Election bannerElection banner
Published:Updated:

`ஜெயலலிதா அக்கா... மோடி தம்பி; அவர்கள் கனவு நிறைவேற வேண்டும்!’ - தேனியில் சி.டி.ரவி பேச்சு

ஓ.பி.எஸ் - சி.டி.ரவி
ஓ.பி.எஸ் - சி.டி.ரவி

ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூரில், பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து வாக்குச் சேரிக்க, பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி போடிக்கு வந்தார். ஒக்கலிக்க கவுடர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களைச் சந்திக்கும்விதமாக, போடியிலுள்ள தனியார் மண்டபத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வந்த சி.டி.ரவி, ஒக்கலிக்க கவுடர் சமுதாயத்தினரிடம், ஓ.பி.எஸ்-ஸுக்கு வாக்களிக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். உடன், தேனி எம்.பி ரவீந்திரநாத், ஜக்கையன் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க நிர்வாகிகள் இருந்தனர்.

ஓ.பி.எஸ் - சி.டி.ரவி
ஓ.பி.எஸ் - சி.டி.ரவி
ஸ்டார் தொகுதிகள்: பன்னீருக்கு போக்குக் காட்டும் போடி!

நிகழ்ச்சியில் பேசிய சி.டி.ரவி, ``நம் கூட்டணியிலுள்ள கட்சிகளில் யார் வேண்டுமானாலும் தலைவர்கள் ஆகலாம். ஆனால் தி.மு.க., காங்கிரஸில் வாரிசுகள்தான் தலைவராக முடியும்.

பிரதமர் மோடி, தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகள், 12 ஸ்மார்ட்சிட்டிகள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். தி.மு.க., காங்கிரஸ்தான் ஜல்லிக்கட்டைத் தடைசெய்தது. தடையை உடைத்து, வீர விளையாட்டை மீண்டும் கொண்டுவந்த ஜல்லிக்கட்டு நாயகன் ஓ.பன்னீர்செல்வம்.

ஓ.பி.எஸ் - சி.டி.ரவி
ஓ.பி.எஸ் - சி.டி.ரவி

தி.மு.க கூட்டணிக் கட்சிகள், முருகன் உள்ளிட்ட இந்துமதக் கடவுள்களை இழிவுபடுத்தியவர்கள். அதை உணர்ந்து செயல்படுங்கள். இந்து மதத்தைப் பாதுகாக்கும் கூட்டணிதான் தமிழகத்தை ஆள வேண்டும். ஜெயலலிதாவும் மோடியும், அக்கா-தம்பிபோல. அவர்களின் கனவு நிறைவேற வேண்டும். எனவே, அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை வெற்றிபெறச் செய்யுங்கள்” என்றார். முன்னதாக, ஓ.பி.எஸ்., சி.டி.ரவிக்கு வெள்ளி வேல் பரிசாகக் கொடுக்கப்பட்டது.

’அமைதிப்படை’ ஓ.பி.எஸ்! ’தகரம்’ தங்க தமிழ்ச்செல்வன்!’ - போடி பிரசாரத்தில் டி.டி.வி தினகரன்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு