Published:Updated:

``ரஜினி யாரோ... ஆனால், விஜய் என் தம்பி!" - சீமான் சிறப்புப் பேட்டி

எங்கள் அளவுக்கு கொள்கையில் விஜய், தீவிரம் காட்டுவாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

``ரஜினி யாரோ... ஆனால், விஜய் என் தம்பி!" - சீமான் சிறப்புப் பேட்டி

எங்கள் அளவுக்கு கொள்கையில் விஜய், தீவிரம் காட்டுவாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

Published:Updated:

கொட்டும் மழை. கொளுத்தும் வெயில் என திறந்தவெளி மேடையில் நின்று கொந்தளிக்கும் கோபக்கார இளைஞர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்!

கண்ணுக்கெட்டிய தூரம்வரை தேர்தல் அறிகுறியே தென்படாத இந்தச் சூழலிலும், கழகங்களுக்கு எதிராக கலகம் பேசிவரும் 'ஆங்ரிபேர்டு' அண்ணன் சீமானைச் சந்தித்தேன்.... விரிவாக படிக்க க்ளிக் செய்க...

''சாதிக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக களத்தில் நின்று கம்யூனிஸ்ட் கட்சியினர் குரல் கொடுக்கிறார்கள். ஆனால், நாம் தமிழர் கட்சி அப்படி குரல் கொடுப்பதாகத் தெரியவில்லையே?''

''களத்தில் போய் நின்று அந்தப் பிள்ளைகளோடு பிரச்னைகளை அதிகமாக எதிர்கொண்டதே நாம் தமிழர் கட்சிதான். நான் போகாத இடங்களில்கூட என் பிள்ளைகள் அறிவுப் புரிதலோடு போய் நின்று போராடுகிறார்கள். தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் அவர்கள் இருவருமே என் ரத்தம்தான். அங்கே நான் போய் யார் பக்கம் நிற்பது?

ஏற்கெனவே சாதிக்கொரு கட்சி உருவாகிவிட்ட பிறகு, அவரவர் தன் சாதி சார்ந்து மக்களை உசுப்பேத்திக்கொண்டிருக்கும் சூழலில், இந்த விடயத்தை நாங்கள் மிகக் கவனமாகத்தான் கையாள வேண்டியிருக்கிறது.தேர்தலின்போது ஆதிக்குடிகளுக்கும் பெண்களுக்கும் அதிக இடங்களை ஒதுக்கிப் போட்டியிட வைத்த எங்கள் கட்சியை யாராவது பாராட்டி யிருக்கிறார்களா? வெற்றிகளைக் கொண்டாடும்போது மட்டும் 'இது அண்ணா பூமி, பெரியார் மண்' என்றெல்லாம் பேசுகிறவர்கள், சாதிப் பிரச்னையின்போதும் ஆணவக் கொலையின்போதும் மட்டும் தமிழ் தேசியத்தினரைக் கேள்வி கேட்பது என்ன நியாயம்?''

விஜய் வந்து அரசியல் செய்வதென்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். எங்கள் அளவுக்கு கொள்கையில் விஜய், தீவிரம் காட்டுவாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது

''கடந்த வருடம் அரசியலுக்குள் வந்த கமல்ஹாசனும் உங்களுக்கு ஈடாக வாக்குகள் வாங்கியிருக்கிறாரே?''

''கமல்ஹாசனுக்கு 65 வயது; இதில் 60 வருடங்களாக தொடர்ந்து நடிப்புக் கலை மூலமாக மக்களிடம் போய் சேர்ந்துகொண்டேயி ருக்கிறார். எனவே, இந்த 60 வருடங்களாக அவர் ஓர் இயக்கம் நடத்திவருவதாகத்தான் நீங்கள் இதைப் பார்க்கவேண்டும்.''

''தேர்தல் அரசியலுக்குள் ரஜினிகாந்த் வருகிறபோதும் நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு அது பெரும் பின்னடைவாகத்தானே அமையும்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''ரஜினியோ, தம்பி விஜயோ யார் வந்தாலும் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பு இருக்கும்.... ஒரு சிபாரிசு கடிதம்போல், தொடங்குவதற்கு சரியாக இருக்கும்; ஆனால் தொடர்வதற்கு...?''

''விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஆதரிக்கிற சீமானின் போக்கு, ரஜினிக்கு எதிராக விஜய்யை கொம்பு சீவிவிடும் வேலை என்கிறார்களே?''

seeman
seeman

''ரஜினிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், விஜய் என் தம்பி. என் இனம் சார்ந்தவன். எனவே, விஜய் வந்து அரசியல் செய்வதென்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். எங்கள் அளவுக்கு கொள்கையில் விஜய், தீவிரம் காட்டுவாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. மக்கள் அவருக்கு வாக்கு செலுத்தினால், பாராட்டுவேன். மாறாக எனக்கு வாக்களித்தால் நன்றி தெரிவிப்பேன். அவ்வளவுதான்!''

> '' 'திராவிட ஆட்சிகளால்தான் தமிழ்நாடு குட்டிச்சுவராகிவிட்டது' என்கிறீர்கள் நீங்கள். ஆனால், மத்திய அரசோ, 'தமிழகம்தான் முன்னேறிய மாநிலம்' என்று சொல்லி உரிய நிதியைக்கூட தரமறுக்கிறது. இரண்டில் எது உண்மை?''

> ''தி.மு.க-வை மிகக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள், அ.தி.மு.க-வை அப்படி விமர்சிப்பதில்லையே ஏன்?''

> ''2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, 'தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டியிடுங்கள் என்று என்னை வலியுறுத்தியதே விடுதலைப் புலிகள்தான்' என்கிறாரே திருமாவளவன்?''

> ''சிம்புதான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேசிவந்த நீங்கள், இப்போது விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிறீர்களே... என்ன நடந்தது?''

- இந்தக் கேள்விகளுக்கு சீமான் அளித்துள்ள பதில்களை, ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "ரஜினி பேசினால் தலைப்புச்செய்தி; நான் பேசினால் பெட்டிச் செய்தியா?" https://www.vikatan.com/government-and-politics/politics/seeman-furious-interview-about-current-political-happenings