Election bannerElection banner
Published:Updated:

கலைஞர் அமைச்சரவையில் இருந்தேன்; உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன் - துரைமுருகன்

துரைமுருகன்
துரைமுருகன்

கொளத்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன், `நாளை ஸ்டாலின் அமைச்சரவையிலும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையிலும் நான் இருப்பேன்’ என்றார்.

தேர்தல் பரபரப்பு தொடங்கியிருக்கும் நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் 68-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று கொளத்தூரில் சிறப்பு பொதுக் கூட்டம் நடந்தது.

துரைமுருகன்
துரைமுருகன்

`லட்சியத் தலைவரின் எழுச்சி நாள்` என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்றுப் பேசினார். முன்னதாக, ஸ்டாலினின் பிறந்தாளை முன்னிட்டு கட்சியின் பிரசாரப் பாடலை, நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

மாலை கொளத்தூர் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ``ஸ்டாலின் இன்னும் சில மாதங்களில் முதலமைச்சராக அமரப்போகிறார். இன்று தளபதியாகப் பிறந்தநாள் கொண்டாடும் அவர், அடுத்த ஆண்டு முதலமைச்சராகப் பிறந்தநாள் கொண்டாடுவார். தி.மு.க-வைப் பற்றி அமித் ஷா பேசியதிலிருந்து டெல்லி, தி.மு.க-வைக் கண்டு அஞ்சுகிறது என்று தெரிகிறது’’ என்றார்.

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: காங்கிரஸ் கேட்பது எத்தனை... தி.மு.க தர நினைப்பது எத்தனை?

தொடர்ந்து பேசிய அவர், ``கருணாநிதி அமைச்சரவையில் துரைமுருகன் இருந்தான். ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பான். நாளை உதயநிதியின் அமைச்சரவையிலும் இருப்பான். எங்கோ இருந்த என்னை, இரண்டு கோடித் தொண்டர்கள்கொண்ட கட்சியின் பொதுச்செயலாளராக அமர வைத்திருக்கிறார்களே... இது ஒன்று போதாதா?” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு