Published:Updated:

2020-ம் நிதியாண்டில் நன்கொடையாக ரூ.477 கோடி பெற்ற பாஜக... காங்கிரஸ் எவ்வளவு தெரியுமா?

பாஜக

2020 நிதியாண்டில் பா.ஜ.க 2,206 பங்களிப்பாளர்களிடமிருந்து நன்கொடையாக ரூ.477 கோடி பெற்றிருக்கிறது.

2020-ம் நிதியாண்டில் நன்கொடையாக ரூ.477 கோடி பெற்ற பாஜக... காங்கிரஸ் எவ்வளவு தெரியுமா?

2020 நிதியாண்டில் பா.ஜ.க 2,206 பங்களிப்பாளர்களிடமிருந்து நன்கொடையாக ரூ.477 கோடி பெற்றிருக்கிறது.

Published:Updated:
பாஜக

இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெறுகின்றன என்பது தொடர்பாக `ஹிந்துஸ்தான் டைம்ஸ்' செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 2020 நிதியாண்டில் பா.ஜ.க 2,206 பங்களிப்பாளர்களிடமிருந்து நன்கொடையாக ரூ.477 கோடி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 1,059 நன்கொடையாளர்களிடமிருந்து ரூ.74 கோடி பெற்றிருக்கிறது. அதே போல தேசிய அளவில் கவனம் ஈர்த்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 26 நன்கொடையாளர்களிடமிருந்து ரூ 42.51 கோடி நன்கொடையாகப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

காங்கிரஸ் - பாஜக
காங்கிரஸ் - பாஜக

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 79 நன்கொடையாளர்களிடமிருந்து, ரூ.26.26 கோடிக்கு மேல் பெற்றதாகத் தெரியவருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 226 நன்கொடையாளர்களிடமிருந்து ரூ12.85 கோடி பெற்றிருக்கிறது. 2020 நிதியாண்டில் இந்தியாவின் அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை ரூ.633.66 கோடியாகும். இதில் பா.ஜ.க 75 சதவிகிதமும், காங்கிரஸ் 11 சதவிகிதமும் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆம் ஆத்மி கட்சியின் நன்கொடைகள் குறித்து அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி(பிஎஸ்பி) நன்கொடைகள் காணாமல் போய்விட்டதாக கூறியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism