Published:Updated:

அரசு வழக்கறிஞர் நியமனம்! - உஷ்ணத்தில் உடன்பிறப்புகள்

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தி.மு.க-வைப் பொறுத்தவரை பொதுச்செயலாளர் துரைமுருகனில் தொடங்கி, கிளைச் செயலாளர்கள் வரை நிர்வாகிகளில் 40 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் வழக்கறிஞர்கள்தான்.

எந்தக் கட்சி ஆட்சி அமைக்கிறதோ, அந்தக் கட்சியில் இருக்கும் நிர்வாகிகளில் யார் யார் வழக்கறிஞர்களோ அவர்களையெல்லாம் அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பது வழக்கம். ஆனால், இந்தமுறை தி.மு.க-வுக்குத் தொடர்பே இல்லாதவர்கள் நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டு றெக்கை கட்டுகிறது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

இதுகுறித்து தி.மு.க வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``பப்ளிக் ப்ராசிக்யூட்டர், அரசு பிளீடர், கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர், அரசு தலைமை வழக்கறிஞர் என வழக்கறிஞர்களுக்காக பல அரசுப் பதவிகள் உள்ளன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அ.தி.மு.க ஆட்சியில் அப்படித்தான் நியமனங்கள் இருந்தன. 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சியிலும் அப்படித்தன நிலை இருந்தது. ஆனால், இந்தமுறை நிலைமை தலைகீழ்!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் இதன் மதுரைக் கிளை என இரு பெரிய நீதிமன்றங்களுக்கும் தனித்தனியாக அரசு வழக்கறிஞர்களும், இதுபோக மாவட்ட நீதிமன்றங்களுக்குத் தனியாக அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தி.மு.க-வைப் பொறுத்தவரை பொதுச்செயலாளர் துரைமுருகனில் தொடங்கி, கிளைச் செயலாளர்கள் வரை நிர்வாகிகளில் 40 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் வழக்கறிஞர்கள்தான். 10, 15 வருடங்கள் கட்சிக்காக கடுமையாக உழைத்ததற்கு ஒரு சன்மானமாக அரசு வழக்கறிஞர் பதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மதுரை உயர்நீதிமன்றம்
மதுரை உயர்நீதிமன்றம்
ஈ.ஜெ.நந்தகுமார்

ஆனால், மாவட்டங்களில் கோலோச்சும் மா.செ-க்கள் தங்களது உறவினர்கள், சாதிக்காரர்கள் ஆகியோருக்கும், விட்டமின் ‘ப’வைப் பெற்றுக்கொண்டும் பரிந்துரைப் பட்டியலை அனுப்புகிறார்கள். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அதில் கட்சி நிர்வாகிகள் பெயர்கள் பெயரளவுக்கு ஒன்றிரண்டுதான் இருக்கும். இதில் என்ன கொடுமை என்றால், இதுவரை இரண்டு பட்டியல்கள் வந்துவிட்டது, அதில் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர்கள் பொறுப்பில் இருப்பவர்கள் பெயர்கள் கூட அரசு வழக்கறிஞர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

மாறாக ஓய்வுபெற்ற நீதிபதிகளின் வாரிசுகள், அறிவாலயம் பக்கம் எட்டிப்பார்க்காதவர்கள், கட்சிக்குத் தொடர்பே இல்லாதவர்கள்தான் பட்டியலில் உள்ளனர். இவையெல்லாம் முதல்வருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் அளவிலேயே முடித்துவிடுகிறார்கள். எனவே முதல்வர் இதில் தலையிட்டு கட்சியினரை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க ஆவண செய்ய வேண்டும்” என்று முடித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு