Published:Updated:

தஞ்சாவூர் : ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றும் பணி; மாநகராட்சி கமிஷனருடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்!

கமிஷனருடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்
கமிஷனருடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்

அதிரடிக்குப் பெயர்போன கமிஷனர், கடைகளை அகற்றினால்தான் புதிய சாலைகள் அமைத்து புதுப் பேருந்து நிலையம் திறக்க முடியும் எனக் கூறிவருகிறார். இதனால் திமுக நிர்வாகிகள் கமிஷனருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையோரக் கடைகளையும் ஆக்கிரமிப்புகளையும் அக்கற்றுவதற்கு மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுத்த நிலையில், கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க நிர்வாகிகளும் வியாபாரிகளும் கமிஷனருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடைக்குள் திமுக எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகம்
கடைக்குள் திமுக எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகம்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.14.65 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டு அதன் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் திறக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் பஸ் நிலையத்தைச் சுற்றிலும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பேருந்து நிலையத்துக்கு மேற்குப் பகுதியில், சாலையோரத்தில் டிபன் கடை, பெட்டிக்கடை, பழக்கடைகள் என 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பேருந்துகள் அந்த வழியாகச் செல்வதற்கு சிரமம் ஏற்படுவதால் அந்தக் கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதன்படி கடைகளை அகற்றுவதற்காக நேற்று மாநகராட்சி ஊழியர்கள் சென்றனர்.

தஞ்சாவூர் பேருந்து நிலையம் பகுதியில்
தஞ்சாவூர் பேருந்து நிலையம் பகுதியில்
தஞ்சாவூர்: வைத்திலிங்கத்தின் மீது அதிருப்தி; திமுகவில் இணையவுள்ள அதிமுக முன்னாள் எம்.பி?!

இந்தத் தகவல் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகத்துக்கு சென்றுள்ளது. உடனே அந்த இடத்துக்கு வந்த நீலமேகம், `கடைகள் இடிக்கக் கூடாது’ எனக் கூறிவிட்டு, `கமிஷனரை வரச் சொல்லுங்க. அவர்கிட்ட பேசுறேன்’ எனக் கூறிவிட்டு, ஒரு கடைக்குள் போய் உட்கார்ந்துவிட்டார். ஆனால் கமிஷனர் வேறு பணியில் இருந்ததால் வரவில்லை. மேலும் `இந்தக் கடைகள் 40 வருடங்களாக உள்ளன. இவற்றை இடிக்காமல் பேசித் தீர்வுகாண வேண்டும். இல்லையென்றால் முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்’ என நீலமேகம் தெரிவித்தார். இதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து அனைவரும் சென்றுவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், இன்று காலை கடைகளை இடிப்பதற்காக ஜே.சி.பி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. மாநகராட்சி கமிஷனர் சரவணக்குமாரும் ஊழியர்களும் அந்த இடத்துக்கு வந்தனர். கடைகளை அகற்றும் பணி தொடங்கியது. இதையறிந்த திமுக நிர்வாகிகளும், டி.கே.ஜி.நீலமேகத்தின் ஆதரவாளர்களும் அங்கு திரண்டனர். பின்னர் கடைகளை அகற்றுவதற்கான பணி தொடங்கவிருந்தது.

ஆனால் கடைகளை அகற்ற விடமாட்டோமென தி.மு.க மாநகர துணைச் செயலாளர் நீலகண்டன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கமிஷனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சிலரிடம் பேசினோம். ``ஸ்மார்ட் சிட்டி பணிக்காக பேருந்து நிலையத்துக்கு உள்ளே இருந்த கடைகளும் பேருந்து நிலைய கட்டடமும் இடிக்கப்பட்டன. தற்போது பேருந்து நிலையத்தின் பணிகள் முடிந்து திறக்கவிருக்கும் நிலையில் மேற்கு பகுதியிலுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம் தரப்பினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், அதிரடிக்கு பெயர் போன கமிஷனர் கடைகளை அகற்றினால்தான் புதிய சாலைகளை அமைத்து, புதுப் பேருந்து நிலையத்தைத் திறக்க முடியும் எனக் கூறிவருகிறார். வியாபாரிகளோ, `எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்’ எனக் கூறுகின்றனர். இதையடுத்து கடைகளை போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாமல் ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும் தற்காலிகமாக நடத்துங்கள் என கமிஷனர் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். மேலும் தற்காலிகமாக, கடைகளை காலி செய்யும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு