Published:Updated:

மகாராஷ்டிரா: 6 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு 7 பேர் போட்டி... சுயேச்சைகளுக்கு வலைவீசும் கட்சிகள்!

உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்நாவிஸ்

மகாராஷ்டிராவில் ஆறு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு ஏழு பேர் போட்டியிடுகின்றனர்.

மகாராஷ்டிரா: 6 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு 7 பேர் போட்டி... சுயேச்சைகளுக்கு வலைவீசும் கட்சிகள்!

மகாராஷ்டிராவில் ஆறு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு ஏழு பேர் போட்டியிடுகின்றனர்.

Published:Updated:
உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்நாவிஸ்

மகாராஷ்டிராவிலிருந்து காலியாகும் ஆறு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தல் ஆளும் மகா விகாஷ் அகாடி கூட்டணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆறு பேர் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற சூழ்நிலையில், ஏழு பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தரப்பில் தலா ஒருவரும், சிவசேனா தரப்பில் இரண்டு பேரும், பா.ஜ.க தரப்பில் மூன்று பேரும் போட்டியிடுகின்றனர். தேசியவாத காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேலும், காங்கிரஸ் தரப்பில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இம்ரான் பிரதாப் என்பவரும் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்நாவிஸ்
உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்நாவிஸ்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இம்ரானை மகாராஷ்டிராவில் நிறுத்துவதற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க சார்பாக நிறுத்தப்பட்டிருக்கும் மூன்றாவது வேட்பாளரின் வெற்றி கேள்விக்குறியாக அமைந்திருக்கிறது. இதில் சிவசேனாவின் வேட்பாளர் தோல்வி அடைந்துவிட்டால், அது பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படும். மகா விகாஷ் அகாடியும், பா.ஜ.க-வும் தங்களது வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் என்று கூறிக்கொண்டிருக்கின்றன.

சட்டமன்றத்தில் சிவசேனாவுக்கு 55 உறுப்பினர்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 53 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு 44 உறுப்பினர்களும் இருக்கின்றனர். இதர கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேரும், சுயேச்சைகள் எட்டுப் பேரும் மகாவிகாஷ் அகாடிக்கு ஆதரவு கொடுக்கின்றனர். இதன் மூலம் இந்தக் கூட்டணிக்கு 168 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. ராஜ்ய சபா தேர்தலில் ஓர் உறுப்பினர் வெற்றிபெற 41.01 வாக்கு தேவை. பா.ஜ.க-வுக்கு சட்டமன்றத்தில் 106 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இது தவிர ஏழு பேரின் ஆதரவும் இருப்பதாகவும் பா.ஜ.க தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

இந்த நிலையில், மகாவிகாஷ் அகாடியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பா.ஜ.க முயல்வதாக சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை பா.ஜ.க மறுத்திருக்கிறது. இதற்கிடையே சிறையில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவாப் மாலிக், அனில் தேஷ்முக் ஆகியோரைத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism