Published:Updated:

``அதிமுக-வை நிச்சயமாக ஒன்றிணைப்பேன்... என்னால் செய்ய முடியாதா என்ன?'' - சசிகலா உறுதி

சசிகலா
News
சசிகலா

``அம்மா கூறியதைப்போல அ.தி.மு.க வாழையடி வாழையாக மீண்டும் வளரும். அதை நாம் செய்து காட்டுவோம்.'' - சசிகலா

``அதிமுக-வை நிச்சயமாக ஒன்றிணைப்பேன்... என்னால் செய்ய முடியாதா என்ன?'' - சசிகலா உறுதி

``அம்மா கூறியதைப்போல அ.தி.மு.க வாழையடி வாழையாக மீண்டும் வளரும். அதை நாம் செய்து காட்டுவோம்.'' - சசிகலா

Published:Updated:
சசிகலா
News
சசிகலா

அ.தி.மு.க-வின் 51-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, சென்னை ராமவரம் தோட்டத்தில் நேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய சசிகலா , ``எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்தபோதும் இணைந்தபோதும், ஜா-அணி, ஜெ-அணி என்று பிரித்துப் பேசவில்லை. அனைவரும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் என்றுதான் நாம் நினைத்தோம். அப்போது எனக்கு வயது என்ன இருந்திருக்கும்... அப்போதே இரு அணிகளையும் இணைத்த என்னால், தற்போது செய்ய முடியாதா... நிச்சயமாகச் செய்ய முடியும். அதை நிச்சயம் செய்து காட்டுவேன்.

எடப்பாடி - ஓ.பி.எஸ்
எடப்பாடி - ஓ.பி.எஸ்

அம்மா கூறியதைப்போல அ.தி.மு.க வாழையடி வாழையாக மீண்டும் வளரும். அதை நாம் செய்து காட்டுவோம். எப்படிச் செய்ய வேண்டும், எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதை என்னிடம் விட்டுவிடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். அ.தி.மு.க-வை ஒன்றிணைப்பேன். நீங்கள் அனைவரும் எனக்குத் துணையாக மட்டும் இருங்கள். நிச்சயமாக அதெல்லாம் நடக்கும்.

அ.தி.மு.க-வில் கழக மூத்த நிர்வாகிகள் நீக்கப்படுகிறார்கள். இது நமது கட்சிக்கு அழகல்ல. தாயுள்ளம் இருந்தால்தான் அ.தி.மு.க-வை வழிநடத்த முடியும். அ.தி.மு.க வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் முழு வெற்றிபெற என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்வேன். சாதி, மதம், மொழியை வைத்து மக்களை அச்சுறுத்தி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதுதான் தி.மு.க-வின் கொள்கையாக அன்றிலிருந்து இன்று வரை இருந்துவருகிறது'' என்றார்.