Election bannerElection banner
Published:Updated:

`யார் அவர்..?' - கோவையில் ஷாக் கொடுத்த சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன்
சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கோவை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``நமது நாட்டின் பெயரைக் கெடுக்க பல நாடுகளுக்கு அக்கறை இருக்கிறது. இந்து சமுதாயத்தில் ஒரு ஒற்றுமை வந்துள்ளது. சி.ஏ.ஏ சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்றும் இல்லை.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

யாருடைய குடிமகன் அந்தஸ்தையும் நாங்கள் புடுங்கப்போவதில்லை. 1947-ம் ஆண்டு முதல் ஓடிவந்தவர்களுக்குக் குடிமகன் அந்தஸ்து தராமல் இருந்தார்கள். நாங்கள் அதை முடித்துக் கொடுத்தோம். இதைக் குற்றம் கூறுகிறார்கள் வேலைவாய்ப்பு ஒன்றுதான் குறைந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையில்தான் உள்ளது.

ரஜினி, சோவின் நிகழ்ச்சியில் பேசியதுபோல் மறுபடியும் பேசினால் நான் அவருக்கு ஆதரவு தருவேன். கட்சிக் கூட்டணி என்றிருந்தால் அதில் எனக்கு அக்கறை கிடையாது. பா.ஜ.க தனித்தே நின்று தமிழகத்தில் வெற்றி பெற முடியும். ஆனால், அந்த முயற்சி இதுவரைக்கும் நடக்கவில்லை.

ரஜினி
ரஜினி

தமிழகத்தில் அடுத்த ஆண்டுதான் தேர்தல் நடக்க உள்ளது. அதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. அ.தி.மு.க பின்னணியில் பா.ஜ.க இயங்குவதாகத் தெரியவில்லை.

ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவது என்பது தவறில்லை. ஆனால், பொய் சொல்லி, அச்சம் உண்டாக்கி ஆர்ப்பாட்டம் செய்வது தேவையில்லை. சசிகலா சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் நிறைய மாற்றங்கள் இருக்கும். சசிகலா பின்னால் ஒரு சமுதாயம் நிற்கிறது.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

சசிகலா வெளியில் வந்த பிறகு, அவர் இல்லாமல் அரசியல் செய்வது மிகவும் கடினம். தமிழகத்தில் அனைவரும் சினிமா மட்டும் பார்ப்பார்கள். ஆனால், சட்டம் படிக்க மாட்டார்கள்.

இந்தியா, அமெரிக்கா நெருங்கி வந்தால் சீனாவிற்கு ஆபத்து வரும். அமெரிக்காவும் சீனாவும் சண்டையிட்டுக்கொண்டால் நாம் யாருக்கு ஆதரவாக இருக்கப் போகிறோம் அல்லது நடுநிலையாக இருக்கப்போகிறோமா என்ற கேள்வி மட்டுமே. ஆனால், சீனாவுடன் நல்லுறவு வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. என்.பி.ஆர் வரவே இல்லை. அதற்கு முன்னதாக அதைப்பற்றி ஆலோசனை செய்வது தவறு. யாருக்கெல்லாம் குடியுரிமை கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்டது. இனிமேல் யாராவது வெளியிலிருந்து வந்தால் புதுச்சட்டம் கொண்டு வர வேண்டும். இந்தச் சட்டத்தில் மாற்றம் செய்ய இயலாது” என்றார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இந்நிலையில், கமல்ஹாசன் அரசியல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, யார் அவர் என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு நகர்ந்தார் சுப்பிரமணியன் சுவாமி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு