Published:Updated:

``நான் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்​” - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

​``தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருள் விற்பனை நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன​” என்றார் எடப்பாடி பழனிசாமி.

``நான் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்​” - எடப்பாடி பழனிசாமி

​``தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருள் விற்பனை நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன​” என்றார் எடப்பாடி பழனிசாமி.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல் மாவட்டம், ​ஒட்டன்சத்திரத்தில்​ அதிமுக ஒன்றிய செயலாளர் நடராஜ் இல்லத் திருமணவிழாவில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் கலந்துகொண்டார். அவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மணமக்களை வாழ்த்திய பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, ``எம்.ஜி.ஆர் காலத்தில் திண்டுக்கல் அதிமுக கோட்டையாக இருந்தது. அது ஜெயலலிதா காலத்தில் எஃகு கோட்டையாக உருவானது.​ நான் பொறுப்பேற்றது முதல் இன்று வரை போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்​.​ எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் போராட்டம்தான். போராட்ட​த்தைத் தாண்டி வெற்றியைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

​அதிமுக வலிமையுடன், ​பொலிவோடு திகழ்ந்துகொண்டிருக்கிறது. அதிமுக-வைப் பல பேர் ​பிளக்க நினைக்கிறார்கள். ​அது ​ஒருபோதும் நடக்காது​. ஏனென்றால், இது​ மக்கள் சக்தி உள்ள இயக்கம். ​ஜெயலலிதா வழிகாட்டலில் நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.​

 எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

​அதிமுக ஆட்சியில்தான் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றித் தந்தோம். ​மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து நிறைவேற்றினோம். ​அப்போது மக்களாட்சி நடைபெற்றது​. ​​​தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருள் விற்பனை நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன​.​ திறமையற்ற முதலமைச்சர் ​​இன்று ஆ​ட்சி செய்துகொண்டிருக்கிறார். விரைவில் உங்கள் மூலமாக நல்ல பதில் வர வேண்டும்” என்றார்.