Published:Updated:

பீகார்: `முதலில் 10-ம் வகுப்பை பாஸ் பண்ணுங்க!’ - தேஜஸ்வியைச் சீண்டும் பா.ஜ.க

பா.ஜ.க தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால்
பா.ஜ.க தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால்

`குடும்பத்தில் இரண்டு முதலமைச்சர்கள் இருந்தும், அவர்களால் தங்கள் மகன்கள் இருவரையும் 10-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற ஊக்குவிக்க முடியவில்லை. இது கவலைக்குரிய விஷயம்.’

பீகார் மாநிலத்தில் சுகாதாரம், கல்வி, தொழில்கள் என அனைத்தையும் முதலமைச்சர் அழித்துவிட்டதாக தேஜஸ்வி யாதவ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பீகார் பா.ஜ.க தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் பதிலளித்திருக்கிறார்.

பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியிலிருக்கிறது. அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு, நவம்பர் 10-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

பீகார் மாநிலத் தேர்தல், கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் நடத்தப்படுவதால் தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை அறிவித்திருக்கிறது.

பீகார்: `முதலில் 10-ம் வகுப்பை பாஸ் பண்ணுங்க!’ - தேஜஸ்வியைச் சீண்டும் பா.ஜ.க

கடந்த தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் ஒரே கூட்டணியில் பா.ஜ.க-வை எதிர்த்து வெற்றிபெற்றன. நிதிஷ் குமார் முதலமைச்சராகவும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இரண்டு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்தக் கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விலகி, பா.ஜ.க-வுடன் புதிய கூட்டணியமைத்து முதலமைச்சரானார். இந்தப் பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க-வுடனும், ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸுடனும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன.

பீகார்: `மோடி உங்களுடன் டீ அருந்தினாரா?' - பழசை நினைவுபடுத்தி வாக்கு சேகரித்த ராகுல் காந்தி

இந்தநிலையில், மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யாமல் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு பீகார் மாநிலத்தை அழிப்பதாக பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தேஜஸ்வி யாதவ், ``முதல்வர் நிதிஷ் குமார் ஒருபோதும் சுகாதாரம், கல்வி, வருவாய் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவில்லை. அவர் மக்களின் குறைகளைக் கேட்கவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்னைகள் காரணமாக பீகார் மக்கள் பிற மாநிலங்களுக்குக் குடிபெயர்கிறார்கள், ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, சுகாதாரம், வருவாய், நீர்ப்பாசனம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி குறைகளை நிவர்த்தி செய்வோம்’’ என்றார்.

தேஜஸ்வி யாதவின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும்விதமாகப் பேசிய பீகார் மாநில பா.ஜ.க தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், ``பீகார் தேர்தலில் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி இருவரின் மகன்களும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற உதவுவோம்" என்றார்.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

தேஜஸ்வி கருத்து குறித்துப் பேசிய சஞ்சய் ஜெய்ஸ்வால், ``நீங்கள் கல்வியைப் பற்றிப் பேசினால், கடந்த 15 ஆண்டுகளாக நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்தார். அவர் மாணவர்களுக்கு சைக்கிள், புத்தகங்கள் மற்றும் சீருடைகளை விநியோகித்தார். ஆனால், குடும்பத்தில் இரண்டு முதலமைச்சர்கள் இருந்தும், அவர்களால் தங்கள் மகன்கள் இருவரையும் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற ஊக்குவிக்க முடியவில்லை. இது கவலைக்குரிய விஷயம். இரண்டு முதலமைச்சர்களின் குழந்தைகள், நிதிஷ் ஆட்சியின் 15 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற முடியவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற முடியாத ஆர்.ஜே.டி-யைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்த முறை தேர்ச்சி பெற நாங்கள் உதவுகிறோம்” என்றார்

அடுத்த கட்டுரைக்கு