத்துயிர் பெறும்” - பிரசாந்த் கிஷோர் சொல்வதென்ன?

பிரசாந்த் கிஷோர்

``காங்கிரஸ் கட்சிக்கு நான் தேவையில்லை. தானாகவே புத்துயிர் பெறும்’’ என்றும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.

``காங்கிரஸ் கட்சிக்கு நான் தேவையில்லை; தானாகவே புத்துயிர் பெறும்” - பிரசாந்த் கிஷோர் சொல்வதென்ன?

``காங்கிரஸ் கட்சிக்கு நான் தேவையில்லை. தானாகவே புத்துயிர் பெறும்’’ என்றும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
பிரசாந்த் கிஷோர்

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கடந்த சில நாள்களாக காங்கிரஸ் கட்சியில் சேருவது குறித்து அக்கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்திவந்தார். அதோடு 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசித்துவந்தார். இதற்காக பிரசாந்த் கிஷோர் பல முறை சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். அதோடு 2024-ம் ஆண்டு தேர்தலைச் சந்திப்பதற்கான செயல் திட்டத்தையும் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தார். இதில் இரு தரப்பினரிடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

பிரசாந்த் கிஷோர் இந்தச் சந்திப்பின்போது பிரியங்கா காந்தியைக் கட்சித் தலைவராக்கும்படி கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் அதைக் கட்சித் தலைமை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதையோ அல்லது அக்கட்சியில் இணைவதையோ கைவிட்டுவிட்டார். பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் முடிவு அனைவருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

ராகுல் காந்தி, பிரசாந்த், பிரியங்கா
ராகுல் காந்தி, பிரசாந்த், பிரியங்கா

இது குறித்து பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், ``காங்கிரஸ் தலைமையும் நானும் கட்சியின் எதிர்காலத்துக்காகச் செய்யப்பட்ட பல திட்டங்களை ஏற்றுக்கொண்டோம். ஆனால், அந்தத் திட்டங்களை காங்கிரஸ் கட்சியே நிறைவேற்றும். அதற்குக் கட்சியில் ஏராளமான தலைவர்கள் இருக்கின்றனர். நான் தேவையில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் தேவையில்லை. அக்கட்சியே புத்துயிர் பெறும். கட்சியில் எனக்கு எந்தப் பொறுப்பும் தேவையில்லை. ஆனால் கட்சியின் எதிர்காலத்துக்கு உருவாக்கப்பட்ட திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றுதான் விரும்பினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் சொன்னபடி 2014-ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி முதன்முறையாக எதிர்காலத் திட்டம் குறித்தும், கட்சியைப் புனரமைப்பது குறித்தும் ஆலோசித்தது. ஆனால் அதற்கான செயல் திட்டத்தை நிறைவேற்றும் குழுவில் நான் இடம்பெற வேண்டும் என்று விரும்பினர். நான் அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் விரும்பினர். ஆனால் நான் ஏற்கவில்லை. கட்சிக்கு ராகுல் காந்தி தலைவராக வேண்டுமா அல்லது பிரியங்கா காந்தி தலைவராக வேண்டுமா என்பது குறித்து தனிப்பட்ட முறையில் விவாதித்ததை யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது. ராகுல் காந்தி எனது நண்பர். ராகுல் காந்தி எந்தப் பதவியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நான் யார்... பாஜக-வால் மிகவும் சேதப்படுத்தப்பட்ட ராகுல் காந்தியின் இமேஜை மீண்டும் கொண்டு வர முடியும். பிரதமர் நரேந்திர மோடியின் இமேஜ் 2002-ல் எப்படி இருந்தது... இப்போது எப்படி இருக்கிறது... அது போன்று ராகுல் காந்தியின் இமேஜை மீண்டும் கொண்டு வர முடியும். காங்கிரஸ் கட்சிக்காக நான் செய்த இந்தப் பணிகளுக்காக பணம் எதுவும் வாங்கவில்லை” என்று தெரிவித்தார்.

சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தி
சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தி

பாஜக-வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்துக் கேட்டதற்கு, ``காங்கிரஸ் கட்சி மிகவும் கட்டமைப்புகொண்ட ஒன்று. அக்கட்சி மீண்டு வராது என்று கூறுவது தவறு. அவர்கள் சில மாற்றங்களைச் செய்தால் பாஜக-வை எதிர்த்து வெற்றி பெற முடியும். 2024-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து யார் போட்டியிடப்போகிறார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து மக்களவைத் தேர்தலை கணிக்க முடியாது” என்று தெரிவித்தார். பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவைச் சந்தித்தார். பின்னர், சட்டமன்றத் தேர்தலுக்காக அவரின் கட்சிக்காகப் பணியாற்ற ஐபேக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism