Published:Updated:

"புரியவைப்போம்; மலரவைப்போம்!”

"புரியவைப்போம்; மலரவைப்போம்!”
பிரீமியம் ஸ்டோரி
"புரியவைப்போம்; மலரவைப்போம்!”

தமிழகத்தில் தாமரையை மலரவைக்க, இவர்கள் என்னென்ன ஐடியா வைத்திருக்கிறார்கள்..?

"புரியவைப்போம்; மலரவைப்போம்!”

தமிழகத்தில் தாமரையை மலரவைக்க, இவர்கள் என்னென்ன ஐடியா வைத்திருக்கிறார்கள்..?

Published:Updated:
"புரியவைப்போம்; மலரவைப்போம்!”
பிரீமியம் ஸ்டோரி
"புரியவைப்போம்; மலரவைப்போம்!”

‘தாமரை மலர்ந்தே தீரும்’ என மேடைதோறும் முழங்கிக் கொண்டிருந்த தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா கவர்னராக புரமோஷனில் சென்றுவிட்டார். அவருக்குப் பிறகு தமிழக பா.ஜ.க தலைவர் பதவி, வெற்றிடமாகவே நீடிக்கிறது.

"புரியவைப்போம்; மலரவைப்போம்!”
"புரியவைப்போம்; மலரவைப்போம்!”

இந்நிலையில், ‘தமிழ்நாட்டில், எப்படியும் பா.ஜ.க-வைக் காலூன்ற வைத்துவிட வேண்டும்’ என்ற விக்கிரமாதித்யன் விடா முயற்சியோடு, புதிது புதிதாக மக்கள் பிரபலங்களைக் கட்சிக்குள் இறக்குமதி செய்துகொண்டேயிருக்கிறார்கள். தமிழகத்தில் தாமரையை மலரவைக்க, இவர்கள் என்னென்ன ஐடியா வைத்திருக்கிறார்கள்..?

அவர்களிடமே கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நடிகர் ராதாரவி

‘`தாமரையை மலரவைக்க மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். ஆனால், அந்த முடிவை மக்கள் எடுப்பதற்கான வழியை வேண்டுமானால் நாங்கள் காட்டுவோம். உதாரணமாக, 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு என் வீட்டை வாடகைக்கு விடுகிறேன்.

ராதாரவி
ராதாரவி

ஆனால், 40 பேர் வந்து அந்த வீட்டில் தங்கியிருந்தால் எப்படி அனுமதிக்க முடியும்...இதைத்தான் சிஏஏ சட்டத் திருத்தமும் செய்கிறது என்ற உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்லிப் புரியவைப்பேன்!’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இசையமைப்பாளர் தீனா

‘`வாழவழியில்லாத அடித்தட்டு மக்கள், ஒரு பெட்டிக்கடை வைத்துப் பிழைத்துக்கொள்கிற அளவுக்கு, வங்கிக்கடன் வாங்கித் தந்து அவர்கள் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை மத்திய பா.ஜ.க அரசின் உதவியோடு செய்துகொடுப்பேன்.

தீனா
தீனா

இதன்மூலம், தமிழகத்திலும் பா.ஜ.க-வை ஜெயிக்க வைக்கமுடியும் என்று நம்புகிறேன்!’’

ஜீவஜோதி

‘`கருப்பு முருகானந்தம் அண்ணனின் முயற்சியால்தான் நான் கட்சிக்குள்ளேயே வந்தேன். மற்றபடி பெரிய அரசியல்வாதிகள் போன்ற குடும்பப் பின்னணி எதுவும் எனக்குக் கிடையாது.

ஜீவஜோதி
ஜீவஜோதி

அதனால் அரசியல்வாதிகள்போல் பேச்சுத் திறமையும் என்னிடம் கிடையாது. கட்சியை வெற்றிபெற வைப்பதற்காக கருப்பு முருகானந்தம் அண்ணன் என்ன சொல்கிறாரோ, அதன்படி உழைப்பேன்... அவ்வளவுதான்!’’

நடிகை நமீதா

‘`பா.ஜ.க-வில் எனக்கென்று ஒரு மரியாதையைக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு பதில் மரியாதையாக தமிழக பா.ஜ.க-வில் என்னுடைய ரசிகர்களை இணைத்துவருகிறேன்.

நமீதா
நமீதா

முதல்கட்டமாக என் ரசிகர்கள் 150 பேரைக் கட்சியில் சேர்த்திருக்கிறேன். அடுத்து என் ரசிகர்களின் துணையோடு மக்களை நேருக்குநேர் சந்தித்து பா.ஜ.க-வின் வளர்ச்சித் திட்டங்களைப் பிரசாரமாக எடுத்துச் செல்லப்போகிறேன். பெண்கள், விவசாயிகள் மற்றும் விலங்குகள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்த கட்சி ரீதியாக முயற்சி எடுப்பேன்.’’

இசையமைப்பாளர் பரத்வாஜ்

‘`நான் ஓர் இசைக்கலைஞன். என் கலை வழியாக தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு என்னென்ன வழிகளில் உதவ முடியுமோ அதையெல்லாம் செய்துமுடிப்பேன்.

பரத்வாஜ்
பரத்வாஜ்

உதாரணமாக, கட்சியின் பிரசாரப் பாடல்களை வடிவமைப்பது உள்ளிட்ட விஷயங்களில் உதவுவேன். இதன்மூலமாக தமிழகத்திலும் தாமரையை மலரவைக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.”

இயக்குநர் பேரரசு

‘`பா.ஜ.க-வில் சேரும் முன்பே, ‘பழனி, திருத்தணி, திருப்பதி’ என என் படங்களின் டைட்டில்களையெல்லாம் ஆன்மிகம் சார்ந்தே வைத்திருக்கிறேன். இங்கே சிலர் மத்திய அரசுத் திட்டங்கள்மீது அவதூறு கிளப்பிவருகின்றனர்.

பேரரசு
பேரரசு

எனவே, இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, சமூக ஊடகம் வழியாகக் கருத்துகளைப் பதிவுசெய்துவருகிறேன். இன்னும் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகம் வழியாகவும் இந்தப் பிரசாரத்தை வலுவாக எடுத்துச்செல்வேன்!’’

நடிகை காயத்ரி ரகுராம்

‘`தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஊடகம் அனைத்துமே தி.மு.க-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துவருகின்றன. காரணம் தி.மு.க அனுதாபிகள்தான் ஊடகத்தில் அதிக அளவில் வேலை பார்த்துவருகின்றனர்.

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

அதனால், இந்துவுக்கு எதிராகவோ அல்லது பா.ஜ.க-வை காமெடி பண்ணுவதாகவோதான் ஊடகச் செயல்பாடுகள் இருக்கின்றன. உண்மையை யாரும் வெளியிடுவதே இல்லை. இந்த அரசியலை உடைப்பதென்பது அவ்வளவு எளிது கிடையாது. ஆனாலும் இந்த உண்மைகளையெல்லாம் மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்ப்பது ஒன்றுதான் என் வேலையாக இருக்கும்!’’

சசிகலா புஷ்பா

‘`தமிழ்நாட்டில், இனி தி.மு.க வரவே வராது. சும்மா வெற்றுக்கூவல் கூவிக்கொண்டிருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினெல்லாம் ஒரு கத்துக்குட்டி. எனவே, தி.மு.க-வின் முகமூடியைக் கிழித்தெறிவேன்.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

இதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் எல்லாம் தமிழ் மக்களுக்குக் கிடைக்கச் செய்வதோடு, பா.ஜ.க-வின் மற்ற தலைவர்களோடு சேர்ந்து, கட்சியின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன். இதன்மூலம் தமிழகத்தில் உண்மையான ஆட்சி இனிமேல்தான் மலரப்போகிறது!’’

நடிகர் ஆர்.கே.சுரேஷ்

‘`என் அப்பா சிவசேனா தலைவராக இருந்தவர். எனவே, பா.ஜ.க மேல் சிறு வயதிலிருந்தே எனக்கு ஈடுபாடு உண்டு. இப்போது நான் முழு நேரமாக சினிமாத் தொழிலில் ஈடுபட்டிருப்பதால், கட்சிக்காக அதிக நேரம் செலவழிக்க முடியாது. ஆனாலும் தேர்தல் நேரத்தில் நிச்சயம் பிரசாரம் செல்வேன்.

ஆர்.கே.சுரேஷ்
ஆர்.கே.சுரேஷ்

‘மத்திய அரசின் நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துச்சொன்னாலே போதும்; மற்றபடி மதரீதியாகவோ மற்ற விஷயங்களையோ நாம் பேசவேண்டாம்’ என்று பா.ஜ.க தலைவர்களிடமே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.’’

நடிகை ஜெயலட்சுமி

‘`தமிழக மக்கள், பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது. உண்மையில் பா.ஜ.க ஆதரவு மனநிலை கொண்டோர்தான் இங்கே அதிகம். ஆனால், அதை வெளியில் சொல்லத் தயங்குகிறார்கள்.

ஜெயலட்சுமி
ஜெயலட்சுமி

மத்திய அரசின் பல நல்ல திட்டங்கள் இன்னமும் நம் கிராமங்களுக்கு முறையாகப் போய்ச் சேரவில்லை. இதையெல்லாம் களைவதற்காக தெருமுனைக் கூட்டங்கள், மேடைப் பேச்சுகள் எனத் தொடர்ச்சியாக இப்போதே கட்சிப்பணியாற்றி வருகிறேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism