Published:Updated:

`பயமில்லை... தலைமை சம்மதித்தால் நிச்சயம் போட்டி'- விஜய பிரபாகரன்!

Vijaya Prabhakaran

``தலைமை சொன்னால் நிச்சயம் போட்டியிடுவேன். பயப்படுவதோ, முடியாதோ என்று சொல்லமாட்டேன். அ.தி.மு.க பேனர் விழுந்ததால் தான் அவ்வளவு பெரிய சர்ச்சையானது'' என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

`பயமில்லை... தலைமை சம்மதித்தால் நிச்சயம் போட்டி'- விஜய பிரபாகரன்!

``தலைமை சொன்னால் நிச்சயம் போட்டியிடுவேன். பயப்படுவதோ, முடியாதோ என்று சொல்லமாட்டேன். அ.தி.மு.க பேனர் விழுந்ததால் தான் அவ்வளவு பெரிய சர்ச்சையானது'' என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
Vijaya Prabhakaran

மக்களவைத்தேர்தலில் அ.தி.மு.க - தே.மு.தி.க, பா.ஜ.க, பா.ம.க, தமிழ்மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவு என்று கூட்டணி கட்சிகள் தெரிவித்திருந்தன. இதனிடையே தற்போது, விக்கிரவாண்டி, மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Vijaya Prabhakaran
Vijaya Prabhakaran

இந்நிலையில், விருப்பமனு பெறுதல், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே சசிகலா புஷ்பா, அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், `அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறி நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா தனியாக வேட்பாளரை நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், `தே.மு.தி.க தலைமை கூறினால், இடைதேர்தலில் போட்டியிடுவேன்’ என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குன்றத்தூரில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி, கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர். ``இன்றைக்கு நான் குன்றத்தூர் கோயிலுக்கு வந்துள்ளேன். கட்சி நிர்வாகி ராஜா, கேப்டன் நலம்பெற வேண்டும் என்று அலகுத்தி வேண்டுதல் செய்துள்ளார். அதை மதித்து, நாங்கள் அவருடன் இணைந்து, சிவன் கோயிலிருந்து 1 கிலோமீட்டர் நடந்து, முருகருக்கு 500 குடம் பாலபிஷேகம்செய்து, அவருடைய வேண்டுதலை நிறைவேற்றிருக்கிறோம்” என்றவரிடம்,

Vijaya Prabhakaran
Vijaya Prabhakaran

இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா? என கேட்டதற்கு, ``தலைமை சொன்னால் நிச்சயம் போட்டியிடுவேன். பயப்படுவதோ, முடியாதோ என்று சொல்லமாட்டேன். அ.தி.மு.க பேனர் விழுந்ததால் தான் அவ்வளவு பெரிய சர்ச்சையானது. தனியார் பேனர் விழுந்திருந்தால் சர்சையாகியிருக்காது. இருந்தாலும் பேனர் விவகாரத்தில், கோர்ட் சொல்வதை பின்பற்றினால் சரியாக இருக்கும். பேனர் விவகாரத்தில் நடிகர் விஜய் பேசியிருப்பது அவரது சொந்த கருத்து” என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism