Published:Updated:

ராமநாதபுரம்: இமானுவேல் சேகரன் நினைவுதினம்! -அனைத்துக் கட்சியினரும் அஞ்சலி

இமானுவேல் நினைவிடம்
இமானுவேல் நினைவிடம்

திமுக-வினர் அஞ்சலி செலுத்துவதில் ராஜகண்ணப்பன்- காதர்பாட்சா முத்துராமலிங்கம் கோஷ்டிகளுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உட்கட்சிப்பூசலை மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இமானுவேல் சேகரனின் 64-வது நினைவு மற்றும் குருபூஜை நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் பரமக்குடியிலுள்ள அவர் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார்கள்.

திமுக-வினர் அஞ்சலி
திமுக-வினர் அஞ்சலி

தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் தெய்வமாகப் போற்றும் இமானுவேல் சேகரனின் நினைவுதினம், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து அமைதியான முறையில் நடந்துவருகிறது.

இந்த நிகழ்வை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் மதுபான கடைகள் அடைக்கப்பட்டு, முக்கியச் சாலைகளில் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதிமுக-வினர் அஞ்சலி
அதிமுக-வினர் அஞ்சலி

பரமக்குடி பேருந்து நிலையம் அருகிலுள்ள இமானுவேல் நினைவிடத்தில் இன்று காலையிலிருந்து மக்கள் அஞ்சலி செலுத்த வந்துகொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Vikatan

திமுக சார்பில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், முஸ்லீம் லீக் எம்.பி நவாஸ்கனி ஆகியோர் அஞ்சலி செலுத்த வந்தனர்.

திமுக-வினர் தள்ளு முள்ளு
திமுக-வினர் தள்ளு முள்ளு

அஞ்சலி செலுத்துவதில் ராஜகண்ணப்பன்- காதர்பாட்சா முத்துராமலிங்கம் கோஷ்டிகளுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதைப் பார்த்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அதிர்ச்சியடைந்தார். இதில் பரமக்குடி திமுக எம்.எல்.ஏ பின்னுக்குத் தள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டது. பின்பு ஒருவழியாக சமாதானமாகி, அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர்.

மாவட்ட திமுக-விலுள்ள உட்கட்சிப்பூசலை மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி
காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, அன்வர்ராஜா, மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

காங்கிரஸ் சார்பில் ஸ்ரீபெரும்பதூர் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்.எல்.ஏ மலேசியா பாண்டியன் தலைமையில் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

மதிமுக சார்பில் எம்.எல்.ஏ-க்கள் புதூர் பூமிநாதன், சதன் திருமலைக்குமார், சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மதிமுக-வினர் அஞ்சலி
மதிமுக-வினர் அஞ்சலி

தமாகா சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ராம்பிரபு தலைமையில் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு