கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கொடுக்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கு இதுவரை நிலம் ஒதுக்கித் தரவில்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ.மணக்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா ஏ.மணக்குடி கிராமத்தில் நிலமற்ற ஏழை எளிய 200 குடும்பத்தினருக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் 2007-ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நிலம் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதற்கான நில ஒப்படைப்பு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நிலத்தை பயனாளிகளுக்கு வழங்காமல் இழுத்தடிப்பதாக மனு அளிக்க வந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நம்மிடம் பேசிய பாதிக்கப்பட்ட மக்கள், "எங்கள் ஏ. மனக்குடி ஊராட்சிக்குட்பட்ட சர்வே எண் 211-ல் நிலமற்ற எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்க கருணாநிதி உத்தரவிட்டார். இதற்காக அரசாணை பிறப்பித்தனர். நிலம் உட்பிரிவு செய்யப்பட்டு பட்டா நகல் வழங்கினார்கள். ஆனால், நிலத்தை இதுவரை அளந்து கொடுக்காமலும், அது கணினியில் பதிவேற்றம் செய்யப்படாமலும் உள்ளது. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் தலையீட்டால் அரசாணை போடப்பட்டு எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை சிப்காட் மற்றும் தனியார் நிறுவனத்துக்கு வழங்க முயற்சி செய்தார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தந்தை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது எங்களுக்கு வழங்கிய நிலத்தை, மகனான மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள இந்த நேரத்திலாவது

பட்டாதாரர்களுக்கு முறையாக அளந்து, கணினி பத்து ஒன்னில் பதிவேற்றம் செய்து எங்கள் நீண்ட நாள் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்" என்றனர்.