Election bannerElection banner
Published:Updated:

ஆத்தூர்: எதிர்த்து போட்டியிட்ட அனைவரின் டெபாசிட்டும் காலி! - சொன்னதைச் செய்து முடித்த ஐ.பி

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நபராகவும் ஐ.பெரியசாமி பார்க்கப்படுகிறார்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியும் ஒன்று. தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியின் கோட்டை என அழைக்கப்படும் ஆத்தூர் தொகுதி, அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்குக் கொடுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டார். முதல் நாள் பிரசாரம் முதல் இறுதி நாள் பிரசாரம் வரை, ஐ.பெரியசாமியை அட்டாக் செய்து பிரசாரம் செய்த அவரை, தொகுதிக்கு உட்பட்ட பல கிராம மக்கள், ஊருக்குள் விடாமல் எதிர்ப்பு தெரிவித்து வெளியேற்றினர்.

திலகபாமா
திலகபாமா
‘ஐ.பெரியசாமி பற்றி யாரும் பேசாத உண்மைகளை நான் பேசுவேன்!’ - ஆத்தூர் பாமக வேட்பாளர் திலகபாமா

தொகுதியில் கடுமையான எதிர்ப்பு இருந்தபோதும், தொடர்ச்சியாக ஐ.பெரியசாமியைத் தாக்கிப் பேசி பிரசாரம் செய்தார். இதுவரை தன்னுடைய தொகுதியில், தன்னை தாக்கிப் பேசி யாரும் பிரசாரம் செய்யாத நிலையில், திலகபாமாவின் பிரசாரம், ஐ.பெரியசாமியைக் கோபப்படுத்தியது.

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

இந்தநிலையில், ’திலகபாமா, இந்தத் தேர்தலில், டெப்பாசிட்கூட வாங்கக் கூடாது.! அப்படி வேலை செய்ய வேண்டும்!’ என தன்னுடைய சகாக்களுக்கு அவர் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, பிரசாரத்தைத் தீவிரப்படுத்தினர் தி.மு.க நிர்வாகிகள். இறுதியாக வாக்குப்பதிவின்போதும், திலகபாமாவை தி.மு.க பூத் ஏஜென்ட் ஒருவர் மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சர்ச்சை எழுந்தது. எல்லாம் கடந்த நிலையில், நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் விதியாசத்தில் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திலகபாமா டெபாசிட்கூட பெறவில்லை. இதில் மேலும் சுவாரஸ்யம் என்னவென்றால் ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நபராகவும் ஐ.பெரியசாமி பார்க்கப்படுகிறார்.

`ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்!' - பா.ஜ.க-வைச் சாடும் ஐ.பெரியசாமி
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு