Published:Updated:

பெரம்பலூர்: `ஆட்சி மாறியும் கிடைக்காத பணம்; வேதனையில் அரசு ஒப்பந்ததாரர்!'

பெரம்பலூர்

உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்?!

பெரம்பலூர்: `ஆட்சி மாறியும் கிடைக்காத பணம்; வேதனையில் அரசு ஒப்பந்ததாரர்!'

உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்?!

Published:Updated:
பெரம்பலூர்

ஊராட்சியில் தனிநபர் கழிப்பறை கட்டும் அரசுத் திட்டத்தில் ஒப்பந்தம் எடுத்து வேலைகளை முடித்தும், நிலுவைத்தொகை ரூ.15 லட்சத்தைக் கொடுக்காமல் கடந்த ஆட்சிக் காலத்திலிருந்து அதிகாரிகள் இழுத்தடித்ததால், கடனாளியாகி வீட்டை விற்கும் நிலைக்கு ஒப்பந்ததாரர் வந்திருக்கும் கொடுமை பெரம்பலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிச்சை பிள்ளை
பிச்சை பிள்ளை

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை மதிக்காமல் தொடர்ந்து தன்னை மோசடி செய்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட உதவிக்காக மதுரை எவிடென்ஸ் அலுவலகம் வந்திருந்த பிச்சை பிள்ளையிடம் பேசினேன். ``வெளிநாட்டுக்குப் போய் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு அதில் சேர்த்த பணத்தைவைத்து ஊரில் தொழில் செய்ய நெனைச்சேன். அப்போதுதான் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள வி.களத்தூர் ஊராட்சியில் அரசு வழங்கும் கழிப்பறை கட்டும் ஒப்பந்தத்தை எடுக்கச் சொல்லி தெரிந்தவர்கள் கூறியதால் அதற்காக ஒப்பந்ததராராகப் பதிவு செய்து, 2014-16 -ல் ஒப்பந்தத்தை வாங்கினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மொத்தம் 650 கழிப்பறைகள். ஒரு கழிப்பறை கட்ட 12,000 ரூபாய். பெரிய லாபமெல்லாம் நிக்காது. அவசரப்பட்டு எடுத்துவிட்டாலும் ஏதோ ஊர்க்காரங்களுக்கு நம்மால் முடிந்த உதவி என்று மனதை தேற்றிக்கொண்டு இந்த வேலையைச் செஞ்சேன். வேலையை முடிக்க முடிக்க யூனியன் அதிகாரிகள் அவ்வப்போது பில்லை பாஸ் செய்து பணம் கொடுப்பார்கள். அதையும் அலைந்து திரிந்துதான் வாங்க வேண்டும். முட்டி மோதி 500 கழிப்பறைகள் கட்டியதற்குப் பணம் பெற்றேன்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை
மதுரை உயர் நீதிமன்றக் கிளை

ஆனால், கடைசியாகக் கட்டிய 150 கழிப்பறைகளுக்குப் பணத்தைத் தராமல் கிடப்பில் போட்டார்கள். வட்டிக்குக் கடன் வாங்கித்தான் இந்த வேலைகளை செஞ்சுகிட்டு இருந்தேன். 150 கழிப்பறைகள் கட்டியதற்கான பணம் வழங்காததால பெரும் கஷ்டத்துக்கு ஆளானேன். பலமுறை பணம் கேட்டு யூனியன் அலுவலகத்துக்கு அலைந்தும் பலனில்லாமல் ஐந்து வருடம் ஓடியது. அதனால்தான் இரண்டு வருடங்களுக்கு முன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனக்குச் சேர வேண்டிய பணத்தை 18 சதவிகித வட்டி போட்டு வழங்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கு பின் 34 கழிப்பறைகளுக்கு மட்டும் பணம் கொடுத்துவிட்டு மீதிப்பணத்தைத் தராமால் இழுத்தடிக்கிறாங்க.

பிச்சை பிள்ளை
பிச்சை பிள்ளை

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் அலட்சியமாக இருக்கும் அதிகாரிங்க ஆட்சி மாறிய பின் மாறியிருப்பாங்கனு நினைச்சு மீண்டும் போய்க் கேட்டால், `அதை விட்டுத் தள்ளுங்க. வேற வேலைகள் தர்றோம்’ என்று அசால்ட்டாகச் சொல்றாங்க. அப்படியென்றால் அந்தப் பணம் என்னவானது? நூறா, இருநூறா விட்டுத்தள்ள... எனக்கு இன்னும் வரவேண்டிய நிலுவைத்தொகை உயர் நீதிமன்றம் விதித்த வட்டியோடு சேர்த்து ரூ 15,00,000. இந்த வேலைகளுக்காகத் தனியாரிடம் நான் கடன் வாங்கியதற்கு ஒரு லட்சத்துக்கு ரூ 24,000 என்ற கணக்குல வட்டி வசூலிக்கிறாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலுவைத்தொகை வந்தாலும் கடனை அடைக்க முடியாது. கூடவே என் வீட்டையும் வித்து கடனை அடைச்சுட்டு நிம்மதியாக இருக்கணும்.

தமிழகத்திலயே பெரம்பலூர் மாவட்டத்தில்தான் ஊரக வளர்ச்சித்துறையில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடக்குது. இதில் என்னைப் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறு ஒப்பந்ததாரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கோம். அரசு உடனே நடவடிக்கை எடுத்து எனக்கு சேரச் வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க வழி செய்யணும்" என்றார்.

எவிடென்ஸ் அலுவலகத்தில்
எவிடென்ஸ் அலுவலகத்தில்

எவிடென்ஸ் கதிர், ``இது போன்ற லாபம் வராத கழிப்பறை கட்டும் ஒப்பந்தங்களைப் பெரிய அளவில் ஒப்பந்த வேலை எடுப்பவர்கள் பார்க்க மாட்டார்கள் என்றும், அவற்றை இவரைப் போன்ற சிறு ஒப்பந்ததாரர்களுக்குத் தள்ளிவிட்டுவிடுவார்கள் என்றும் சொல்கிறார்கள். பெரும்பாலும் ஒப்பந்ததாரர்கள்தான் அதிகாரிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகாரிகள்தான் ஒப்பந்ததாரர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. ஒருசில கழிப்பறைகள் இடிந்து விழுந்துவிட்டதாகவும், அதற்கு பணம் ஒதுக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்கள். அதையும் இவர் ஏற்றுக்கொண்டிருக்கிறர்.

அதற்குப் பின்பும் இழுத்தடிக்கிறார்கள். சிறிய ஒப்பந்த வேலைகளில்கூட ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் 52 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் உதவி இயக்குநர் உட்பட பி.டி.ஓ., ஏ.பி.டி.ஓ, அக்கவுன்டன்ட் ஆகியோர் மீது ஊராட்சித் தலைவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்திவருவதாகவும் சொல்லப்படுகிறது.

பெரம்பலூர்
பெரம்பலூர்

பிச்சை பிள்ளையின் குற்றச்சாட்டு பற்றி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக டெபுடி பிடிஓ சித்தார்த்தனிடம் பேசினோம். ``இது சம்பந்தமான புகார் என்னிடம் வரவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு என்றால் கண்டிப்பாக நிறைவேற்றியிருப்பார்கள். அப்படி இல்லையென்றால் வேறு பிரச்னையாக இருக்கலாம். இருந்தாலும் நான் விசாரிக்கிறேன். அந்த ஒப்பந்ததாரரை என்னை சந்திக்கச் சொல்லுங்கள்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism