Published:Updated:

``என் தலைமையில் அதிமுக செயல்படுமென 100 சதவிகிதம் நம்பிக்கை இருக்கிறது!'' - சசிகலா

சசிகலா

`அ.தி.மு.க எதிர்க்கட்சியாக எதையுமே சரிவரச் செய்யவில்லை. அதனால்தான் மக்கள் நான் வரவேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறார்கள்.' - சசிகலா

``என் தலைமையில் அதிமுக செயல்படுமென 100 சதவிகிதம் நம்பிக்கை இருக்கிறது!'' - சசிகலா

`அ.தி.மு.க எதிர்க்கட்சியாக எதையுமே சரிவரச் செய்யவில்லை. அதனால்தான் மக்கள் நான் வரவேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறார்கள்.' - சசிகலா

Published:Updated:
சசிகலா

சசிகலா சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``செய்திகளை வெளியில் கொண்டுவருபவர்கள் பத்திரிகையாளர்கள். அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பது தவறான செயல். ஜெயலலிதாவின் ஆட்சியை தற்போது உள்ளவர்களுடன் ஒப்பிட முடியாது. விரைவில் ஜெயலலிதாவின் ஆட்சி வரும் என்று நம்புகிறேன். தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனாலும் தங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

சசிகலா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்
சசிகலா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்

வருங்காலத்தில் என் தலைமையில் அ.தி.மு.க ஒன்றிணைந்து செயல்படும் என எனக்கு 100 சதவிகிதம் நம்பிக்கை இருக்கிறது. அ.தி.மு.க-வை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில்தான் இருக்கிறது. அ.தி.மு.க-வில் எல்லோரும் என்னை எதிர்த்து பேசவில்லை. ஒரு சிலர்தான் பேசுகிறார்கள். அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது. என்னைக் கட்சியில் இணைக்க முடியாது எனச் சொல்வதற்கு அவர்கள் யார்... தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஜெயலலிதா கொண்டுவந்த நிறைய திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் மூடப்பட்டுவருகின்றன. இவை அனைத்தும் மக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட திட்டங்கள். அவற்றை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அ.தி.மு.க எதிர்க்கட்சியாக எதையுமே சரிவரச் செய்யவில்லை. அதனால்தான் மக்கள் நான் வர வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார்கள்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism