Published:Updated:

``இறந்து போன கட்சியை பற்றி பேச விரும்பவில்லை!” - ராஜ் தாக்கரே கட்சி குறித்து ஆதித்ய தாக்கரே

ஆதித்ய தாக்கரே

ராஜ்தாக்கரேயின் இறந்து போன கட்சியைப்பற்றி பேசவிரும்பவில்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மகன் தெரிவித்துள்ளார்.

``இறந்து போன கட்சியை பற்றி பேச விரும்பவில்லை!” - ராஜ் தாக்கரே கட்சி குறித்து ஆதித்ய தாக்கரே

ராஜ்தாக்கரேயின் இறந்து போன கட்சியைப்பற்றி பேசவிரும்பவில்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மகன் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ஆதித்ய தாக்கரே

நீண்ட நாள்களாக எந்த வித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கடந்த மாதம் திடீரென மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கியை அகற்றாவிட்டால் மசூதிக்கு வெளியில் ஒலி பெருக்கியை கொண்டு அனுமன் பாடல்களை பாடப்போவதாக அறிவித்தார். அதோடு மே 4-ம் தேதிக்கு பிறகு மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கியை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு ராஜ்தாக்கரே கெடு விதித்திருந்தார்.

இதையடுத்து ராஜ் தாக்கரே கட்சியை சேர்ந்த 24 ஆயிரம் பேருக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். மேலும் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரை வழிபாட்டுத்தலங்களில் இருக்கும் ஒலி பெருக்கியை பயன்படுத்தக்கூடாது என்று மாநில அரசும் அறிவித்திருக்கிறது.

ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே

இந்நிலையில் மாநில அரசு தங்களது கட்சி தொண்டர்கள் 24 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பியும், தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் கைதும் செய்து துன்புறுத்துவதாகவும், அதிகாரம் நிரந்தரம் இல்லை என்றும் போலீஸாரை தவறாக பயன்படுத்தவேண்டாம் என்று ராஜ்தாக்கரே முதல்வர் உத்தவ்தாக்கரேயிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ராஜ்தாக்கரேயின் இக்கடிதம் குறித்து மகாராஷ்டிரா அமைச்சரும் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரேயிடம் கேட்டதற்கு, ``இறந்து போன கட்சியைப்பற்றி பேச விரும்பவில்லை” என்று தெரிவித்திருந்தார். இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீலிடம் கேட்டதற்கு, ``போலீஸார் தங்களது கடமையை செய்கின்றனர். சட்டத்தை மீறியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க ராஜ் தாக்கரே உதவவேண்டும்” என்று தெரிவித்தார்.

மற்றொரு சிவசேனா தலைவர் அனில் பரப் அளித்த பேட்டியில், ``நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது எங்களை வீட்டில் இருந்து இழுத்துச்சென்றார்கள். சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் கிடையாது” என்று தெரிவித்தார். இது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் தேவேந்திர பட்நவிஸ், ``அனுமான் பாடல் பாடியவர்களை தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்பவர்களிடம் ராஜ் தாக்கரே எதையும் எதிர்பார்க்ககூடாது. நாங்கள் அதற்காகத்தான் போராடுகிறோம். ராஜ்தாக்கரேயும் போராட வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism