Published:Updated:

காங்கிரஸ் போராட்டம்; உடைக்கப்பட்ட நடிகர் ஜோஜு ஜார்ஜ் கார்; மதுபோதையில் தகராறா... என்ன நடந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காங்கிரஸ் போராட்டத்தில் நடந்த பிரச்னையில் நடிகர் ஜோஜு ஜார்ஜ்
காங்கிரஸ் போராட்டத்தில் நடந்த பிரச்னையில் நடிகர் ஜோஜு ஜார்ஜ்

சிலர் நடிகர் ஜோஜு ஜார்ஜைத் தாக்க முற்பட்டிருக்கிறார்கள். உடனடியாக போலீஸார் தலையிட்டு ஜோஜு ஜார்ஜை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

கேரள மாநிலம், கொச்சி வைற்றில பகுதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் காரணமாக சாலையில் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டது. அந்தச் சாலை வழியாக லேண்ட் ரோவர் காரில் மலையாள சினிமா நடிகரும், தயாரிப்பாளருமான ஜோஜு ஜார்ஜ் வந்தார். ``இரண்டு மணி நேரம் ஆகிறது. எதற்குத் தேவையில்லாமல் சாலையை மறிக்கிறீர்கள்" எனப் போராட்டக்காரர்களிடம் கேள்வி எழுப்பினார். இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும் ஜோஜு ஜார்ஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜோஜு ஜார்ஜின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் சிலர், நடிகர் ஜோஜு ஜார்ஜைத் தாக்க முற்பட்டனர். உடனடியாக போலீஸார் தலையிட்டு ஜோஜு ஜார்ஜை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். காங்கிரஸ் போராட்டத்தாலும், நடிகர் ஜோஜு ஜார்ஜின் எதிர்ப்பாலும் அந்த பகுதியே அதகளமானது.

ஜோஜு ஜார்ஜின் கார்
ஜோஜு ஜார்ஜின் கார்

இதுகு றித்து எர்ணாகுளம் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் முஹம்மது சியாஸ் கூறுகையில், ``சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான காரில் வந்த ஜோஜு ஜார்ஜ் மது குடித்திருந்தார். அதனால்தான் பிரச்னை செய்தார். சினிமா பாணியில் இங்கு ஷோ காட்டினார். மகளிர் காங்கிரஸைச் சேர்ந்தவர்களை அவமானப்படுத்த முயன்றார். நாங்கள் முன்கூட்டியே காவல்துறையினரிடமும், அதிகாரிகளிடமும் அனுமதி பெற்றுத்தான் போராட்டம் நடத்தினோம். ஜோஜு ஜார்ஜின் காரில் மதுபாட்டில்களை நாங்கள் பார்த்தோம். அதை போலீஸாரிடமும் காட்டிக்கொடுத்தோம்.

அவரது காரை உடைத்தது காங்கிரஸ்காரர்கள் அல்ல. வழிப்போக்கர்கள் யாராவது காரை உடைத்திருக்கலாம். எங்கள் போராட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்திய நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீது காவல்துறையில் புகார் அளிப்போம்" என்றார். ஆனால் வாகனம் செல்லத் தடை ஏற்பட்டதால் அது பற்றிக் கேட்டதாக நடிகர் ஜோஜு ஜார்ஜ் தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களைப் பார்த்து "என்னிடம் ஏன் கேள்வி கேட்கிறீர்கள். அவர்களிடம் கேளுங்கள்" எனக் கோபமானார்.

நடிகர் ஜோஜு ஜார்ஜ்
நடிகர் ஜோஜு ஜார்ஜ்
`குடும்பப் பிரச்னை; மது போதையில் ரகளை!’- தட்டிக்கேட்ட எஸ்.ஐயைத் தாக்கிய புதுக்கோட்டை காவலர்

ஜோஜு ஜார்ஜை போலீஸார் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற சமயம் போராட்டம் நடத்திய கூட்டத்திலிருந்து ஒருவர் "உன்னிடம் பணம் இருப்பதால் இப்படிப் பேசுகிறாய்" எனச் சத்தமிட்டார். அதற்கு பதிலளித்த ஜோஜு ஜார்ஜ், "நான் உழைத்து சம்பாதித்த பணம்" என பதில் கொடுத்தார். இது பற்றி ஜோஜு ஜார்ஜ் கூறுகையில், "இரண்டு மணி நேரம் மக்கள் கஷ்டப்பட்டார்கள். நான் ஷோ காட்டுவதற்காக இங்கு வரவில்லை. என் வாகனத்துக்கு அருகில் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளியின் வாகனம், மூச்சுத்திணறியபடி மருத்துவமனைக்குச் செல்வதற்காக வந்தவர்கள் எனப் பலர் காத்திருந்தனர்’’ என்றனர் போராட்டக்காரர்களின் புகாரையடுத்து போலீஸார் ஜோஜு ஜார்ஜை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் செய்த பரிசோதனைக்குப் பிறகு, ஜோஜு ஜார்ஜ் மது அருந்தவில்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அதனால்தான் நான் காரிலிருந்து இறங்கிச் சென்று எதற்காக இந்தப் போக்கிரித்தனம் காட்டுகிறீர்கள் எனக் கேட்டது உண்மை. அதற்கு அவர்கள் என்னை நோக்கிக் கெட்டவார்த்தையால் திட்டினர். என் அம்மா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே மது குடிப்பதை விட்டுவிட்டேன். நான் குடித்துவிட்டுப் பேசுவதாகச் சொல்கிறார்கள். பயணியாகவே நான் சென்றேன். நடிகர் என்ற முறையில் நான் அங்கு செல்லவில்லை. இது பற்றி நான் காவல்துறையில் புகார் அளிப்பேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு