Published:Updated:

`பூசணித் தோட்டத்தையே சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்!'- அப்பாவுவை சாடும் இன்பதுரை #TNPSC

இன்பதுரை எம்.எல்.ஏ
இன்பதுரை எம்.எல்.ஏ

`டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.க-வுக்குத் தொடர்பிருக்கிறது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐயப்பன் என்பவர் தி.மு.க-வில் மாணவரணி பொறுப்பில் இருக்கிறார்' - இன்பதுரை

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க சார்பாக அப்பாவு, அ.தி.மு.க சார்பாக இன்பதுரை போட்டியிட்டனர். இதில், 250-க்கும் அதிகமான தபால் வாக்குகளில் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கையெழுத்திட்டிருந்ததால் அவை செல்லாத வாக்குகளாகக் கருதப்பட்டன. 

`அய்யாதுரை' ஸ்டாலின் இனி 'அய்யோ துரை' ஆவார்!'- கொதிக்கும் ராதாபுரம் இன்பதுரை

வாக்கு எண்ணிக்கை முடிவில் இன்பதுரை 47 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட அப்பாவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் தபால் வாக்குகள் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அதன் முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ராதாபுரம் எம்.எல்.ஏ-வான இன்பதுரையை குற்றம் சாட்டியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இன்பதுரை எம்.எல்.ஏ, ``டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.க-வுக்குத் தொடர்பிருக்கிறது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐயப்பன் என்பவர் தி.மு.க-வில் மாணவரணி பொறுப்பில் இருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசும் இன்பதுரை
செய்தியாளர்களிடம் பேசும் இன்பதுரை

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாருக்குப் பதிலளித்த அப்பாவு, தனக்கும் ஐயப்பனுக்கும் தொடர்பில்லை என மறுத்திருக்கலாம். அல்லது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாம். ஆனால், பதற்றத்தின் காரணமாக அவர், அமைச்சர் ஜெயக்குமார் குறித்து தனிமனிதத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

கைது செய்யப்பட்டுள்ள ஐயப்பனுக்கும் அப்பாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. அவரை அப்பாவு பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது அப்பாவு பணியாற்றிய படலையார்குளம் கிராமத்தில் ஐயப்பனும் தேர்தல் வேலை செய்திருக்கிறார். அதனால் அவரைத் தெரியாது என்று சொல்வது பொய்யானது. 

`நான், உங்களைப் போல் இல்லை ஜெயக்குமார்!' -டிஎன்பிஎஸ்சி முறைகேடு புகாரால் கொதித்த அப்பாவு
டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.க-வைச் சேர்ந்த அப்பாவு-க்கு நெருக்கமான ஐயப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்பதுரை எம்.எல்.ஏ

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க சார்பாக கவுன்சிலராக போட்டியிட விருப்பமனு கொடுத்திருக்கிறார். அதை அப்பாவு மறுக்க முடியுமா? அவர் தனக்கும் ஐயப்பனுடன் தொடர்பு இல்லை என்று சொல்வது, சோற்றில் பூசணி தோட்டத்தையே மறைப்பதற்கு சமம்.

அப்பாவு எப்படியாவது சட்டமன்ற உறுப்பினராகிவிட வேண்டும் என்கிற விதத்தில் செயல்படுகிறார். அதனால் டி.என்.பி.எஸ்.சி-க்குச் சிறிதும் சம்பந்தம் இல்லாத வகையில் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் தேர்தல் வழக்கைச் சொல்லி விஷயத்தை திசைதிருப்பியுள்ளார். 

பேட்டியளிக்கும் இன்பதுரை
பேட்டியளிக்கும் இன்பதுரை

அப்பாவு, சம்பந்தம் இல்லாமல் பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். அவரது கோபம் என்பது செல்லாத காசின் பொல்லாத கோபம்.. அவருக்கு டி.என்.பி.எஸ்.சி மோசடியில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இருப்பதால் அவரை அழைத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் நீதிமன்றம் செல்வேன்.

நீதிமன்ற விவகாரத்தைப் பொதுவெளியில் சொல்லக் கூடாது என்கிற நியதியை மீறி அப்பாவு பேசியுள்ளார். அவரைப் போல நான் பேசமாட்டேன். அவருக்கு இப்போது எந்தப் பொறுப்பும் இல்லை. அதனால் எப்படி வேண்டுமென்றாலும் பேசாலாம் என்பதுபோலப் பேசுகிறார்’’ என்றார் காட்டமாக.

அடுத்த கட்டுரைக்கு