Published:Updated:

`விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சிக்கு இணையானது; கொடியை அகற்றுக!’- நிர்வாகிகளை அதிரவைத்த அதிகாரிகள்

விஜய் மக்கள் இயக்கக் கொடி

`விஜய் மக்கள் இயக்கம் ஓர் அமைப்புதானே தவிர அரசியல் கட்சி கிடையாது ஏன் அகற்ற சொல்றீங்க’ எனக் கேட்டதற்கு `அரசியல் கட்சிக்கு இணையானதுதான் விஜய் மக்கள் இயக்கம். எனவே, கொடியை அகற்ற வேண்டும்’ என்றனர்.

`விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சிக்கு இணையானது; கொடியை அகற்றுக!’- நிர்வாகிகளை அதிரவைத்த அதிகாரிகள்

`விஜய் மக்கள் இயக்கம் ஓர் அமைப்புதானே தவிர அரசியல் கட்சி கிடையாது ஏன் அகற்ற சொல்றீங்க’ எனக் கேட்டதற்கு `அரசியல் கட்சிக்கு இணையானதுதான் விஜய் மக்கள் இயக்கம். எனவே, கொடியை அகற்ற வேண்டும்’ என்றனர்.

Published:Updated:
விஜய் மக்கள் இயக்கக் கொடி

`நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சிக்கு சமமானது. எனவே, அதன் கொடியை அகற்ற வேண்டும்’ என பட்டுக்கோட்டையில் அதிகாரிகள் கூறிய நிலையில், ஆளும் அ.தி.மு.க நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து கொடியை அகற்ற வைத்ததாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டிவருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்த்
விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்த்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன. இதையடுத்து தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அ.தி.மு.க., தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கொடிகளை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி அக்கட்சியினர் கொடிகளை அகற்றினர். அத்துடன் கொடிக்கம்பத்திலுள்ள கட்சியின் நிறம் தெரியாதவாறு துணியைக் கொண்டு மறைத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாளுக்காக அந்தந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வரைந்திருந்த சுவர் ஓவியங்களும் மறைக்கப்பட்டன. இதேபோல் பட்டுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கக் கொடியையும் அதிகாரிகள் அகற்ற வலியுறுத்தினர். அப்போது அதன் நிர்வாகிகள், `விஜய் மக்கள் இயக்கம் ஒன்றும் அரசியல் கட்சி கிடையாது. அப்புறம் ஏன் கொடியை எடுக்கச் சொல்கிறீர்கள்?’ என வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். `விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சிகளுக்கு இணையான இயக்கம். அதனால் கொடியை அகற்றுவதுடன்,கொடிக்கம்பத்தையும் மறைக்க வேண்டும்’ எனக் கூறினர்.

விஜய் மக்கள் இயக்கக் கொடி
விஜய் மக்கள் இயக்கக் கொடி

அதன் பிறகு நிர்வாகிகள், அதிகாரிகள் கூறியதுபோல் கொடியை அகற்றியதுடன், கொடிக்கம்பத்தையும் மறைத்தனர். மேலும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து கொடியை அகற்ற வலியுறுத்தியதாகவும் பேசிவருகின்றனர். இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஆதி.ராஜாராமிடம் பேசினோம், ``இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் மதன் என்பவரின் தம்பியின் திருமணம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.

இதற்காக விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் பட்டுக்கோட்டைக்கு வந்தார். அப்போது அவருக்கு அரசியல் கட்சிகளையே விஞ்சும் அளவுக்குப் பரிவட்டம் கட்டி, பெண்களைத் திரட்டி ஆரத்தி எடுக்க வைத்து, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுடன் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு கொடுத்ததுடன், செங்கோல் ஒன்றையும் நினைவுப்பரிசாக வழங்கினோம்.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்

இதை எதிர்பார்க்காத அண்ணன் புஸ்ஸி ஆனந்த், `எனக்கே இப்படி வரவேற்பு கொடுத்தீங்கன்னா தளபதி விஜய் வந்தா பட்டுக்கோட்டையே தாங்காத அளவுக்கு வரவேற்பு கொடுப்பீங்கபோல’ எனப் பாராட்டிவிட்டு, `உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. உங்க நம்பிக்கை வீண் போகாது’ என வாழ்த்திவிட்டுச் சென்றார். இதைப் பார்த்த அ.தி.மு.க நிர்வாகிகள் பின்னர் நிகழ்ச்சி ஒன்றுக்காக பட்டுக்கோட்டை வந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துக்கு எங்களைப்போலவே வரவேற்பு கொடுத்தனர். அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க., தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எங்களிடம் தேர்தலுக்கு மறைமுக ஆதரவு கேட்டு தொடர்ந்து அணுகிவந்தனர்.

குறிப்பாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலர் எங்ககிட்ட ஆதரவு கேட்டு வந்த நிலையில், நாங்க முடியாது எனக் கூறிவிட்டோம். இதையடுத்து தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அனைத்துக் கட்சிக் கொடிகளும் அகற்றப்பட்டு, கொடிக்கம்பங்கள் மறைக்கப்பட்டன.

மறைக்கப்பட்ட கொடிக்கம்பம்
மறைக்கப்பட்ட கொடிக்கம்பம்

இரண்டு இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைத்து ஏற்றப்பட்டிருந்த மக்கள் இயக்கக் கொடியை பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் அகற்ற வலியுறுத்தினார். `விஜய் மக்கள் இயக்கம் ஓர் அமைப்புதானே தவிர அரசியல் கட்சி கிடையாது. ஏன் அகற்ற சொல்றீங்க...’ எனக் கேட்டதற்கு, `அரசியல் கட்சிக்கு இணையானதுதான் விஜய் மக்கள் இயக்கம். எனவே, கொடியை அகற்ற வேண்டும்’ என்றனர்.

இதன் பின்னணியில் ஆளும் அ.தி.மு.க-வை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் இருந்து கொடுத்த அழுத்தத்தினாலேயே கொடியை அகற்றச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது. பின்னர் நாங்களும் அதிகாரிகள் உத்தரவுப்படி கொடியை அகற்றிவிட்டோம். `சர்கார்’ படம் வெளியான நேரத்தில் சில காட்சிகளை நீக்க வலியுறுத்தி அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர். இதனால் நாங்கள் அ.தி.மு.க-வுக்கு எதிராகச் செயல்படுவோம் என எண்ணி கொடியை அகற்றச் சொல்லியிருக்கலாம். எப்படியிருந்தாலும் அரசு அதிகாரிகளே விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சிகளுக்கு இணையானது எனக் கூறியது எங்களுக்கு பெருமிதத்தைத் தந்திருக்கிறது” என்றார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் கொடிக்கம்பம்
விஜய் மக்கள் இயக்கத்தின் கொடிக்கம்பம்

அ.தி.மு.க தரப்பிலோ, `தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்பவை பொதுவானவை. அதன் அடிப்படையிலேயே விஜய் கொடியை அகற்ற வலியுறுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து கொடுத்திருப்பதால் அ.தி.மு.க அரசுக்கு நல்ல பெயர் இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் பலம் உள்ளிட்ட பல காரணங்களால் எங்கள் வெற்றி உறுதியாகிவிட்ட ஒன்று. விஜய் மக்கள் இயத்தினர் சுய விளம்பரத்துக்காக கொடியை நாங்கள் அகற்ற வைத்ததாகப் பேசிவருவது வேடிக்கையாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.