Published:Updated:

"ராகுலின் மதப் பழக்கவழக்கங்கள் பற்றி வெளிப்படுத்தத் தொடங்கினால்..!" - சுப்பிரமணியன் சுவாமி தாக்கு

சுப்பிரமணியன் சுவாமி

``லண்டனிலுள்ள போஹேமியன் எனும் வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழும் ஒரு நபரை ராமருடன் ஒப்பிட முடியாது." - சுப்பிரமணியன் சுவாமி

"ராகுலின் மதப் பழக்கவழக்கங்கள் பற்றி வெளிப்படுத்தத் தொடங்கினால்..!" - சுப்பிரமணியன் சுவாமி தாக்கு

``லண்டனிலுள்ள போஹேமியன் எனும் வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழும் ஒரு நபரை ராமருடன் ஒப்பிட முடியாது." - சுப்பிரமணியன் சுவாமி

Published:Updated:
சுப்பிரமணியன் சுவாமி

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி வெறும் டி-ஷர்ட் மட்டும் அணிந்து நடைப்பயணம் மேற்கொண்டுவருவது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்திருந்தார். அதில்,``ராகுல் காந்தி மனிதாபிமானமுடையவர். அசாதாரணமானவர். எல்லோரும் டெல்லியின் குளிரில் உறைந்து ஜாக்கெட் அணிந்துகொண்டிருக்கும்போது, அவர் டி-ஷர்ட்களில் யாத்திரைக்காக வெளியே செல்கிறார். அவர் ஒரு யோகியைப்போல் எந்தப் பக்கமும் கவனத்தைச் சிதறவிடாமல் யாத்திரையை மேற்கொள்கிறார். ராகுல் காந்தி, கடவுள் ராமரைப்போல. அவரின் செயல்பாடுகளைப் பார்த்தாலே அது உங்களுக்குத் தெரியும்" எனத் தெரிவித்திருந்தார்.

சல்மான் குர்ஷித்
சல்மான் குர்ஷித்
ட்விட்டர்

இதற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த முன்னாள் ராஜ்ய சபா எம்.பி-யும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, "லண்டனிலுள்ள போஹேமியன் எனும் வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழும் ஒரு நபரை ராமருடன் ஒப்பிட முடியாது. ராமர் சிறந்த சுய ஒழுக்கம்கொண்டவர், சாதாரண மக்கள் அவரை அடையாளம் காணும் வகையில் அவர் செயல்பட்டார்.

ராகுல் காந்தியை ராமருடன் ஒப்பிட்டது இந்துத்துவா வாக்குவங்கியை உடைக்க முயலும் தீவிர முயற்சி. இந்த அரசியல் சக்திவாய்ந்த வாக்குவங்கியாக மாறியதால், இதில் பங்கேற்காதவரை வெற்றி பெற முடியாது என்று காங்கிரஸ் பயப்படுகிறது. எந்த மனிதனும் கடவுளின் நிழலாக இருக்க முடியாது. காந்தி குடும்பம் தேவாலயத்துக்குச் செல்வார்கள், கிறிஸ்தவப் பிரார்த்தனைகளில் பங்கேற்பார்கள் என்பது எனக்குத் தெரியும்.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

ராகுல் காந்தியின் மதப் பழக்கவழக்கங்கள் பற்றிய விவரங்களை நான் வெளிப்படுத்தத் தொடங்கினால், அது மிகவும் குழப்பமாகிவிடும். காங்கிரஸ் கட்சி, ராமர் கோயில் எழுப்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி எதிர்த் தரப்பினருக்கு வழக்கறிஞர்களை வழங்கியது. இப்போது அவர்கள் விரக்தியில் இருக்கின்றனர். அதனால்தான், இப்படிப் பேசுகிறார்கள். வேறு ஒன்றும் இல்லை" என்று தெரிவித்தார்.