Published:Updated:

உதயநிதி பிரசாரத்தில்.. `நகைக்கடன் தள்ளுபடி ஆகல; பேரப்பிள்ளைகள் படிக்க உதவுங்க’ -டென்ஷனான நிர்வாகிகள்

தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில் உதயநிதி பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், ``நான் நகை கடன் வாங்கியிருந்தேன். எனக்கு தள்ளுபடி ஆகல” என கேட்க உதயநிதி, `எந்த பேங்க்ல எத்தனை பேர்ல வச்சீங்ங்கனு’ கேட்டார்.

உதயநிதி பிரசாரத்தில்.. `நகைக்கடன் தள்ளுபடி ஆகல; பேரப்பிள்ளைகள் படிக்க உதவுங்க’ -டென்ஷனான நிர்வாகிகள்

தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில் உதயநிதி பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், ``நான் நகை கடன் வாங்கியிருந்தேன். எனக்கு தள்ளுபடி ஆகல” என கேட்க உதயநிதி, `எந்த பேங்க்ல எத்தனை பேர்ல வச்சீங்ங்கனு’ கேட்டார்.

Published:Updated:
தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். இதில் நகை கடன் தள்ளுபடி குறித்து பெண் ஒருவர் உதயநிதியிடம் கேள்வி எழுப்பினார். மற்றொரு பெண் பேரப்பிள்ளைகளை வளர்க்க நிதி உதவி கேட்டார். இதனால் ஏற்பட்ட சலசலப்பில் சட்டென பிரசாரத்தை முடித்து கொண்டு உதயநிதி கிளம்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மா நகராட்சி தேர்தல் உதயநிதி பிரச்சாரம்
தஞ்சாவூர் மா நகராட்சி தேர்தல் உதயநிதி பிரச்சாரம்

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு இளைஞரணி செயலாளரான உயதநிதி ஸ்டாலின் கல்லுக்குளம், கீழவாசல் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். முதல் பாயின்டாக கல்லுக்குளம் பகுதியில் காலை எட்டு மணிக்கு பிரசாரம் தொடங்கும் என நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்காக 25 வார்டுகளுடைய வேட்பாளர்களும் எட்டு மணிக்கு முன்னதாகவே வரவழைக்கப்பட்டு அவர்களுக்காக அமைக்கப்பட்ட மேடையில் நிற்க வைக்கப்பட்டனர். அந்த இடத்துக்கு அருகே முக்கியமான பள்ளிகள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதில் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

தஞ்சாவூர் மா நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்
தஞ்சாவூர் மா நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்

உதயநிதி வருவது தாமதமாகி கொண்டே சென்றதால், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக 51வது வார்டில் போட்டியிடும் நிறைமாத கர்ப்பிணியான டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் நின்று கொண்டே இருந்ததில் சோர்வடைந்தனர். சரியாக 10.35 மணிக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், `எல்லோரும் தடுப்பூசி போட்டாச்சா?’ என கேட்டு உற்சாகமாக தனது பேச்சை தொடங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``கரூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களில் பிரசாரத்தை முடிச்சுட்டு நேற்று நள்ளிரவு தான் தஞ்சாவூர் வந்தேன். உங்ககிட்ட வாக்கு கேட்க வேண்டிய அவசியமில்லை. எம்.எல்.ஏ தேர்தலில் 90 சதவீத வெற்றி கொடுத்தது தஞ்சை மாவட்டம். இந்த தேர்தலிலும் பெரும் வெற்றியை தரும். இக்கட்டான சூழ்நிலையில் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று எட்டு மாதங்கள் ஆகிறது. ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் 10 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தோம்.

தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி
தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி

கொரோனா வார்டுக்குள்ளேயே போன ஓரே முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே. ஸ்டாலினை `நம்பர் ஒன் சிஎம்’ என இந்தியா முழுவதும் புகழ்கின்றனர். மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, நம்மை காக்கும் 48 என்கிற இலவச மருத்துவம், ஒரு லட்சம் விவசாயிகளுக்கான மின் இணைப்பு, சுய உதவிக்குழு கடன், நகை கடன் தள்ளுபடி என பல வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம்” என்றார்.

அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், ``நான் நகை கடன் வாங்கியிருந்தேன். எனக்கு தள்ளுபடி ஆகல” என உதயநிதியிடம் கேட்டார். அதற்கு அவர் சிரித்து கொண்டே, ``எந்த பேங்க்ல எத்தனை பேர்ல வச்சீங்கனு?” கேட்டதுடன், `அந்த சீட்டு இருந்தா கொடுங்கனு’ கேட்க, அந்த பெண் `எடுத்துட்டு வரலை’ என கூறினார். ``என்னம்மா குறை சொல்றீங்க. சீட்ட எடுத்துக்கிட்டு வர வேணாமா? பேர் என்ன?” என்றார். அந்த பெண் `தங்கம்’ என சொன்னதற்கு, `தங்கமே கடன் வாங்கியிருக்கு’ என கமெண்ட் செய்ய கூட்டத்தில் ஒரே சிரிப்பு.

உதயநிதியிடம் உதவி கேட்ட பெண்
உதயநிதியிடம் உதவி கேட்ட பெண்

தொடர்ந்து, ``எட்டு மாசத்தில் திமுக செய்திருக்கும் சாதனைகளை மக்களிடத்தில் நீங்க தான் கொண்டு போய் சேர்க்க வேண்டும் செய்வீங்களா?” என கேட்டார். ``எதிர்க்கட்சித்தலைவரான எடப்பாடி பழனிசாமி என்னை காணவில்லை என பிரசாரத்தில் கூறுகிறார். என் மீது அவருக்கு எவ்வளவு பாசம்?” என பேசிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்தார் மற்றொரு பெண்.

அவர், ``என் பேரு கவிதா, என்னோட சொந்த ஊர் திருக்குவளை. பெற்றோர் இல்லாததால் மூன்று பேரப்பிள்ளைகளை வளர்த்து வருகிறேன். அவங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டமுடிய வில்லை. பள்ளியில் ஸ்கூல் பீஸ் கட்ட சொல்லி அழுத்தம் கொடுக்குறாங்க. நான் ரொம்ப கஷ்டப்படுறேன். மூன்று பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும். எனக்கு நிதி உதவி செய்யுங்கனு” என கேட்க, ``எங்க உங்க எம்.எல்.ஏ, அவர்கிட்ட சொல்லுங்கனு” என எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகத்தை தேடினார். அவர் அங்கு இல்லாததால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற நிர்வாகிகள் அதனை சமாளித்தனர்.

கவிதாவை சூழ்ந்து கொண்ட திமுக நிர்வாகிகள்
கவிதாவை சூழ்ந்து கொண்ட திமுக நிர்வாகிகள்

இதனால் சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சட்டென்று தனது பேச்சை முடித்து கொண்டு அடுத்த பாயின்டுக்கு கிளம்பினார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினிடம் பேசிய பெண்ணிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயல, திமுக நிர்வாகிகள் சிலர் அந்த பெண்ணை பேட்டி எடுக்க முடியாத வகையில் மறைத்தபடி வலுக்கட்டாயமாக அழைத்து கொண்டு சென்று ஒரு கடைக்குள் உட்கார வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதுடன் அனைத்து மீடியாவும் அந்த கடை முன் நிற்க வேறு வழியில்லாமல் திமுகவினர் அந்த பெண்ணை வெளியே அனுப்பினர்.

வெளியே வந்த கவிதா, ``நான் வண்டிக்காரத்தெருவில் இருக்கிறேன். பெற்றோர் இல்லாத பேரப்பிள்ளைகளை வளர்த்து படிக்க வைக்கிறேன். அவங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டமுடிய வில்லை. உதவி செய்யுங்கனு உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டேன், வேற எதுவும் கேக்கலை. அதுக்காக என்னை அழைத்து கொண்டு சென்றதாக” தெரிவித்தார். இதனை செய்தியாக சேகரிக்க முயன்ற செய்தியாளர்களிடம் திமுகவினர் கோபப்பட்டதால் சுமார் கால் மணி நேரத்திற்கு மேலாக அந்த இடமே பரபரப்புடன் காணப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism