Published:Updated:

``விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வரத் தயார்!" - விருதுநகர் எஸ்.பி-க்கு ராஜேந்திர பாலாஜி கடிதம்

ராஜேந்திர பாலாஜி

`உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நான் எனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள வீட்டில்தான் இருக்கிறேன். வேறு எங்கும் செல்லமாட்டேன்' என ராஜேந்திர பாலாஜி தன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

``விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வரத் தயார்!" - விருதுநகர் எஸ்.பி-க்கு ராஜேந்திர பாலாஜி கடிதம்

`உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நான் எனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள வீட்டில்தான் இருக்கிறேன். வேறு எங்கும் செல்லமாட்டேன்' என ராஜேந்திர பாலாஜி தன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Published:Updated:
ராஜேந்திர பாலாஜி

’ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவளித்த பணத்தை திருப்பித் தராமலும் ரூ.3 கோடி வரை பண மோசடி செய்துள்ளார்’ என ராஜேந்திரபாலாஜி மீது முன்னாள் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பி, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகார், வழக்காக பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு, கடந்த 17-ம் தேதி தள்ளுபடியானது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அதே நாளில், தி.மு.க அரசைக் கண்டித்து விருதுநகரில் நடந்த அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் முடிந்ததும் காரில் ஏறிச் சென்று தலைமறைவானார். இதற்கிடையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடி செய்ததாக மேலும் சில புகார்கள் பதிவாகின. இந்த நிலையில், 16 நாட்களுக்குப் பிறகு கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்ட நிலையில், மதுரை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டவர், நிர்வாகக் காரணங்களுக்காக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு, கடந்த 12-ம் தேதி விசாரனைக்கு வந்தது. நான்கு வார இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், “விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். பாஸ்போர்ட்டை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும். விருதுநகரை விட்டு வெளியே செல்லக்கூடாது” என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இதையடுத்து கடந்த 13-ம் தேதி, திருச்சி மத்திய சிறையிலிருந்து காலை 7.25 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார் ராஜேந்திர பாலாஜி. பின்னர், அங்கிருந்து காரில் விருதுநகருக்குப் புறப்பட்டு வந்தார் ராஜேந்திர பாலாஜி. இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் குழுவினர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் மாவட்ட எஸ்.பி மனோகரனிடம் ராஜேந்திர பாலாஜி சார்பில் கடிதம் ஒன்றை அளித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில், ``உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நான் எனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள வீட்டில்தான் இருக்கிறேன். வேறு எங்கும் செல்லமாட்டேன். என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணைக்காக சம்மன் அனுப்பினால் எப்போது வேண்டுமானாலும் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். ``அண்ணன் திருச்சி சிறையில இருந்தபோதும் சரி. ஜாமீனில் வெளியான பிறகும் சரி, கட்சி நிர்வாகிகள் யாரையுமே சந்திக்கலை. ‘இப்போதைக்கு யாரையும் சந்திக்க நான் விரும்பல’ என தன் உதவியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார். அடிமட்ட தொண்டர் தன்னை பார்க்க வந்திருந்தால்கூட சிரித்த முகத்துடன் வரவேற்று பேசக்கூடியவர். இப்போ யாரையுமே பார்க்க விருப்பம் இல்லேண்ணு சொல்லியிருக்கார்னா அவரோட மனசை புரிஞ்சுக்க முடியுது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அம்மா, அக்கான்னு வீட்ல உறவினர்களோட நேரம் செலவழிச்சுட்டு நிம்மதியா இருக்கார். அதனால இப்போதைக்கு தொந்தரவு பண்ண வேண்டாம்னு இருக்கோம்” என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள். இந்த நிலையில், 30 நாள்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பியை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீஸார், ஏழாயிரம்பண்ணை – புளியங்குளம் இடையிலான காட்டுப்பகுதியில் செவல்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது இன்று காலை சுமார் 6 மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism